தல [வலி] பதி



பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் அம்பலம் ஆகியுள்ளது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கடிதம் இவ்வாறு வெளியானது எப்படி?
சுகுமாரன்


ராணுவ தலமை தளபதி சிங்கின் செயல்பாடுகள் அனைத்துமே தகுதிக்கும் ,பொறுப்புக்கும் மீறிய செயலகளாகவே அதுவும் தவறானதாகவே இருக்கிறது.முதலில் தனது பிறந்த ஆண்டு தொடர்பாக அரசை எதிர்த்து ஒரு தளபதி நீதிமன்றம் சென்றதே தவறான நடைமுறையாகும்.
அடுத்து இவ்வளவு காலம் வாயை மூடிக்கொண்டிருந்து விட்டு ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ஸி14 கோடி லஞ்சம் தர ஒருவர் பேரம் பேசியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.அந்த குற்ற சாட்டிலும் லஞ்சப்பிரச்னையை முன்பே நடவடிக்கை எடுக்கும்படி எழுத்து மூலம் கொடுக்காமல் வாய்மொழியாகக் கூறி பின் விசாரணை வேண்டாம் என்றுள்ளதைப் பார்த்தால் தளபதியார் தன்னை சுத்தவானாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியா என்று சந்தேகம் வருகிறது.
 அடுத்தபரபரப்பாக முன்பு பிரதமருக்கு வி.கே.சிங் எழுதியதாகக் கூறப்படும் ரகசிய  கடிதம் இன்னொரு குண்டாக வெடித்துள்ளது." ராணுவ தளவாடங்கள், டாங்கிகளில் நிரப்பும் வெடிமருந்துகள் போதுமான அளவு இல்லை என்றும் இரவில் தாக்குதல் நடத்தும் திறன் நமது படைகளுக்கு குறைவாக உள்ளது எனவும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக" பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வி.கே.சிங் கடந்த 12ம் தேதி கடிதம் எழுதியதாக அந்த கடித அதுவும் ரகசியக் கடிதம் வெளியானது எப்படி.நிச்சயமாக அரசு தரப்பில் இருந்தல்ல .பின் நமது தளகர்த்தர் சிங் மூலம் தான் கசிந்திருக்க வேண்டும்.
ஆக இவரைப்போன்றவர் இதுவரை இந்தியாவின் பாதுகாப்பின் முக்கிய இடத்தில் இருந்தது நமது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறத்தல் .நல்ல வேலையாக அவரின்  திரு விளையாடல்கள் அவர் ஓய்வு பெறும் நிலையில் ஆரம்பமாகியுள்ளது.முன்பு என்னவெல்லாம் நடந்ததோ?
மாநிலங்களவையில் நேற்று வி.கே.சிங்கின் கடிதம் வெளியானது குறித்துஅவர் மீதுஅரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று பா.ஜ. தலைவர் வெங்கய நாயுடு கேள்வி எழுப்பினார்.


 ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரினார். சிவசேனா, கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ‘‘ரகசியமாக இருக்க வேண்டிய ராணுவ தளபதியின் கடிதம் வெளியானது கவலையளிக்கிறது’’ என்றார். மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, ‘‘நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் கசிவது வருந்தத்தக்கது. பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த ஏ.கே.அந்தோணி, ‘‘பாதுகாப்பு, ராணுவ பலம் தொடர்பாக பிரதமருக்கு ராணுவ தளபதி கடந்த 12ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் வெளியாகி இருக்க கூடாது. இதில் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசத்துக்கே இடமில்லை. தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்போம். நமது ராணுவத்தை உலகின் பலம் வாய்ந்த ராணுவமாக மாற்ற தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்கள் மகிழ்ச்சியளிக்கிறது. நமக்குள் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுதான்’’ என்றார்.
சுரன்


நேற்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அந்தோணி சந்தித்து பேசினார். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், ராணுவத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா ஆகியோர் உடனிருந்தனர். வயலார் ரவி தாக்கு: இதனிடையே, டெல்லியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் வயலார் ரவி, ‘‘வயது சர்ச்சை விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியும் வி.கே.சிங்குக்கு பணிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. அதனால் வி.கே.சிங்குக்கு ஏற்பட்ட விரக்தியைதான் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதம் காட்டுகிறது’’ என்றார். தனது பணிக்காலத்தை நீடிக்க வயதை குறைத்ததை அரசும்-நீதிமன்றமும் ஒத்துக்கொள்ளாததற்காக ஒரு பொறுப்பான தலைமை தளபதியார் இப்படியா சின்னப்பிள்ளைத்தனமாக நடந்துகொள்வது.
அது சரி.அந்த ரகசியக் கடிதத்தில் உள்ளவை என்ன?


