வரவு-செலவு

சிறு குறிப்பு.
* பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் பங்குகளை விற்று ரூ. 30 ஆயிரம் கோடி திரட்டப்படும். 
* பல்பொருள் சில்லரை விற்பனையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தை பெற்றபிறகு முடிவு செய்யப்படும்.
* ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சில்லரை முதலீட்டாளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. 
* 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 50 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
                       save image

* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 25 ஆயிரத்து 360 கோடியாக உயர்த்தப்படும். 
* நெசவாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெற்ற கடன்கள் ரூ. 3,884 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. 
* சிறிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ. 5 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
* விவசாயத் துறைக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 
*  வருமான வரி விலக்கு உச்சரவரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2  லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
* ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். 
* ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. 
10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். 
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு (60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு) ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
* மத்திய புலனாய்வுத் துறை நிறுவனத்திற்கு (சி.பி.ஐ.க்கு) ரூ. 395.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
* வங்கி சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு ரூ. 10 ஆயிரம் வரை இனி வரி கிடையாது.  
* இந்த பட்ஜெட்டினால் பெரிய கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள், சிகரெட், பீடி, இறக்குமதி செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆனால் வெள்ளி ஆபரணங்களின் விலைகள் குறைவாகவே இருக்கும்.
* பல்வேறு மானிய செலவுகள் குறைக்கப்படும். அல்லது முழுமையாக நிறுத்தப்படும். 
* இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதை தடுக்க வெளி நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அந்த கணக்கு விபரங்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 
* இந்த நிதி ஆண்டிற்கான மொத்த செலவினம் ரூ. 14 லட்சத்து 90 ஆயிரத்து 925 கோடி.
* அரசின் மொத்த வரி வருமானம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 612 கோடி.
* இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 3 லட்சத்து 13 ஆயிரத்து 313 கோடியாகும். 
* ராணுவத்திற்கு இந்த பட்ஜெட்டில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பங்கு சந்தையில் ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். 
*  உள்கட்டமைப்புக்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் அடுத்த நிதி ஆண்டில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு வரி இல்லா பத்திரங்கள் வெளியிடப்படும். 
* யூரியா உரம் உற்பத்தில் இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெறும். 
* விவசாய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிக் கொடுக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டைகளை இனி ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம். 
* மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ. 11,937 கோடி ஒதுக்கப்படும். 
* 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும். 
* 7 மருத்துவக் கல்லூரிகள் அகில இந்திய மருத்துவக்கழகமாக தரம் உயர்த்தப்படும். 
* ஆதார் திட்டத்தின் கீழ் அடுத்த மாத தொடக்கத்தில் 40 கோடி பேர் பதிவு செய்யப்படுவார்கள்.
____________________________________________________________________________
புகைப்படங்களை நம் விருப்புக்கு ஏற்ப மாற்றிட,
---------------------------------------------------------------------------------
போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற் கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணைய தளங்கள் உள்ளன. சிலவற்றின் பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொலாஜ் ஆகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப் படுவார்கள். இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழி காட்டும் வகையில் அண்மையில் ஓர் இணைய தளத்தைக் காண நேர்ந்தது. அதன் பெயர் இமேஜ் ஸ்பிளிட்டர். இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://imagesplitter.net/.
இந்த தளத்திற்குச் சென்றவுடன், நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட பைலை அப்லோட் செய்திட வேண்டும். பைலின் அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செயல் பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன் படுத்தலாம். 
இதில் என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்? பார்மட் மாற்றலாம். jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய பார்மட்கள் கையாளப்படுகின்றன. பார்மட் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட, உங்களுக்கு எந்த பார்மட்டில் தேவையோ, அந்த பார்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். 
படம் ஒன்றை ரீசைஸ் செய்வதற்கு, எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ, அந்த அளவினை தந்தால் போதும். அளவுகளைத் தந்த பின் “Resize image” என்ற பட்டனில் கிளிக் செய்தால், அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு எனில், நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றினால், அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும். 
இந்த தளத்தின் பெயர் படங்களை வெட்டுவது (imagesplitter) என உள்ளது. அதற்கேற்ற வகையில், நாம் தரும் வரையறைகளின் படி, ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப் பல பைல்களாக இந்த தளம் தருகிறது. பட பைல் ஒன்றை அப்லோட் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (Rows & Columns) என மட்டும் கொடுத்தால் போதும். உடன் ஒரு ஸிப் பைலாக இது தரப்படும். அதனை விரித்து, பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும். இதற்குப் பதிலாக, 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில், படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர், நமக்கு ஓகே என்றால், வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம். 
இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம். 
மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த புரோகிராமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை. அக்கவுண்ட் எதனையும் திறக்க வேண்டியதில்லை. பாஸ்வேர்ட் எதுவும் கிடையாது. போகிற போக்கில் தளம் சென்று, நமக்கு வேண்டிய செயல்பாட்டினை மேற்கொண்டு சென்று கொண்டே இருக்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?