கொடுமையின் முகம்


ஈழ மண்ணில் நடந்தது குற்றம்! 

போராளிகளின் உடையில் மக்களுடன் நின்றனர்

அவர்களே, இராணுவத்துடன் நின்று சோதனையும் செய்தனர்! 

நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்!

”ஈழத்தில் 2004-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் மீதான இறுதிப்போர் தொடங்கப்பட்டு விட்டது.இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தீவுப் பிரதேசமாகத்தான் வன்னி மண் இருந்தது.சமா​தான காலம் என்று சொல்லப்பட்ட காலத்திலும், அத்தியாவ​சியமான உணவுப் பொருட்கள், மருந்துகள் வன்னிக்குள் கொண்டுபோக முடியாமல் கடுமையான நெருக்கடி. பிறகு, தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்​பட்டன.

புதிதாக,இலங்கை இராணுவம் பிரசவித்த அசுரக் குழந்தையான, ‘ஆழ ஊடுருவும் படையணி’தான் இதில் முதன்மை.முதலில் முகமாலையில் அறிவிக்காமலே தாக்குதலைத் தொடங்கியது,இலங்கை இராணுவம்.இறுதிப் போரின் முதல்​முதலான பெரும் இடப்பெயர்வு அப்போதுதான் நிகழ்ந்தது. பளை, இயக்கச்சி, புதுக்காட்டுச் சந்தி, ஆனையிறவுச் சந்தி வரை​யிலான எட்டு கி.மீ. பின்னிருந்த மக்கள், உயிரைக் காக்க ஓடத்தொடங்கினர்.
மன்னார், வவுனியா என மக்களைத் துரத்திய இலங்கை இராணுவம், 2008 இறுதியில் கிளிநொச்சியையும் கைப்பற்றியது. கிளிநொச்சியில் இருந்து செய்தி சேகரித்து வந்த நானும் மக்களுடனேயே ஓடத் தொடங்கினேன்.கிளிநொச்சியை அடுத்து விசுவமடுவை நோக்கி நகர்ந்​தோம். ஒவ்வொரு நாளும் கற்பனையே செய்து பார்க்க முடியாதபடி சாவுகளுட​னேயே மிகக் கொடூரமானதாக மாறியது. படுகாயங்களுக்குச் சிகிச்சை செய்வது பற்றி யாராலும் சிந்திக்க முடியவில்லை.
தொங்கிய கைகளோடும் கால்களோடும் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள அலைந்த மக்களுக்கு ஒரே ஆறுதல், தற்காலிக மருத்துவமனைகள்தான். இலங்கை இராணுவம் அவற்றின் மீதும் குண்டுகளை வீசி, குற்றுயிராய் இருந்தவர்களை முற்றிலுமாக முடித்தது.திடீரென ஒரு நாள், நள்ளிரவு 1 மணிக்கு மேல், கல்லாறு கிராமத்தில் இலங்கையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. மறுநாள், நான் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, வழக்கத்தைவிட வித்தியாசமான வெடிபொருள் மீத்தங்கள் அங்கு இருந்தன.

அந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்​கள் உடல்களில் பார்க்கவே சகிக்க முடியாதபடி படுகோரமான காயங்களும் ரசாயனப் பொருட்களும் படிந்துகிடந்தன. அவை அனைத்தையும் தெளிவான படங்களாக எடுத்து, படுகாயம் அடைந்தவர்களின் பேட்டிகளையும் எடுத்து, ‘தமிழ்நெட்’டுக்கு அனுப்பினேன். அப்போதுதான், அவை க்ளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டு என்று தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் உடையார்கட்டுப் பகுதியைப் பிடிக்க இராணுவம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. பாதுகாப்பு வலயம் எனச் சொல்லி, மக்களை எல்லாம் அங்கு வரவைத்தது.ஏறத்தாழ மூன்றரை லட்சம் மக்கள் அந்த குறுகிய பரப்பில் கூடினார்கள். அவர்கள் அத்தனை பேர் மீதும் கண்மூடித்தனமாக வான்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலேயே பாதுகாப்பு வலயத்​துக்​குள் வந்த மக்கள் மீது ஷெல்லடிகள் தொடங்கப்​பட்டன.
பல்முனைத் தாக்குதலால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, பல நூறுகளாக அதிகரித்தது. தாக்கு​தலைப் பார்க்க வந்தவர்களையும் இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர்.ஈழ இனப் படுகொலையின் நேரடி சாட்சியமான நான், பாதுகாப்பாக வெளியேறுவதுதான் சிறந்தது என முடிவுக்கு வந்தேன். என்னிடம் இருந்த சாதனங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு, மக்களுடன் சேர்ந்து நானும் அரசுப் பகுதிக்குச் சென்றேன்.