கடிதத்தின் முக்கிய விபரங்கள்
  • * எதிரிகளின் டேங்குகளை தோற்கடிக்கும் அளவுக்கு நமது டேங்குகளுக்கு தேவையான வெடிபொருட்கள் இல்லை.
  • * விமானப்படை 97% பயனற்றதாகிவிட்டது.
  • * பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையை விமானப்படை அளிக்கவில்லை.
  • *தரைப்படைக்கு தேவையான போதுமான ஆயுதங்கள் இல்லை.
  • * இரவில் போர் புரியும் திறன் தரைப்படைக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.
  • * சிறப்பு கமாண்டோ படைக்கு அவசியமான ஆயுதங்கள் இல்லை.
  • * தீவிர கண்காணிப்பில் பெரிய அளவில் வெற்றிடம் உள்ளதுங
இந்திய ராணுவம் பலவீனமாக இருப்பதாகவும் ஆயுதங்கள் பற்றாக்குறை இருப்பதும் உண்மை என்றால் அதை ஏன் இவ்வளவு காலம் ஒரு தலைமை தளபதி ராணுவ அமைச்சகம்-அமைச்சரிடம் தெரிவிக்காமல் வாயை மூடிக்கொண்டிருந்தார்?. ராணுவ விஷயங்களை ராணுவ அமைச்சர் அந்தோணியிடம் தெரிவித்திருக்க வேண்டும்.அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்றால் பிரதமரிடம் கூறியிருக்க வேண்டும்.இதை எல்லாம் சிங் ஏன் இதுவரை செய்யாமல்நமது பாதுகாப்பு ஓட்டைகளை கடிதத்தை ரகசியமாக பிரதமருக்கு அதுவும் இந்த 12ம் தேதி எழுதி விட்டு பரகசியமாக வெளியேயும் கசிய விட வேண்டும்.இதன் மூலம் தான் ரொம்ப நல்லவன் என்று காட்டவும் பிறந்த ஆண்டு சர்ச்சையில் தனது பெயர் கெட்டதையும் சரி செய்ய முயன்று கடைசியில் இன்னும் அதிகமாக நன்னடத்தையைஅசிங்கமாகிக்கொண்டுள்ளார்.
ஓய்வா? விடுப்பா?_____________________
ராணுவ தளபதி வி.கே.சிங் தனக்கு எழுதிய கடித விவரம் ஊடகங்களில் வெளியானதால் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ தளபதி பதவியில் இருந்து வி.கே.சிங்கை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அந்தோணி, பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் மன்மோகன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த பிரச்னையில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடந்தது.
அரசுக்கு இப்போது இரண்டு வழிகள் உள்ளன. 

  1. இன்னும் 2 மாதங்களில் வி.கே.சிங்கின் பதவிக்காலம் முடியும் வரை அவரின் கோமாளித்தனங்களை சகித்து கொண்டிருப்பது 
  2. அவரை கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்துவது '

 அரசு இரு வழிகளையும் ஆலோசித்து வருகிறது. 
இந்திய நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து அதுவும் ராணுவத்தளபதியை நீக்குவது தவறான முன்னுதாரணங்களை உருவாக்கி விடக்கூடாது என்றும் அரசு எண்ணுகிறது.


ஆனால் சிங் போன்றவர்கள் இன்னும் இரு மாதத்தில் தற்போதுள்ள கெட்டப்பெயரை போக்குவதாக எண்ணிக்கொண்டு இன்னும் ஏதாவது சில்மிசங்களை செய்து தொலைக்கக்கூடாதே?
______________________________________________________________________
_______________________________________________________________________ஜல்லிக்கட்டு சில காட்சிகள்.
சுரன்


சுரன்


சுரன்

சுகுமாரன்

சுகுமாரன்

சுகுமாரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?