வரவில்லா செலவு,



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்ற பெயரில் காங்கிரசின் மன்மோகன்சிங் 2வது முறையாக ஆட்சிக்கு வந்தபின், சமர்ப்பித்துள்ள மூன்றாவது பட்ஜெட் புதிய வடிவங்களில் மக்கள் மீது பொரு ளாதாரத் தாக்குதல் களை தொடுத் துள்ளது.

புதிதாக 45,940 கோடி ரூபாய்க்கு மறைமுக வரிகள் மூலம் மக்கள் தலை யில் ஏற்றி, ரூ.4500 கோடி நேரடி வரி களைக் குறைத்து, முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி . விலைவாசியைக் கட்டுப் படுத்துவதும், வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதும் ஆகிய இரண்டு லட்சியங்களை நிறைவேற்றுவோம் என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் மறைமுக வரிகள் ஏற்றம் வருகிற மாதங் களில் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி, மக்கள் வாழ்க்கை மீது பெருஞ்சுமைகளை ஏற்றும்.


எரிபொருட்களுக்கான மானியம் ரூ.25,000 கோடிக்கு வெட்டப்பட்டுள் ளது.கொஞ்சம் கூட சிந்தனையில்லா செயல்.எரி பொருட்கள் பணக்காரர்கள் மட்டுமின்றி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கும் தேவையானது.அதில் கை வைப்பது சரியான செயலே அல்ல. கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகள், தற்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள 6,000 கோடி ரூபாய் உர மானிய வெட்டினால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள். நிதிநெருக் கடியை சமாளிப்பது என்ற போர்வையில் ஏழை-எளிய மக்களுக்கு நிவாரணமாக உள்ள மானியங்களை வெட்டிச் சுருக் கும் மத்திய அரசு 2011-12 ஆம் ஆண் டில் வரிச்சலுகையாக ரூ.50,000 கோடிக்கு மேல் பெரிய நிறுவனங் களுக்கு வாரி வழங்கியுள்ளது.
தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகிய வற்றுக்கு எந்தவிதமான கூடுதல் முதலீடுகளும் அரசுத்தரப்பிலிருந்து செய்யப் போவதில்லை. விவசாயி களுக்கு வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் மூலம் கூடுதல் கடன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை “லாப நோக்கே குறி” என்று செயல்படக் கூடிய அந்த நிறுவனங்கள் கண்டுகொள்ளப் போவ தில்லை என்பதும் தெளிவு.

17 சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் சேவை வரிக்கு உட்படுத்தப்பட்டு, சேவை வரி விகிதம் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட் டுள்ளது. இதுவும் மேலும் சுமையை சாதாரண மக்கள் மீது ஏற்றும். இந்த ஆண்டு பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ.30,000 கோடி திரட்டப்படும் என அரசின் நிதிநிலை அறிக்கை தெரி விக்கிறது. இது தேசத்தின் பொதுச்சொத் துக்களை தனியார் கைகளுக்கு மாற்றும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை ஆகும்.கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு போதிய முதலீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே தொழிலாளர் களின் வைப்பு நிதிக்கான வட்டிவிகி தம் 8.25 சதவிகிதம் ஆக (1.25 சதவிகிதம் குறைவு) குறைக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளி வர்க்கத்தின் மீதான அப் பட்டமான தாக்குதல் ஆகும். தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைப் போலவே தேவையை விட குறைவாக ஒதுக்கப்பட்டுள்ள தால் இந்த ஆண்டும் அவர்களுக்கான சிறப்பு நலத் திட்டங்களை அமலாக்க முடியாது.


மாநிலத்தில் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு ஆகியவற்றுடன் ரயில் கட் டண உயர்வுகளும் தமிழக மக்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றியிருக்கிற பின்ன ணியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கை புதிய புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. அர சாங்கத்தின் நவீன தாராளமயக் கொள் கைகளின் திசைவழியின் தொடர்ச்சியா கவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது.உடனடியாக மறைமுக வரிகள் உயர்வை முழுவதுமாக நீக்க பிரனாப் முகர்ஜி தனது வரவு செலவு திட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.


___________________________________________________
மருந்து தயாரிப்பு-அரசின் புதிய கொள்கை முடிவு,
புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்து ஒன்றை இந்தியாவிலேயே தயாரித்து குறைந்த விலையில் விற்பதற்கான அனுமதியை இந்திய அரசு செவ்வாய்க்கிழமை அளித்திருக்கிறது.
நெக்ஸாவர் என்கிற புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் நிறுவனத்திடம் இருக்கிறது. இனிமேல் அந்த மருந்தின் பொதுமையான வடிவத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு இந்தியாவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேசமயம், இந்த மருந்தின் விற்பனையில் வரும் லாபத்தொகையின் ஆறு சதவீத தொகையை, இந்த மருந்துக்கான சர்வதேச காப்புரிமை பெற்றிருக்கும் பேயர் நிறுவனத்திற்கு காப்புரிமைத்தொகையாக இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த குறிப்பிட்ட மருந்தின் 120 மாத்திரைகளை இந்தியாவில் வாங்கவேண்டுமானால் சுமார் இரண்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும்போது இதே அளவு மாத்திரைகள் வெறும் ஒன்பதாயிரத்துக்கும் குறைவாக கிடைக்கும்.

இந்த பெருமளவிலான விலைக்குறைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்திய நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று ஒரு பகுதி மருத்துவர்களும் சுகாதார செயற்பாட்டாளர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.
அதேசமயம், இந்திய அரசின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றமளிப்பதாக இந்த மருந்துக்கான காப்புரிமை பெற்றிருக்கும் பேயர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காப்புரிமை பிரிச்சினைகள் இல்லாத பொதுமை மருந்துகளை தயாரித்து குறைவான விலைக்கு விற்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. ஆனால் காப்புரிமைக்குட்பட்ட மருந்தை தயாரிக்கும் உரிமையை, இந்திய அரசு இந்திய மருத்துவ நிறுவனத்திற்கு அளிப்பது இதுவே முதல்முறை. இந்திய அரசின் புதிய காப்புரிமை சட்டத்தின் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு தேவைப்படும் அளவுக்கோ, அல்லது கட்டுப்படியாகும் விலையிலோ இந்த மருந்தை அளிப்பதில் பேயர் நிறுவனம் தவறிவிட்டதாக இந்திய காப்புரிமை அலுவலகம் தனது அனுமதி உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

இந்திய அரசின் இந்த முடிவை பொதுசுகாதாரத்திற்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்றிருக்கிறார்கள். இந்த மருந்தைபோல உயிர்காக்கும் மற்ற மருந்துகளையும் குறைவான விலையில் கிடைக்கச்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பேயர் நிறுவனம் இந்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆலோசித்துவருவதாக தெரிவித்திருக்கும் நிலையில் இந்த முடிவு நடைமுறைக்கு வருமா என்கிற சந்தேகமும் சிலரால் எழுப்பப்படுகிறது.
எயிட்ஸ் மருந்துகள் உள்ளிட்ட பலவிதமான பொதுமை மருந்துகளை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியா, மருந்து காப்புரிமைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சர்வதேச மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன
இந்த பின்னணியில், இந்திய அரசின் இன்றைய முடிவு புற்று நோயாளிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்கிறார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் சங்கர் ஸ்ரீனிவாசன். அதேசமயம், சர்வதேச அளவில் இது பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
____________________________________________________________________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?