பழைய மனை புகு விழா,...?

மார்ச் 28ம் தேதி சசிகலா அனுப்பிய விளக்க அறிக்கையில், எப்போதுமே போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடனேயே இருந்துவிட்டதால், அதிமுகவிற்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எதிராக தனது உறவினர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் குற்றமற்றவர் என்றும் சசிகலா கூறியிருந்தார்.
 சசிகலா அனுப்பிய விளக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் ஜெயலலிதா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடகம் கிட்டதட்ட கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.அடுத்து போயஸ் தோட்டத்தில் சின்னம்மா நுழைந்து விட்டால் திரையை கீழிறக்கி 'சுபம்"அல்லது வணக்கம் போட்டு விடலாம்.அதுவும் விரைவில் '
போயஸ் தோட்டத்தில் அக்காவுடனேயே தங்கிவிட்டதால் சின்னம்மாவுக்கு வெளி உலகில் நடப்பது எதுவுமே தெரியாமல் போய் விட்டது.அதையும் அம்மா புரச்சி தலைவி ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை[?]திரும்ப பெற்று விட்டார்.

அக்காவுடனே யே இருந்ததால் கணவர் நடராஜன் கட்சியினரிடமும்,அதிகாரிகளிடமும்,மக்களிடமும் பதவி-வேலைக்கு பணத்தை வாங்கிக்கொண்டு முதல்வரிடம் காரியம் சாதித்தது எதுவுமே சசிக்கு தெரியாது .பாவம்.
தினகரன்,சுதாகரன்,விவேகானந்தன்,வெங்கடேஷ்,இளவரசி திவாகரன்,ராமச்சந்திரன்,ராவணன் போன்றோர் தோட்டத்துக்குள் நுழைந்து குளப்பியது எல்லாமே சசிக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது.பாவம்.
குடும்பத்தார் பணம் வாங்கிக்கொண்டது தெரியாமல்தான் அவர்கள் குறிப்பிட்டவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு,அமைச்சரவையில் பொறுப்பு எல்லாமே வழங்கியுள்ளார். 

இவ்வளவு சின்னப்பிள்ளைத்தனமாக இருப்பவர் மீது இதுவரை எதற்கு நடவடிக்கை எடுத்தார்கள்.
இவர்-இவரின் குடும்பம் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டி இதுவரை இவர்கள் "தேவராட்டத்துக்கு"தாளம் போட்ட ஜெயலலிதா மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்?
பாவம் ஜெயாவும் என்ன செய்வார்.அவரும் இவர்கூடவே இருந்ததால் வெளியுலக நடவடிக்கைகளே தெரியாமல் இருந்திருப்பார்.
இவர்கள் சொத்துக்குவிப்பு வழக்குக்காக போட்ட நாடகத்தை "சுரன்" ஏற்கனவே பறஞ்சிருக்கிறது.

அதை நம்பாமல்.இவர்கள் "வெளியேற்ற" கண்ணீர் நாடகத்தை நம்பியவர்களை தான் வெளியுலகம் தெரியாத அல்லது புரிந்து கொள்ளாத அப்பாவிகள் என்று சொல்ல வேண்டும்.

____________________________________________________________________________

புதர் மண்டிய சீனச்சுவரில் ஒரு நடை.
_____________________________________________________________________________________________
எழிலான ஆங்கூர் வாட் கோவில்.
கம்போடியாவின் வரலாற்றுப் புகழ் மிக்க அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாப்பதற்கென ஆத்திரேலிய அரசு 1 மில்லியன் ஆத்திரேலிய டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
அங்கூர் வாட் கோயிலைப் போன்ற அமைப்புடைய இந்துக் கோயில் ஒன்றை இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிர்மாணிக்கும் 20 மில்லியன் டாலர் திட்டம் ஒன்றை மகாவீர் மந்திர் அறக்கட்டளை என்ற இந்து நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. அங்கூர் வாட் கோயிலுக்கு 25 மைல்கள் தூரத்தில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்கவிருப்பதாக கம்போடிய அரசு அறிவித்துள்ளது.
_____________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?