மோ [ச] டியா?

‘டைம்’ இதழ் நடத்தி வரும் உலகின் டாப் 100ல் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறுவதற்காக மோசடி வேலைகளை 
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்து வருகிறார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 
குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா "டைம் இதழ் தற்போது தனது ஆன்லைன் சர்வே மூலம் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த மனிதர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. 




இதில்இப்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.இதற்காக குஜராத் அரசின் பல்வேறு இணைய தளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை முதல்வர் மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். உலகில் எந்த தலை வரும் மோடியை போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்திற்காகதான். மோடிக்கு இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரத்து 465 வாக்குகள் கிடைத்தாலும், நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். 56 ஆயிரத்து 859 பேர் நோ சொல்லியுள்ளனர்.

குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், ராஜ்கோட்டிலிருந்து 16 ஆயிரம் குழந்தைகள் காணாமல் 
போயுள்ளனர். மோடி பங்கேற்கும் விழாவிற்கு எப்படி கூட்டத்தை கூட்டுகிறார்கள். பாஜவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் 
போலீசாருக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இது போன்று முந்தைய முறை ஈழ படுகொலை புகழ் ராஜபக்‌ஷே பல கோடிகள் செலவிட்டு முதலிடம் பிடிக்கப் பார்த்து கடைசியில் முதல் பத்து வரிசையில் கூட வரமுடியாமல் போனார்.இப்போது மோடியின் மோசடி முறையா?.
_________________________________________________________________


ஒருவர் வாழும் நகரம் ஏலம்.
மெரிக்காவில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வந்த குட்டி நகரம் ரூ.4.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதை வியட்னாமை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 2 பேர் விலைக்கு வாங்கி உள்ளனர்.



அமெரிக்காவின் கொலராடோ அருகில் லாராமி , செயெனி பகுதிக்கு இடையில் உள்ளது பபோர்ட். பத்து ஏக்கரில் அமைந்துள்ள இந்த குட்டி நகரத்தில் 3 படுக்கை அறை கொண்ட சொகுசு வீடு, பெட்ரோல் பங்க், சில சிறிய வீடுகள் உள்ளன. இங்கு வசித்தவர் டான் சம்மன்ஸ். இவர் ஒருவர் மட்டும்தான் இந்த நகரில் வசித்தார். அதனால் அமெரிக்காவிலேயே மிகமிக குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரம் என்று பெயர் பெற்றது.
கடந்த 1980,ம் ஆண்டு இந்த நகரத்துக்கு மனைவி, மகனுடன் சம்மன்ஸ் குடியேறினார். 1990,ல் நகரத்தை விலைக்கே வாங்கி விட்டார். கடந்த 95ம் ஆண்டு இவரது மனைவி இறந்துவிட்டார். அதன்பின் 2007ம் ஆண்டு மகனும் வேறு இடத்துக்கு சென்று விட்டார். ஆனால், நகரை பிரிய மனமில்லாத சம்மன்ஸ் அங்கேயே வசித்தார். அதன்பின், நகருக்கு வருபவர்களுக்கு பீர், உணவு, தங்கும் வசதிகள் செய்து கொடுத்து வருவாய் ஈட்டினார்.

இந்நிலையில், நகரை ஏலத்தில் விட சமீபத்தில் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை செயெனி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் டான்ஜா ஆண்ட்ரூஸ் செய்தார். 2012,ம் ஆண்டு ஏப்ரல் 5,ம் தேதியன்று நகரம் ஏலம் விடப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஆன்லைனில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதன்படி பபோர்ட் நகரம் நேற்று ஏலம் விடப்பட்டது. 12 பேர் பங்கேற்றனர்.
முதலில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது. கடைசியில் ரூ.4.5 கோடிக்கு ஏலம் முடிந்தது. வியட்னாமை சேர்ந்த 2 கோடீஸ்வரர்கள் நகரை ஏலம் எடுத்தனர். ஏலம் முடிந்தவுடன், அந்த 2 பேரையும் டான்ஜா அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். மீடியாவிடம் பேச அவர்களை அனுமதிக்கவில்லை. அதனால் ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

ஏலம் விடுவதை பார்த்துக் கொண்டிருந்த டாம் சம்மன்ஸ் பெருமூச்சு விட்டார். அவர் கூறுகையில், என் பாதி வாழ்நாளை இந்த நகரத்தில் கழித்துவிட்டேன். இப்போது நகரை விட்டு பிரிவது வருத்தமாக இருக்கிறது. மகன் வசிக்கும் இடத்துக்கு அருகில் வாடகைக்கு வீடு பார்ப்பேன் என்கிறார்.
கடந்த 80ம் ஆண்டில் இருந்து இதுவரை பபோர்ட் நகரில் கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சம்மன்ஸ். பபோர்ட் நகரத்தை 2 பேர் விலைக்கு வாங்கியதால், இதன் மக்கள்தொகை இப்போது இரண்டு மடங்காகி விட்டதாம். அதனால் அமெரிக்காவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரம் என்ற பெருமையை பபோர்ட் இழந்துவிட்டது.

 நன்றி:தேடிப்பார்,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?