ஓராண்டுக்கு நூறாண்டு ஜால்ராக்கள்.

அதிமுக அதாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றது.யாருக்கு லாபமோ இல்லையோ .அவரை பாராட்டியே வந்த பத்திரிகைகள் காட்டில் நல்ல மழை.விளம்பரம் மழைதான்.பத்திரிகை தலைப்பிலேயே முதல் பக்கம் உட்பட்ட 4 அட்டை[முதல் தாள்] விளம்பரகட்டணம் லட்சக்கணக்கில்தான்.அதிலும் ஆங்கில பத்திரிக்கைகள் அனைத்திலும் தமிழக மக்கள் பலர் பார்த்தே இராதவைகளிலும் கூட விளம்பரம்.அனைத்தும் அரசு வரிப்பணத்தில்.இவர் ஓராண்டு முடிப்பதில் கொண்டாட அரசுக்கு என்ன இருக்கிறது.அதிமுக கொண்டாட வேண்டியதுதான்.
சுரன்

விளம்பரப்பிரியர் கருணாநிதி ஆட்சி ஓராண்டு நிறைவு கூட இப்படி கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை.
ஆனால் மக்கள் ஓராண்டை எப்படி கழித்தார்கள்.இரவில் தூக்கமின்றி வெப்பமும்-புழுக்கமுமாகத்தான் கழித்துள்ளார்கள்.அது போன்ற மின் தடை காலங்களிலேயே இந்த ஆட்சி பற்றி எல்லா வகையிலும் புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.
ஆனால் எல்லாம் மனதளவில்.வீட்டளவில்தான்.
மற்றபடி நமது பார்வையில்.கருணாநிதி ஆட்சியில் ஏற்றப்படவில்லை எனற குற்ற சாட்டுடன் பேருந்து கட்டணம்,மின் கட்டணம்,பால் விலை எல்லாம் உயர்த்தப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் முன்னரே 3800 கோடிகளுக்கு வரியை உயர்த்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப்பொறுத்தவரை ஜெயா பதவி ஏற்றவுடன் ஆந்திரா சென்று விட்டவரளுக்குப் பதிலாக பீகார் ,மே.வங்கம் போன்ற வட மாநிலக்கொள்ளையரகள் வந்து தொழிலை சிறப்பாக செய்து வருக்கிறனர்.வெறும் செயின் பறிப்பு- நகைக்கடை,வங்கிகொள்ளகள் என வளர்ச்சிகண்டுள்ளது.ஆனால் இவைகளுக்கு புரிந்துனர்வு ஒப்பந்தம் போடப்படாததால் அரசின் சாதனை பட்டியலில் சேர்க்க இயலவில்லை.
மற்றபடி ஜெயா ஆட்சியில் தலை தூக்கும் காவல்துறை தர்பார் சிறப்பாக நடக்கிறது.
சுரன்

திமுக ஆட்சியில் நடந்த கலைத்துறை பாராட்டு விழாக்கள் நிறுத்தப்பட்டு விட்டன.அதற்குப்பதிலாக சட்டமன்ற ஜெயா நாமாவளி பாராட்டுகள் நடத்தப்படுகின்றன.
ஜெயலலிதாவை பாரட்டுகிறவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு என்ற மரபு அவை நாயகரால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது.
அவரை சி.பா.ஆதித்தனாருடன் ஒப்பிடும் அளவு சிலர் சிங்கியுடன் அவைக்கு வந்து பண்டுருட்டியது அவையை கலகலப்பாக்க உதவியது.
மக்கள் பிரச்னைகள் எதைக்கூறினாலும் முந்தைய கருணாநிதி ஆட்சிக்காலத்தில் என்று ஆதியில் இருந்து நீட்டி பேசும் அமைச்சர்கள்,முதலமைச்சர்,அவை நாயகர் பேச்சு எவையாக இருந்தாலும் கீறல் இசைத்தட்டை கவனத்திற்கு கொண்டு வந்தது.

அய்யா ,சட்டமன்றத்தில் கொசுத்தொல்லை.என்று பேச ஆரம்பித்தால் கூட உடனே ஒரு அமைச்சர் எழுந்து'முந்தைய திமுக ஆட்சியில் 100கோடி செலவில் புதிய சட்டமன்றம் கட்டி அரசு பணம் வீனானது.அங்கு இருந்திருந்தால் முதலைகளே வந்திருக்கும்.அதிலிருந்து புரட்சித்தலைவி ,மாதர்குல மாணிக்கம்,இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவி,புரட்சித்தலைவருக்கு அரசியல் சொல்லி வழி நடத்திய அம்மா நம்மை காப்பாற்ற இங்கு மீண்டும் அவையை கொண்டு வந்துள்ளார்.உறுப்பினரை கடித்தது கொசு அல்ல.பக்கத்தில் இருக்கும் துரை முருகன் தான் கிள்ளி இருப்பார்,அவரை அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் "என்று நீணட விளக்கம்தர பேச வந்த உறுப்பினருக்கு தான் வைக்க இருந்த கோரிக்கை மறந்து விடும்.அதற்குள் அவை நாயகர் மணியடித்து நீங்கள் ரொம்ப நேரம் பேசி விட்டீர்கள்.பேசாமல் அமருங்கள் .இல்லை என்றால் வெளி நடப்பு செய்யுங்கள் என்பார்.
சுரன்

இதுதான் நமது சட்டமன்ற அன்றாட நடவடிக்கைகளின் சுருக்கம்.
அது தவிர சில ஓராண்டு-நூறாண்டு சாதனைகள்.

மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பியது. நீதி மன்றங்கள் உத்தரவிட்ட பிறகும்அவர்களுக்கு மீண்டும் பணியில் அமர்த்தாதது. 
சர்க்கரை ஆலை தொழிலாளிகள் 40 நாள் போராடிய பிறகும், அழைத்துப் பேசாமல் பலி வாங்கியது.
.நூறாண்டு சாதனையாக இந்த ஓராண்டுகாலத்தில் 14 காவல் நிலைய மரணங்கள், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி, என்கவுண்ட்டரில் 8 பேர் பலி.
தேர்தல் வாக்குறுதியானகரும்புக்கு டன் ஒன்றுக்கு 2500 ரூபாயைமறந்துவிட்டது.
.காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் முடிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110இல் கூறிவிட்டு இன்னமும் துவக்கப்பவே படாதது.
சுரன்

அதிமுக ஆட்சிக்காலத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு,20 ஆண்டு காலம் நீதிமன்றத்தில் போராடி குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி பழங்குடி மக்களுக்கு தீர்ப்பு வெளிவந்து 8 மாதங்கள் ஆன பிறகும் சட்டப்படி தர வேண்டிய ஈட்டு தொகை வழங்குவதுபற்றிகண்டுகொள்ளாமல் இருப்பது.
முக்கியமாகஅரசின் சார்பில் நிறைவேற்றப்படும் எல்லா பணிகளிலும் 40 சதம் கமிஷனை அமைச்சர்கள்,மாவட்டங்கள் உள்ளிட்டு அதிமுக கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கறாராக பெறுவது.
சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் உட்கார வைப்பது. 
ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள் உட்கார்ந்து இருந்தாலும் எல்லாத்துறை சார்ந்த அறிவிப்புகளையும் வாய் வலிக்க 110 இல் முதல்வர்  மட்டும் வெளியிட்டுவிட்டு மேசையை தட்டக்கூறுவது.
காவல்துறையை சட்டம் ஒழுங்கை கவனிக்க விடாமல் திமுக, வினரை கைது செய்து உள்ளே தள்ளுவது மட்டுமே அவர்கள் வேலை என்றாக்கி விட்டது.போன்ற பல உண்டு.
சுரன்

மின் வெட்டை போக்க எந்த நடவடிக்கையும் தான் செய்யாமல் பழைய ஆட்சியாளர்களை மட்டுமே குறை சொல்லி மக்களை இருட்டிலேயே வைத்திருப்பது தலையான சாதனையாகக் கொள்ளலாம்.
சில கட்சியினர் அதிமுக அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டியதை பார்ப்போம்.

அ.சவுந்திரராசன்[சிபி எம்]திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மக்கள் எதிலோ சிக்கிக் கொண்டதை போல விக்கிக் கொண் டிருந்தார்கள். ஒரே புழுக்கம், உருக் கம், உப்பிசம். தப்பிப்பது எப்படி என்று எலக்ட்ரானிக் எந்திரத்தை நோக்கி காத்திருந்த மக்கள் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் கைவரி சையை காட்டினார்கள். சூரியனோடு கைகோர்த்து வந்த ‘கை’யையும் முறித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு களை எதிரொலிக்கும் வண்ணம் முதல்வர் தலைமையில் அமைந்தமுத்தான அணி மகத்தான வெற்றியை குவித்தது.

மக்கள் தந்த மகத்தான ஆதரவில் பூத்த இந்த ஆட்சிக்கு இன்று வயது ஒன்று.தேரோடு ஒட்டப்பட்ட மரக் குதிரை தேரையே நான்தான் தாங்கி நிற்கிறேன் என்று கூறிய கதையாக தில்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, என் தயவில்தான் இருக்கிறது என்று மார் தட்டியவர்கள், இடம் பெயர்ந்து இன்னல் பட்ட இலங்கை தமிழர் களுக்காக மத்திய அமைச்சரவையில் எந்த அழுத்தத்தையும் எப்போதும் தந்ததே இல்லை. பிரதமருக்கு எழுதிய கடிதம் என்ற தபால் சேவையை தவிர வேறு எதுவும் உருப்படியாக அவர் கள் செய்யவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், இப்போது தமிழ் ஈழத்தை அமைக்கப் போகிறார்க ளாம். டெசோ என்ற அமைப்பின் பெயரை சொல்லி அதற்காக உயிரை யும் கொடுப்பார்களாம்

திமுகவின் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, அத்துமீறல்கள், மின்வெட்டு, அதனுடைய தொடர் பாதிப்பு மக்களை பாதித்தது.

