நிலக்கரி முறைகேடும்-தலித் அரசியலும்,

லைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று கணக்கிட்ட தலைமை தணிக்கைக் குழுதான் தற்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
 இந்த அறிக்கை இன்னும் முறைப்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டத்தொடரில் நிச்சயமாக தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் எப்படியோ பத்திரிகைகளில் வெளியாகி, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிதுமளிபட்டுக்கொண்டிருக்கின்றன.


 தலைமை பொதுத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ள குறைபாடு கள் விபரம்: 
ஏலத்தின் மூலமாக நிலக்கரி சுரங்கம் வெட்டும் நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்யாததால், 2004-முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.10.67 லட்சம் கோடி. 155  நிலக்கரிச் சுரங்க வயல் சுமார் 100 தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித முன்யோசனையும் இல்லாமல், அன்றைய நிலக்கரியின் விலையை கருத்தில் கொள்ளாமல், குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக, மதிய வேளையிலேயே தலைமை பொதுக்கணக்குத் துறை இதற்கான விளக்கம் அளித்து, அது பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. "இது வெறும் வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கை இன்னும் தயாராகவில்லை' என்று விளக்கமளித்திருக்கிறது. பிரதமரின் பொறுப்பில்தான் நிலக்கரி நிர்வாகம் உள்ளது என்றாலும் இதுதொடர்பாக அவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்தார். இந்த வரைவு அறிக்கை அமைச்சர்களின் பார்வைக்கு வந்து அவர்களது விளக்கத்தைப் பெற்ற பிறகுதான் இறுதி அறிக்கை தருவார்கள் என்று கூறியுள்ளார்.
 இது வரைவு அறிக்கையாகவே இருந்தாலும்கூட, இத்தகைய ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சில லட்சம் கோடி குறையலாமே தவிர, ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு இழப்பு ஏதுமே கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லிவிடப்போவதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த ஒதுக்கீட்டுக்கு அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும், பொறுப்பேற்கவும் வேண்டும்.
 தலைமை கணக்குத்தணிக்கைக் குழு இந்த இழப்பைக் கணக்கிடும்போது, விலை உயரும் வாய்ப்புகளைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் அன்றைய தேதியில் இருந்த நிலக்கரி விலையை மட்டுமே கணக்கில்கொண்டு இழப்பை மதிப்பிட்டாலும் ரூ.6.31 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று கூறுகிறது.
 இந்திய மின் உற்பத்தியில் 55% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. இந்திய நிலக்கரியில் எரிசக்தியைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருப்பதால், இந்தோனேசியாவிலிருந்து நம் தேவையில் 30% நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் உள்ள அனல் மின்நிலையங்களில் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக, இந்தோனேசிய நிலக்கரி, இந்திய நிலக்கரி இரண்டையும் கலந்து எரிபொருளாக்கி, சமாளிக்கிறார்கள்.

கையில் நிலக்கரி கறை இல்லைங்க-
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால்,
 இந்நிலையில் நிலக்கரி அதன் எரிசக்தி அளவைப் பொருத்து 17 வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு தரமான, எரிதிறன் அதிகமுள்ள நிலக்கரி விலை மேலதிகமாகக் கூடிவிட்டது. நிலக்கரியைப் பொருத்தவரை தேவை பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மிகப்பெரும் அளவுக்கு நிலக்கரி வெட்டி எடுக்கவும், அதற்கான விலையைக் குறைவாக நிர்ணயிக்கவும், ஏலம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசுக்கு எப்படி மனம் வந்தது?
 நிலக்கரி விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் பல அனல் மின்நிலையங்கள் தங்கள் மின் உற்பத்தி அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. பல அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இதற்காகக் கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளன.
 மின்கட்டண உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று- நிலக்கரி விலை உயர்வு. இந்தோனேசிய நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள். இந்த நிலையில், இந்திய நிலக்கரியில் எரிதிறனைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருந்தாலும்கூட, அதன் தேவை மிகமிக இன்றியமையாதது. அப்படியிருக்கும்போது இத்தனைப் பெரும் பரப்பை தனியாருக்கு மத்திய அரசு தனது விருப்பப்படி ஒதுக்கீடு செய்யும் என்றால், இதனை என்னவென்று சொல்வது?
 ஒதுக்கீடு செய்யப்பட்ட 155 நிலக்கரிச் சுரங்க வயல் களில் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்கூட இந்திய நிலக்கரி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. தனியார்தான் இந்த  தேசத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு தனியார் மின் உற்பத்தியாளர் கூறுகிறார் என்றால் இந்தக் கூற்று நியாயமானதுதானா?
 அரசுத்துறை நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொழிற்சங்கங்களின் ஆதரவில் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் மெத்தனத்தாலும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது உண்மைதான். அதற்குத் தீர்வு நிர்வாகத்தைச் சீர்படுத்துவதும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும்தானே தவிர, கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து அவர்கள் கொள்ளை லாபம் அடைய வழிசெய்வதல்ல. மக்களால் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்று வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு மக்களை வஞ்சித்து, தேசத்தின் கனிம வளங்களைச் சூறையாட அனுமதிப்பதற்குத் தேவையில்லை.
காங்கிரசின் மன்மோகன் சிங் அரசு இதுவரை மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்,உணவுப்பொருள் மானியத்தை பறிப்பதிலும்,விலைகள் ஏறினாலும் பரவாயில்லை ஏற்றுமதி வணிகர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கோதுமை உட்பட உணவுப்பொருட்கள்,பருத்தி போன்றவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.
லாபத்தில் இயங்ககும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு பங்குகளை விற்கிறது.நலிந்த நிறுவனங்களை மக்கள் வரிப்பணத்தில் நடத்துகிறது.