அங்கு நான் கண்ட காட்சி, அதிர்ச்சி அடையச் செய்தது. போராளிகளின் உடையில் மக்களுடன் இருந்தவர்கள், இரணைப்பாலை என்னுமிடத்தில் இலங்கை இராணுவத் தரப்பில் நின்று எங்களை சோதனை செய்தார்கள். உணவின்றி ஒழுங்குசெய்யப்படாத முகத்தோடு தோற்றமே மாறி இருந்ததால், அவர்களிடமிருந்து நான் தப்பிவிட்டேன்.
பின்னர், வவுனியா ஆனந்த குமாரசாமி முகாமில் வைக்கப்பட்டோம். உறவினர்கள் மூலமாக பெரும்தொகை கொடுத்து, அங்கிருந்து தப்பிய நான், கொழும்பில் தங்கியிருந்தேன்.அப்போது, சோதனையிட்ட ஒரு பொலிஸ் அதிகாரி, என்னை ‘புலி’ எனச் சொல்லி, கைதுசெய்ய முயன்றார். உடனே பதற்றம் அடையாமல், ‘நான் ஆசிரியராக வன்னியில் இருந்தவன். வேலைக்காக இந்தியா போகிறேன்’ என சொல்லித் தப்பித்தேன்.
அப்போது, திடீரென அங்கு வந்த ‘வெள்ளைவான்’ கும்பல் என்னை இழுத்து வானுக்குள் போட முயன்றது. அவர்களிடம் இருந்தும் ஒரு வழியாகத் தப்பித்தேன். பின்னர், இந்தியாவுக்கு வந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பா சென்று சேர்ந்தேன்.இலங்கைஇராணுவம் மக்கள் மீது நடத்திய போரில், மண்டைகளும் உடலங்களுமாகத் துண்டு துண்டாகச் சிதறியடிக்கப்பட்டு பச்சைக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை, ஒரு செய்தியாளனாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னால் மறக்க முடியாது.

இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய மனிதப் படுகொலை இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்தும், அங்கே இருந்து சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் நிர்க்​கதியான மக்களை நிராகரித்துவிட்டுச் சென்றன. அந்த இடத்தில் நானும் சில நண்பர்களும் ஊடகக்காரர்களாக எங்களது பணியைச் செய்தோம்.
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஒவ்வொரு தாக்குதல் பற்றிய செய்தியையும் அனுப்பினேன். அதன் விளைவாக, அடுத்தடுத்த நாட்களில் தாக்குதலின் வீச்சு குறைந்தது. இதையே, சர்வதேச ஊடகங்கள் அங்கே இருந்தபடி செய்திருந்தால், பத்தாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்” என்று ஆதங்கப்படுகிறார்.
மனசாட்சியுள்ள வார்த்தைகள். பதில் சொல்லத்தான் யாருக்கு நேர்மை இருக்கிறது?
தீர்மானம் வெற்றி பெற்றாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை!
போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ச இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்… ”நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டு இருக்​கிறோம்!”ஆமாம். ராஜபக்ச பொய் சொல்லவில்லை. இந்தப் போரை இந்தியா பின்னின்று நடத்தியது.
எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி, ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்​களையும் இலங்கைக்கு வழங்கியது. ஆட்களை அனுப்பியது. சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிப்புளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது. இராஜதந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது.

யோசித்துப் பாருங்கள்… இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தம்? ஆனாலும், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ”அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும். ஆனால், தீர்மானத்தின் இறுதி வரைவை ஆய்வு செய்யும்” என்று இரண்டு பக்கமுமாக பதில் சொல்லி இருக்கிறார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங், அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ”இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பற் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன” என்று அறிவித்தார்.
விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடம் இருந்தும் இங்கிலாந்திடம் இருந்தும் பொதுமன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்துச் சரணடையக் காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொதுமன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி, சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது.

ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. ‘உலகிலேயே மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்பு’ என்று விடுதலைப் புலிகளுக்கு முதன்முதலில் கட்டம் கூட்டியது அமெரிக்காதானே!
கொத்துக்கொத்தாகக் குண்டுகள் விழுந்தபோதும், தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்​பேரில்தான் அது நடந்தது!போர்க் குற்றங்களுக்காக சர்வதேசம் மூன்று வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.முதலாவது, ஐ.நா. சபையின் பாதுகாப்பு அவையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம். இங்கு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இலங்கையைக் காப்பாற்ற சீனாவிடம் உள்ள ‘வீட்டோ’ அதிகாரம் போதுமானது.
இரண்டாவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை மூலம்.தன்னுடைய வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முதலாக ஒருவரை – காங்கோவின் தாமஸ் லுபாங்காவை – போர்க் குற்றவாளி என்று அறிவித்திருக்கிறது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்.அதன் சக்தி அவ்வளவுதான். இங்கும்கூட இலங்கை தண்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், போர் அற விதிகளைக் கடைப்பிடிக்கும் உறுதிமொழியை ஏற்று, இந்த நீதிமன்றத்தின் கீழ் வரும் நாடுகள் மீதுதான் சர்வதேச நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இதில் கையெழுத்து இடவில்லை.
மூன்றாவது… மனித உரிமை ஆணைய விசாரணை மூலம்.வெறும் கண்டனங்களையும் கோரிக்கை​களையும் வலியுறுத்தல்களையும் மட்டுமே முன்வைக்க அதிகாரம் பெற்ற அமைப்பு இது. இதன் முன்புதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது.சுருக்கமாக இந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது? போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசு அமைத்த ‘விசாரணை ஆணையம்’ அளித்த அறிக்கையில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது.

