ஐ.நா வில் நிறைவேறிய தீர்மானம்

லங்கை போர்க்காலத்தில் ஈழத்தமிழர்களை கும்பல்,கும்பல்களாகக் கொலை செய்தசம்பவங்களின்போதும்,அதன்பின் நடந்தமனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது.
மனித உரிமை குழுவில் மொத்தம்உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன.
அமெரிக்காவின்தீர்மானத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்று உலக நாடுகள் முழுவதும் பேச்சுவார்த்தைகளிலும்,கெஞ்சலிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்தபல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்,
ஒரு தீர்மானம் நிறைவேறத் தேவையான குறைந்தபட்ச 24 நாடுகள் வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாகக் கிடைத்து நிறைவேறியுள்ளது.
வாக்குகள் விபரம்:
 ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தியா மட்டும் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது. சீனா, வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகள் இலங்கையை ஆதரித்திருக்கின்றன.மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை தீர்மானத்திறகு ஆதரவாக வாக்களித்தும், எதிராக வாக்களித்தும், நடுநிலை எனவும் இருந்துவிட்டன.
லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை கியூபாவும் ஈக்குவடோரும் தவிர மற்ற நாடுகள் எல்லாமே தீர்மானத்தை ஆதரித்துள்ளன.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ரஷ்யா மட்டும்தான் இலங்கைக்கு ஆதரவளித்திருக்கிறது. 
மேற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே போர்க்காலச் சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என நிலைப்பாட்டையே ஆதரித்துள்ளன.

ஆனால் பொதுவாக முஸ்லிம் நாடுகள் அனைத்துமே அண்மையில் கடாபிக்குப் பின்னர் ஆட்சி மாறிய லிபியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாமே அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன, 
இவற்றில் அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ள சவூதி,கத்தார்,ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளும் தீர்மானத்தைஆதரிக்கவில்லை.
இறுதிக்கட்டத்தில் முஸ்லிம் நாடுகளை தனது நாட்டில் உள்ள முஸ்லீம அமைச்சர்களை வைத்து ஆதரவை இலங்கை திரட்டியது.அரபு நாடுகளில் விருந்து வைத்து ஆட்களைப்பிடித்தது ராஜபக்‌ஷேக்கு உதவியுள்ளது.
.இலங்கையின் இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஐநா நிபுணர்குழு அவற்றை ஆராயும் விதத்தில் அறிக்கை சமர்பித்திருந்தது. அதற்கு இலங்கைத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.
இந்த நிலையில்தான் அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இலங்கையிடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டி அந்த பரிந்துரைகளை நடைமுறைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் குழுவிடம்  முன்வைத்துள்ளது.

தீர்மானம்

-----------------
  • இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மையும் உறுதிசெய்யப்பட வேண்டும் என அமெரிக்கா தீர்மானத்தில் சுட்டிக்காட்டுகின்றது.
  • இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்கு இருந்த கால அவகாசத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது அமெரிக்காவின் வாதம். இதற்காக கடந்த காலங்களில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா பல முயற்சிகளை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டுகின்றது.
  • ஆனால், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முறையான அமுலாக்கத் திட்டம் இலங்கை அரசிடம் இல்லை என்ற அடிப்படையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்காத போர்க்காலச் சம்பவங்களுக்கான போறுப்பேற்கும் தன்மை குறித்த விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலுமே, தாங்கள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் கவுன்சிலுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • அதேநேரம், நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஆணையரின் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும்படியும் இந்தத் தீர்மானம் மூலம் அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.
  • சமத்துவம், சுயமரியாதை, நீதியை வழங்கக்கூடிய நிலையான அமைதியை இலங்கையில் ஏற்படுத்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம் என்றும் அமெரிக்க பிரதிநிதி ஜெனீவாவில் சுட்டிக்காட்டி பேசினார்.
  • இலங்கையில் உள்ள தமிழர்கள் பலர் இத்தீர்மானம் நிறைவேறிவிடுமோ என்ற பயத்தில் இருந்தனர்.அவர்கள் பயத்துக்கு காரணம் ."இத்தீர்மானம் நிறைவேறினால் உங்கள் கதி அவ்ளோதான்"
  • என்று சிங்கள வெறி காடையர்களாலும்,காவல்துறையினராலும்,ராணுவத்தாலும் மிரட்டப்பட்டிருந்ததுதான்.ஆனால் இன்று தீர்மானம் நிறைவேறி விட்டது.அவர்கள பாதுகாப்பையும் அமெரிக்க அரசு கண்காணிக்க வேண்டும்.
  • தீர்மானம் வெற்றிக்குப்பின் இலங்கைவெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    “அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 நாடுகள் இலங்கைக்காக வாக்களித்தமை எமக்கு பெரும் திருப்தியளிக்கிறது. அந்நாடுகளுக்கு எமது நன்றியையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
    வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
    15 நாடுகள் எதிர்த்மை மற்றும் 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாத நிலையில் இறுதிமுடிவானது 47 அங்கத்தவர்களைக்கொண்ட மனித உரிமைகள் பேரவையில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. 24 நாடுகள் அதை ஆதரித்தன. இவற்றுக்கிடையிலான வித்தியாசம் இந்தளவு குறைவானதாகும்.
    இந்த அனுபவத்தில் மிக கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்களிப்பானது குறித்த விவகாரத்தின் தகுதி அடிப்படையில் அல்லாமல், தீர்மானத்துடனோ அல்லது தீர்மானம் தொடர்பான நாட்டின் சிறந்த நலன்களுடன்  சம்பந்தமில்லாத தந்திரோபாய கூட்டணிகள் மற்றும் ஏனைய நாடுகளின் உள்ளூர் அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் இடம்பெற்றதாகும். இது மனித உரிமைகள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கங்களுக்கு முரணானது.
    ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட முடிவதற்கான ஆபத்தான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படும் ஆபத்து குறித்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பல நாடுகள் உணர்ந்திருந்தன."
    என்று அவர் கூறியுள்ளார்.
  • ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?