தேடுதல் வேட்டை,,,,.

குடியரசு தலைவர் தேர்தல் ஆள் நிறுத்துவதுதான் இன்றைய இந்திய அரசியல் உலக பரபரப்பு.அப்துல் கலாமை பாரதிய ஜனதா முன்னிறுத்த முடிவு செய்துள்ளது,ஆனால் அதற்கு அவர் முஸ்லீம் என்று வண்ணம் பூசி ஆதரவை தேடுகிறார்கள்.
முலாயம்,லாலு,நிதிஷ்,சரத் யாதவ் உட்பட சில உதிரி கட்சிகள் முஸ்லீம்தான் நிறித்த வேண்டும் என்கிறார்கள்.அவர்களை கவரவே கலாம்.
அது என்ன முஸ்லீமைத்தான் ஆதரிப்பது என்று இவர்கள் கூறுகிறார்கள்.
வரும் தேர்தலை முன்னிறுத்தி முஸ்லீம் வாக்குகளை கனவில் பார்த்தே இப்படி சொல்லித்திரிகிறார்கள்.
சுரன்
பக்‌ஷேயுடன் அப்துல் கலாம்

பிரதமரை அவ்வாறு நியமிக்க இவர்கள் சொல்வதில்லை. அந்த இடத்தில் தன்னை உட்கார்த்திப்பார்க்கிறார்கள்.
குடியரசுத்தலைவர் என்றால் வெறும் அலங்காரப்பதவி.பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் கோப்புகளில் கையொப்பமிடுவதும்.மரணதண்டனை கைதிகளின் கருணை மனுவை உட்கார்ந்து ஆண்டுக்கணக்கில் படித்து தள்ளுபடி செய்வதும் மற்றைய தினங்களில் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதும்தானே வேலை என்ற எண்ணம்தான்.அப்படி பொறுப்பான பதவியை முஸ்லீம் என்பவருக்குக்கொடுத்தால் தனக்கு சமுக நல்லிணக்க வீரர் பட்டமும்
முஸ்லீம் வாக்குகளும் கிடைக்கும் என்ற ஆசை.
சுரன்
முகமது அமீது அன்சாரி

பாஜகவுக்கும் அப்துல் கலாம் கிடைத்து அவரை தோழமை கட்சிகளிடம் காட்டிய போதுதான் இடது சாரிகள அமீது அன்சாரியை அறிமுகப்படுத்தி விட்டார்கள்.
இப்போதைய துணை குடியரசுத்தலைவர்.பொறுப்பானவர்.முற்போக்கு சிந்தனை தெளிவுடையவர்.
பாஜக கூட்டணிகட்சிகள் யோசிக்க துவங்கி விட்டனர்.கலாம் சிறந்த விஞ்ஞானி சிறந்த நிர்வாகியல்ல என்பதை தனது கடந்தகால பொறுப்பில் காட்டிவிட்டார்.
இடது சாரிகளுக்கு கலாம் குடியரசுத்தலைவராவதில் எப்போதுமே விருப்பம் இருப்பதில்லை.
2002ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அப்துல் கலாமை பாஜக அறிவித்தபோது, ஜனாதிபதி வேட்பாளராக நேதாஜி சுபாஷ்சந் திரபோசின் தேசிய ராணுவத்தின் கேப்டனாக செயல்பட்ட வீராங் கனை லட்சுமி ஷெகாலை இடது சாரி கட்சிகள் முன்னிறுத்தின.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் முதல் 5 ஆண்டு காலத்தில் பேராசிரியர் டாக்டர் ஹமீத் அன் சாரியை இடதுசாரிகள் ஆதரித்த னர். 
இப்போதும் சுஷ்மா சுவராஜ் அமீது அன்சாரியை பொருத்தமற்றவர் என்று கூறியதற்கு இடது சாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முகம்மது அமீத் அன்சாரி ஏப்ரல் 11934 இல் பிறந்தவர்.அல்லது அவதரித்தவர்.தேசியசிறுபான்மையினர்ஆணையத்தின்தலைவராக பதவி வகுத்தவர்.அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர். இந்தியாவின் 13வதுகுடியரசுத் துணைத் தலைவராக11 ஆகஸ்டு2007 முதல் பத்வி வகிக்கிறார்.
பிரணாப் முகர்ஜியை காங்கிரசு கையை காண்பிக்க ஆரம்பித்தது.ஆனால் முதல் படியிலேயே அவரை மற்ற கட்சியினர் கைவிட்டு விட்டனர்.கடைந்தெடுத்த காங்கிரசுக்கார்.குறிப்பிட்ட கட்சி முத்திரை இல்லாதவர்தான் தேவை என்று ஆரம்பத்திலே கனவில் மண்ணைக்கொட்டிவிட்ட்ன.
சுரன்
பக்‌ஷேயுடன் பிரனாப் முகர்ஜி

யார் வந்தாலும் குடியரசுத்தலைவர் பதவி இந்தியாவைப்பொறுத்தவரையில் பிரிட்டன் ராஜ குடும்பம் போன்று பெயருக்குத்தான் ராஜா.
சொல்லப்போனால் குடியரசுத்தலைவர் மாளிகயில் இருந்து கொண்டு பிரதமரைப் பார்த்து மாதம் மும்மாரி பெய்ததான்னு கேட்கிற அதிகாரம்தான்.
மற்றபடி அதிகாரம் எல்லாம் பிரதமரிடம் தான்.
இதிலும் ஒரு சந்தேகம்.எல்லா கட்சிகளும் முஸ்லீமைத்தான் குடியரசுத்தலைவராக்க வேண்டும் என்கிறார்களே.கிறிஸ்தவர்கள்,இந்துக்கள்,சமண,புத்த மதத்தவர்கள் என்ன சும்மா இருக்கிறார்கள்.அவர்கள் வாக்கு வங்கி   திவாலாகி விட்டதாஎன்ன?
ஏதோ நம்மால் முடிந்தது. 

----------------------------------------

இடம் மாறியிருக்கும்;;
ஓபாமா லேசு பட்ட ஆள் இல்லை.இல்லாவிட்டால்ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில்,ஆப்கானிஸ்தான் சென்றிருப்பாரா? அடுத்து நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டை முன்னிட்டு அதிபர் ஹமீட் கர்சாயுடன் இணைந்து எதிர்கால அமெரிக்க-ஆப்கன் உறவுகள் குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திடதான் சென்றாராம்.
சுரன்
ஆப்கனில் ஓபாமா இன்று[2-5-12]

ஒபாமா உரையாற்றி அது ஆறுவதற்குள் காபூலில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகரின் கிழக்குப் பகுதியில் வெளிநாட்டவர்கள் தங்கும் மாளிகையொன்றை இலக்குவைத்து இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 4 பேர் அருகிலுள்ள பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள். 17 பேர் சம்பவத்தில் காயமடைந்திருக்கிறார்கள்.
சுரன்

இந்தத் தாக்குதல்களை தாங்கள்தான் செய்ததாகவும் ஒசாமா பின்லேடன் மரண ஓராண்டு கொண்டாடத்தான் வெடிகளை வெடித்ததாக தாலிபன்கள் கூறியுள்ளனர்.
இதில் முக்கிய விடயம் ஓபாமா ரகசியமாக ஆப்கன் வந்துள்ளார்.தாலிபான்களுக்கு பின்னர்தான் தெரிய வந்ததாம்.முதலில் தெரிந்திருந்தால் குண்டு வைத்த இடம் மாறியிருக்கும்.
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?