சரி, அந்த அறிக்கை என்ன சொல்கிறது? அதிர்ச்சி அடையாதீர்கள். இரண்டு பகுதிகளைக்கொண்ட அந்த அறிக்கையின் முதல் பகுதி போர்க் குற்றங்கள் தொடர்பானது. இலங்கை இராணுவம் எந்தப் போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று சொல்கிறது.இரண்டாவது பகுதி, போருக்குப் பிந்தைய தமிழர்கள் நிலை தொடர்பானது. தமிழர்கள் பகுதி முழுவதும் இராணுவமயமாக்கப்பட்டுள்ள சூழல் மாற்றப்பட வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.
இதைத்தான் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் முன்மொழிகிறது.போரில் நடந்த மனித உரிமை மீறல்களையோ, போர்க் குற்றங்களையோ, அவை தொடர்பான சர்வதேச விசாரணையைப் பற்றியோ அல்ல!சரி, அப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்​பட்டால் என்ன நடக்கும்? இலங்கை அரசு நடவடிக்​கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கோரும்.
அப்போதும் இலங்கை அரசு கேட்காவிட்டால்? ஒன்றும் நடக்காது. அதிகபட்சம் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். இலங்கையைப் பொறுத்த அளவில் அதுவும் நடக்காது.ஏனெனில், அது ஒரு சந்தை நாடு. அதற்குத் தடை விதித்தால், விதிப்பவர்களுக்குத்தான் அதிக நஷ்டம். இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச சொன்னதுபோல, ‘கோக் இல்லாவிட்டால், சிங்களவர்கள் செத்துப் போய்விடுவார்களா என்ன?’

சரி, இப்படி ஒரு விஷயத்துக்கு ஏன் இத்தனை களேபரம்?
சீனாவுடனான பனிப்போரில், ஆசியப் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி​வைக்க அதன் நெருக்கமான கூட்டாளி இலங்கையைத் தட்டிவைக்க வேண்டிய அரசியல் அமெரிக்காவுக்கு.தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினையைத் திசை திருப்ப வேண்டிய அரசியல் ஆளும் அ.தி.மு.க-வுக்கு.
அதற்குப் பதில் லாவணி பாட வேண்டிய நிர்ப்பந்த அரசியல் தி.மு.க-வுக்கு.இந்த விஷயத்தைப் பெரிய விவகாரமாக எடுத்துக்கொள்ள இலங்கைக்கும் அரசியல் உண்டு.ராஜ​பக்ச மீதான அதிருப்தி மறைந்து தேசிய வெறி மீண்டும் தலைதூக்க இது உதவும். ஆக, எல்லோருடைய அரசியலுக்கும் செத்தும் உயிர் கொடுக்கிறான் ஈழத் தமிழன்!

நன்றி:நெருடல் இணையம்
இந்த கொடுமைக்கெல்லாம் ஏதாவது பரிகாரம் கிடைக்காதா என்றுதான் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டினோம்.
ஆனால் அந்த தீர்மானம் நிறைவேறினால் தமிழர்களி கதி அதோகதிதான் என்று இலங்கைத்தமிழர்களை சிங்களவெறியர்கள் மிரட்டுகின்றனர்.அதனால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.தீர்மானம் கொண்டு வந்ததுடன் தங்கள் வேலை முடிந்தது என உலக நாடுகளும்-ஐ.நா வும் இருந்துவிடக்கூடாது.
இலங்கைத்தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா அரசியல் காரணங்களுக்காத்தான் தீர்மானத்தை ஆதரித்துள்ளது.மற்றபடி அதன் நிபந்தனையற்ற ஆதரவு இலங்கைக்குத்தான்.
இன்று தமிழக மக்கள் ஆர்ப்பாட்டம்,தி,மு,க,ஆதரவு விலக்கம்,முதல்வர் ஜெயா கடிதம் ,தமிழக காங்கிரசார் அரசியல் வேண்டுகோள்,அமெரிக்க வற்புறுத்தல் என்று நாலாபக்கம் குடைச்சலால்தான் மன்மோகன்சிங்கை இம்முறை இலங்கைக்கு எதிராக வேண்டாவெறுப்பாகத்தான் திருப்பியுள்ளது.
மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு வந்துவிட்டால் வேதாளம் முருங்கை மரமேறிவிடும்.
_______________________________________________________________________

புரட்சியாளர் பகத்சிங்

-பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவ ருடன் இணைந்து வெள்ளை யருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட் டவர். பகத்சிங் கைதான வழக் கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என் பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.
1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்

நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?
ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.
                           
பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம்.

புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள்.

ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.
தமிழில்: ச.வீரமணி
பகத்சிங் துரோகம் செய்த மோ.க. காந்தி,

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்)
இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.
பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். “முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்… இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!
காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)
 மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் ­மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.
- காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு என்ற நூலின் ஒரு பகுதி
காந்தியும் காங்கிரசும் நூலின் மொத்த பகுதியையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
வெளியீடு
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?