பட்ஜெ [மின் வெ] ட்டும்


save image 
தி.மு.க. ஆட்சியில் இருந்த மின்வெட்டு பிரச்னை ஆட்சியை இழந்திட முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்து, இருளிலிருந்து தமிழகத்தை மீட்கப் போவதாக உறுதி கூறியே தற்போதைய அ.தி.மு.க ஆட்சியைப்பிடித்தது,
ஆனால் ஜெயா அரசு வந்ததில் இருந்து தி.மு.க.ஆட்சியில் வெறும் இரண்டு மணி நேரமாக இருந்த மின் வெட்டு தற்போது 10-12 மணி நேரமாக மாறி பொதுமக்களின் வெறுப்பை உருவாக்கியுள்ளது. 2 மணி நேர மின்வெட்டு, தற்போது 10மணி நேரமாக அதிகரித்துள்ள மின் வெட்டை போக்கும் படியான திட்டங்கள்,வழிகள் ஏதும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் காணப்படவில்லை.மாறாக, ""நமது மொத்த மின் தேவையில், நமது சொந்த உற்பத்தி திறன் 30 சதவீதமே உள்ள நிலையில், மற்ற ஆதாரங்களை சார்ந்தும், அதிக விலை கொடுத்தும் மின்சாரத்தைப் பெற வேண்டியுள்ளது,'' என்று  மின் வெட்டுக்கான அனைவரும் கேட்டு புளித்துப்போனவிளக்கத்தை மட்டுமே தந்துள்ளது.
 தமிழகத்தின் மின் உற்பத்தியைப் பெருக்க, பற்றாக்குறையைப் போக்க, அரசே புதிய மின் திட்டங்களை துவங்கலாம்; தனியார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கலாம்; மரபுசாரா எரிசக்தி வகைகளான காற்றாலை, சூரிய மின்சக்தி, "பயோமாஸ்' மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்; வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறலாம் என, பல வழிகள் உள்ளன.

ஆனால் இவற்றில் எந்த வழியைப் பின்பற்றி, மின்வெட்டை அரசு தீர்க்கப்போகிறது என்ற கேள்விக்கு தமிழக பட்ஜெட்டில் பதிலே இல்லை. 
மின் உற்பத்தியை அதிகரிக்க, அரசு மின் உற்பத்தி திட்டங்களை துவங்கலாம் என்பது முதல் வழி. தமிழக அரசைப் பொறுத்தவரை, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டஉடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் தவிர தற்போது, புதிய திட்டம் துவங்க ஜெயா அரச எதையும்திட்டமிடவில்லை; அறிவிக்கவும் இல்லை.
 ஏற்கனவே, "பெல்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் நீக்கிய நிலையில், 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் இப்போதைக்கு சாத்தியமிருப்பதாக தெரியவில்லை.
 இந்த நிலையில், புதிதாக மின் திட்டங்களைச் செயல்படுத்த துவது தொடர்பாக ஜெயா அரசுக்கு எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பமான நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக , "புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு' என்ற வரிகளை மட்டும் திணித்துள்ளது. 
ஆனால் அதுஎந்த திட்டங்கள், அரசு இந்த நிதியை எந்த மின்திட்டங்களில்செலவிடப் போகிறது; அதனால், எவ்வளவு மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்; திட்டம் எப்போது துவங்கும்; முடியும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இப்போது கிடையாது.அவர்களுக்கே தெரியாத போது பதில் எப்படி கிடைக்கும்.?
 
 "தனியார் மின் உற்பத்தியை அரசு ஊக்குவித்து அவர்களிடமிருந்து வாங்குவது பற்றியும் கூட பட்ஜெட்டில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.வாக்குகளைப்பெற தேர்தல் வாக்குறுதிபடி இலவசங்களுக்கு 22000 கோடிகளை அதாவது அரசின் மொத்த வருவாயில் 22% அள்ளி வீணாக்கும்ஜெயா அரசு, மிகஅடிப்படை தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய கோடிக்கணக்கில் முதலீடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இனி எடுக்கும் நடவடிக்கை பற்றிய தகவல்களையும் தரவில்லை. 
"சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள், கடலோரங்களிலும், கடல் பரப்பிலும் அமைக்கப்படும் காற்றாலை திட்டங்கள், "பயோமாஸ்' அனல் மின் நிலைய திட்டங்ளுக்கு அரசு ஊக்கமளிக்கும்' என்ற பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்க, தனியாக ஒரு கொள்கையை கூட அரசு உருவாக்கவில்லை. இந்த நிலையில், எவ்வகையான ஊக்கத்தை அரசு வழங்கும் என திட்டங்களில், முதலீடு செய்பவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. 
, "பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழித்தடங்கள் பற்றி நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு வழியில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 முன்கூட்டியே திட்டமிட்டு,தமிழ்நாட்டின் மின் தேவையை உணர்ந்து மின்வழித் தடங்களை முன்பதிவு செய்ய ஜெயா அரசு தவறிவிட்டது என்ற உண்மை இதன் மூலம் வெளியாகியுள்ளது.
                                         
 மின் திருட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பெருமையாகக்கூறிக்கொள்ளும்அரசு,தொடர்ந்து மி திருட்டை, மின்சார இழப்பைத் தடுக்க, நவீனப்படுத்துவது குறித்து எந்த திட்டத்தையும் முன் நிறுத்தவில்லை.
 கூடங்குளம் அணு மின் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிப்பதில் ஜெயா அரசு ஏற்படுத்திய தேவையற்ற காலதாமதம்தான், மின்வெட்டு நேரம் 10-12 மணிகளாகஅதிகரிக்க காரணமாகியுள்ளது. இந்த நிலையில், மின் துறை தொடர்பான அறிவிப்புகளில், மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து எந்த திட்டங்களைய்ம்.தீரமானங்களையும் அறிவிக்காமல்,பட்ஜெட்உரையில்  கூறிய"எதிர்பார்ப்பு, வாக்குறுதியை நிறைவேற்றும் கடமையை "எப்படி ஜெயா அரசு நிறைவேற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய முக்கியமான கேள்வியாகும்.
ஏற்கனவே சென்ற பட்ஜெட் மற்றும் இடையிடையே அறிவிக்கப்பட்ட திட்டங்கள்,வாக்குறுதிகள் 70%நிறைவேற்றப்படாத நிலையில் இன்னொரு பட்ஜெட்டையும் தாக்கல் செய்து அதிலும் வாக்குறுதிகளை தறுவது என்பதுஇப்போது பட்ஜெட் தாக்கல் என்பதுவெறும் சடங்காக மாறி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?