துன்பவியல் நாடகம்.


இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். நாக்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுவாமிஇவ்வாறுகூறியுள்ளார்.எல்லோரும் வடக்கே போகும் போது தெற்கேதான் போக வேன்டும் எனக்கூறும் அதி புத்திசாலி சுவாமி ஒன்றும் இதுவரை வாயை திறக்க வில்லையெ என்று எண்ணிய போது தனது திருவாய் மலர்ந்துள்ளார்,
அவர் அடுத்ததாகக் கூறுவது" அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதன் மூலம், அமெரிக்கா செய்து வரும் அராஜக செயல்களுக்கு ஆதரவு அளித்தது போல் ஆகும். இது, இந்தியாவை, அமெரிக்காவிடம் மேலும் அடிமைப்படுத்தும் நிகழ்வாக மாறும். போர்க்குற்றம் புரிந்ததற்காக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் போன்று, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விமானத் தாக்குதல் நடத்தி, பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கி வரும் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுமா?" என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

 இப்படி கேள்வி கேட்கும் சுவாமி எப்படி பட்ட அமெரிக்கா விசுவாசி.அமெரிக்கா கருத்துக்களின் ஆமாம் சாமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான்.அவர் 2-ஜி யில் இருந்து அனைத்து விடயங்களிலும் அமெரிக்க சி.ஐ.ஏ .தரும் ஆதாரங்களைத்தான் கையாண்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்றும் தெரியும்.அப்படி பட்டவர் இப்படி அமெரிக்கா எதிரானவர் போல் கருத்து கூறியுள்ளாரே?
இதற்கு காரணம் அமெரிக்க எதிர்ப்பு அல்ல.
தமிழர்கள் மீதான எதிர்ப்பு-இலங்கைத்தமிழர்கள் மீதான வெறுப்பு- விடுதலைப்புலிகள் மீதான கடுப்பு.
இவைதான் இவ்வாறு சு.சுவாமியை கருத்து கூறவைத்துள்ளது.
 ராஜபக்‌ஷேக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று உருப்படியான கருத்து கூறிய கருத்து கந்தசாமியின் மன வெறுப்பு வெளியாகி விட்டது.
ஆனால் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்தது ஒன்றும் ஈழத்தமிழர் மீதான பரிதாப எண்ணத்தின் வெளிபாடல்ல.
இலங்கையுடன் ரஷ்யா அல்லது சீனா இணைந்து போவது தனது இந்துமகாசமுத்திர ஆக்கிரமிப்பு படை நிறுத்தலுக்கு ஆபத்து என்ற உண்மையான உணர்வே காரணம்.
தன்னுடன் மன்னார் பகுதி பெட்ரோல் வள்த்தை பங்கு போடாமல் சீனா,ரஷ்யாவுடன் ராஜபக்‌ஷே ஒப்பந்தம் போட்டதால் ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான்.இலங்கைக்கு எதிரான தீர்மானம்.
இது ஐ.நாவில் நிறைவேறப்போவது இல்லை என்பதும் அதற்கு தெரியும் .ஆனால் அப்படி தீர்மானம் கொண்டுவருவதன் மூலம் தன்னை மனிதபிமானமிக்க பெரியண்ணனாகக் காட்டிக்கொள்கிறது.இத்தீர்மானத்தை
நிறைவேறும் ஆபத்திருந்தால் தனது வீட்டோ வாக்கு மூலம் ரஷ்யா அல்லது சீனா காலாவதியாக்கிவிடும் என்ற தைரியம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல.இலங்கைக்கும் உண்டு.
இவை எல்லாம் போக சு.சுவாமி தனது கருத்தை இவ்வளவு வேகமாகக் கூற மன்மோகன் சிங் அரசு எப்படியும் இத்தீர்மானத்தை ஆதரிக்காது என்ற நம்பிக்கைதான்.
அவருக்கு இலங்கையின் போர் குற்றங்களில் சோனியாவின் அரசுக்கும் பங்குண்டு .இத்தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில் ராஜபக்‌ஷேக்கு கொடுத்த முழு ஒத்துழைப்பும் உலக அரங்கில் பகிரங்கம் வெளியாகிவிடும் .என்ற பயம் இருக்கும் என்ற உண்மை தெரியும் அல்லவா?
இங்குள்ள தமிழின அரசியல் வாதிகள் அனைவருக்கும் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்ற உண்மை நன்றாக தெரியும்.
இருந்தும் மக்களவை-மாநிலங்கவையில் கூக்குரல் போடுவது.தமிழர்கள் மீது மிளகாய் அரைக்கும் அரசியல் விளையாட்டில் இது ஒரு அங்கம் என்பதால்தான்.

எப்படியோ ராஜபக்‌ஷே வையும் ஈழத்தமிழர்களையும் வைத்து ஒரு நாடகம் உலக அரங்கில் நடத்தப்படுகிறது.ஆனால் அது தமிழர்களைப்பொறுத்தவரையில் ஒரு துன்பவியல் நாடகமாக இருப்பதுதான் வருத்தத்தைத் தருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?