வளம்கொழிக்கும் பெட்ரோல் படுகைகள்,நிலக்கரி படுகைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என மக்கள் -நாடு திவாலாகக்கூடிய செயல்களை மற்றுமே செய்து லஞ்ச -ஊழல் வரலாற்றிலேயே சரித்திர சாதனைகளை செய்து வருகிறது,அதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அடுத்த தேர்தல் முலாயம் கூறியதை போல் விரைவிலேயே இருக்கலாம்.
அந்த அளவு காங்கிரசு அரசு ஊழலில் சரித்திரம் படைத்து மற்ற அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது.
உ.பி.முடிவுதான் இந்தியா முழுக்க காங்'குக்கு காத்திருக்கிறது.


_________________________________________________________________________________
இதுதாண்டா அரசியல்!-----------------படங்களுடன் ஒரு விமர்சனம்


இது ஒரு பழி வாங்கல் அதுவும் தலித் இனமக்களின் தலைவரின் கதை.இக்கதை பரமக்குடி படுகொலைகளில் ஆரம்பமாகி சங்கரன் கோவில் சரணடையும் காட்சியுடன் இப்போதைக்கு முடிந்துள்ளது.
ஒரு மாவீரன் என்றும் தலித் இனத் தலைவர் என்றும் கூறப்படும் ஒருவர் தனக்காக தேவையே இல்லாமல் உயிரை அரசு அனுப்பிய சாமுராய்களால் பறிகொடுத்தவர்கள் மீது பழி வாங்குவதாக சபதம் எடுப்பதுடன் இக்கதை பரமக்குடியில் விறு,விறுப்பாக ஆரம்பமாகிறது.ஆனால் அந்த மாவீரன் தன் மக்களுக்காக பழி வாங்குவதை மிக வித்தியாசமாக-புதுமையாக ஏன் புரட்சியாக என்று கூட கூறலாம் காட்டியுள்ளனர்.

வீரனாக நெற்றியில் தலித் தில கத்துடன் புறப்படும் அவர் வீர வஜனங்களை பேசி சாமுராய்கள் தங்கள் தலைவியுடன் முகாமிட்டிருக்கும் சங்கரன் கோவிலில் சென்று தலைவி காலில் விழுந்து வணங்குவதுடன் தன் இன மக்களையும் காலில் விழுந்து வணங்கக்கூறி வீடுபேறு அடைவதுடன் [இப்போதைக்கு]முடிகிறது.
இது என்ன கதை என்கிறீர்களா?
மேலே படியுங்கள்.
எனக்கும் இக்கதை சுருக்கம் தலைக்கிறுக்கத்தை தான் தந்துள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் விடுத்துள்ள நன்றி அறிவிப்பு அறிக்கை:  

‘’சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி வாக்காளர்கள் இந்த வெற்றியை அளித்துள்ளனர். 

வெற்றிக்கு பாடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தேவேந்திரகுல மக்களுக்கு நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.
இதில் பரமக்குடி உட்பட அனைத்து துறைகள் என்ற வார்த்தையை ஜான்பாண்டியன் சேர்க்க மறந்து விட்டார்.ஆனால் அவருக்காக விலைமதிப்பற்ற தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள் இந்நன்றியறிவித்தலை எப்படி எதிர் கொள்வார்கள்.
இனிவரும் காலங்களில் அதிமுகவுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து தோழமை கட்சியாக செயல்படும்’’ என கூறியுள்ளார்.
நிச்சயம் இணைந்து செயல்படவேண்டும்.அப்போதுதானே இவரின் மீது முதுகுளத்தூர் வர விதிக்கப்பட்ட தடைக்காக போரடி தேவையே இல்லாமல் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடையும்?அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்?
_சங்கரன் கோவில் தேர்தலுக்கு முன் வரை ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் கரித்துக்கொட்டிவிட்டு தேர்தலில் அதிமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க காரணம் என்ன?
பரமக்குடி படுகொலைகளுக்குப் பின்னர் கிருஷ்ணசாமியும்,ஜான்பாண்டியன்
போன்ற தலித் தலைவர்கள் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்துதானே வந்தார்கள்.

கிருஷ்ணசாமி சங்கரன் கோவில் தொகுதியில் அதிமுக வுக்கு வாக்கு கேட்டபோது கூட ஊரைவிட்டு வெளியேற கூறியதாக செய்திகள் வெளியாயின.
ஆனால் இன்று பணத்தை வாங்கிக்கொண்டு அனைவரும் நெஞ்சுக்கு நீதி  என்று இரட்டை இலையில்தானே குத்தியுள்ளார்கள்?பின் என்ன தலித் அரசியல் விடுதலை-வெங்காயம் எல்லாம். ?
தங்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள்.யார் ஆப்பு வைக்கிறார்கள் என்று கூட உணராமல் அரசியல் செய்யும் இவர்கள் தலித் தலைவர்கள்தானா?

அல்லது அதை பற்றிய உணர்வு இல்லாமல் அரசியல் பாபுலிசத்தில்இருக்கும் தலித் மக்களை இந்த மாயைஅரசியல் தளத்தில் இருந்து மேலேற்றிட இன்னொரு அம்பேத்கர்தான் வரவேண்டுமா?
_________________________________________________________________________________
இது அரசியல் இல்லைங்க.ஊஞ்சல் விளையாட்டு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?