வெட்டி விட அழுத பணம்,,,,,,,,.

பின்வரும் புகைப்படங்களில் உள்ள முன்னாள் தம்பதிகள் உலக அளவில் அறிமுகமானவர்கள்தான்.
இப்போது விவாகரத்தில் உள்ள இவர்கள் விவாகரத்து அதாங்க வெட்டிவிட அழுத பணம் எவ்வளவு என்ற விபரம்தான் கீழே வரிசையாக வருகிறது.பார்த்து ஏக்கம் கொள்ளுங்கள்.
ரூபர்ட் முர்டாக்[ஸ்டார் டி.வி.உட்பட ஊடக ஏகபோகதாரி] -அன்னா
கைமாறியது 1.7 மில்லியன் டாலர்
அட்னான் காசோகி- சொர்யா ,கைமாறியது.874 மில்லியன்.
கிராய்க் மெக்காவ்ஸ்-வெண்டி-460 மில்லியன்
மெல்கிப்சன் -ரொபின் 425 மில்லியன்
ரொமன் அப்ரமொவிச்-ஐரீன் 300 மில்லியன்
மைக்கேல் ஜொர்டான் -ஜுயானிடா 260மில்லியன்
சார்லஸ் எட்கர்-மார்லேன் 200 மில்லியன்[மார்லேன் படம் சிக்கவில்லை]
நெய்ல் டைமண்ட்ஸ் -மர்சியா மர்பி 150 மில்லியன்
ஹாரிசன் போர்ட் -மெலிசா மதிசன் 118 மில்லியன்
கிரேக் நார்மன்ஸ் லாரா அன்ட்ரசி 103 மில்லியன்
டைகர் வுட்ஸ் -எலின் நார்டெக்ரென் 100 மில்லியன்

இவர்களின் விவாகரத்து க்குப் பின்தான் பணம் பெற்றவர்கள் வாழ்வு மகிழ்வாக வசதியாக அமைந்திருக்கும் என தெரிகிறது.
_________________________________________________________________________________

கூடங்குளம் உண்ணாநிலை கைவிடப்பட்டது?



இன்று கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் உட்பட, போராட்டக்கார்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
save image
 ஆயினும் கூடங்குளம் விவகாரத்தில் வெவ்வேறு வடிவத்தில தொடரும் என உதயகுமார் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்திலுள்ள பிரச்சனைகளை பற்றி 9 சர்வதேச அமைப்புகளுக்கு புகார் தெரிவிக்கப்படும் என உதயகுமார் கூறினார். 
இன்று திடீரென நெல்லை மாவட்ட ஆட்சியருடன் ராதாபுரத்தில் போராட்டக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதைத்தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாகவும் தெரிகிறது., அப்படி என்ன பேச்சுவார்த்தையில் கூடங்குளம் அணு உலையை மூடி விடுவதாகவா
சொல்லப்பட்டிருக்கும்? போராட்டத்தை படிப்படியாக கைவிட பேச்சு வார்த்தை ஒரு வசதியாகப்பயன்பட்டிருக்கிறதோ?
கூடங்குளம்

ரூ205 கோடியில் குடியரசுத்தலைவரின் உலக சுற்றுலா?


முந்தையக் குடியரசுத் தலைவர்களின் அயல்நாட்டு பயண செலவுகளைவிட தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீ லின் அயல் நாட்டு பயண செலவு கூடுத லாகி ரூ.205 கோடியை எட்டியுள்ளது.
பிரதீபா பாட்டீல்


நாட்டின் முதல் பெண் குடியரசுத்தலைவராக 2007ம் ஆண்டு ஜூலையில் பதவி யேற்ற பிரதிபா பாட்டீல் தனது 5 ஆண்டு காலத்தை 4 மாத காலத்தில் நிறைவு செய்கிறார். தனது பதவி காலத்தில் 22 நாடுகளுக்கு 12 முறை சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு பய ணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரி மைச்சட்டத்தில் குடியரசுத் தலைவரின் அயல்நாட்டுப் பயணச் செலவுகள் கேட் கப்பட்டதில், அயல்நாட்டு பயணத்திற்கு போயிங் 747-400 விமானத்தை பயன் படுத்தியதில் ஏர் இந்தியா வுக்கு ரூ.169 கோடிக்கு மேல் ஆகியுள்ளது. பிரதிபா பாட்டீலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அவ ரதுக் குடும்பத்தினரும் சென்றுள்ளனர்.

பூடான் நாட்டுக்குச் சென்ற பயணத்தின்போது சிறிய ஜெட் விமானம் பயன் படுத்தப்பட்டது. தங்கும் வசதி, உள்ளூர் போக்கு வரத்து, தினப்படி இதர உதிரி செலவினங்கள் வகை யில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு ரூ.36 கோடி செலவாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 3 ஆண்டு களாக தாக்கல் செய்யப் பட்ட மனுக்களுக்கு நிர்வா கத்தினர் பதிலளிக்கத் தயங் கினர். பாதுகாப்புத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் பயணம் செய்த ஏர் இந்தியா வாடகை விமானத் திற்கு கட்டணம் செலுத்தி யுள்ளது.

பிரதிபா பாட்டீல் பய ணத்திற்கு ஆன ரூ.169 கோடி யில் பாதுகாப்பு அமைச்ச கம் ரூ.153 கோடி அளித் துள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?