முந்திய அதிமுக ஆட்சியில்மலி வான விலையில் மணல் மக்களுக்கு கிடைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டு களில் மணலை ருசிபார்த்த கூட்டம் இப்போதும் ஆங்காங்கே வாலாட் டிக் கொண்டிருக்கிறது.
மின்தடை அக லட்டும். இந்த ஆட்சியில் அறிவிக்கப் பட்டுள்ள விலையில்லா அரிசியும், விலையில்லா எம்ஜிஎப் (மிக்சி, கிரைண் டர், மின்விசிறி) விளிம்பு நிலை மக் களுக்கும், ஏழைகளுக்கும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு மடிக் கணினி, மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்புகள், ஆதிதிராவிடர் நலன், விவசாயிகள் நலன், கல்வி உதவிகள், கேபிள் டிவி, மருத்துவக் காப்பீடு, பெண் கள் திருமண உதவி, பெண்களுக்கான சுகாதார நாப்கின்கள் என பல திட் டங்களை அரசு அறிவித்திருப்பது வர வேற்கத்தக்கது. இந்த அரசு இதுவரை செய்தது அனைத் துமே வரவேற்புக்கு உரியன.

அப்படி போடுங்க.அதிமுக கட்சிக்காரர் கூட இப்படி புகழ்ந்து தள்ளியிருக்க மாட்டார்.மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் மக்கள் நலப்பணியாளர்கள்.பால்.பேருந்து கட்டண உயர்வு,பரமக்குடி துப்பாக்கி சூடு,பெருகி வரும் பகல் கொள்ளைகள்,நகைக்கடை வங்கிக்கொள்ளைகள் தேவைதான் என்கிறதா?வரி,விலைவாசி உயர்வு 8300கோடிக்கான வரி அறிவிப்புகளும் வரவேற்புக்குரியதுதான் என்கிறதா?

எம். ஆறுமுகம் (சிபிஐ): ஊழல் மலிந்த மக்கள் நல னைப் பாதுகாக்கத் தவறிய ஒரு கொடுங்கோல் ஆட் சியை வீழ்த்திட அதிமுக தலைமையில் அணி அமைக் கப்பட்டு தேர்தலை சந்தித் தோம். மத்திய அரசு மாநில அரசுக்கு ஆதரவு அளிக்கா மல் பல்வேறு நிலைகளில் புறக்கணித்து வந்தாலும் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் தேர் தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற் றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருவதை மன தாரப் பாராட்டுகிறோம்.


ஜான் ஜேக்கப் (காங்.): எல்லோரும் பாராட்டும் உண்மையில் ஒரு சிறப்பான ஆட்சி நடத்திவரும் முதல மைச்சருக்குசோனியாகாந்தி சார்பிலும் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் சார் பிலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரி வித்துக்கொள்கிறோம்.
பி.வி. கதிரவன் (ஃபார் வார்ட் பிளாக்): தேசியத் தலைவர் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் கூறியது போல் வீரத்தோடும் விவேகத் தோடும் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரை மன தாரப் பாராட்டுகிறேன்.
சரத்குமார் (சமக): இந் நாள் ஒரு பொன்னாள். மக் களின் மனநிறைவோடு ஏழை களே இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் ஆட்சி நடத்திவரும் முதலமைச்ச ருக்கு பாராட்டைத் தெரி வித்துக்கொள்வதோடு வெளி யில் இருப்பவர்கள் தூற்றிக் கொண்டிருந்தாலும் கவலை வேண்டாம். என்றும் உங் களுக்கு உறுதுணையாக இருப்போம்.
கிருஷ்ணசாமி (பு.த): ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தை மீட் டெடுத்து ஜனநாயகத்தின் ஆட்சியை நடத்திவரும் இந்த அரசு மேலும் பல சாதனைகளைச் செய்ய வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): மதச் சார்பின்மைக்கு எடுத் துக்காட்டாகவும், மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசாகவும், மத்திய அர சுக்கே வழிகாட்டிவரும் இந்த அரசு நல்ல பல திட் டங்களை உருவாக்கி, வள மான தமிழகத்தை உரு வாக்க வேண்டும்.
தணிகையரசு (கொஇபே): நம்பி வாக்க ளித்த மக்களுக்கு கடுகளவும் குறையும் குற்றமும் இல்லா மல் திட்டங்கள் பல தீட்டி வரலாற்று சாதனை நிகழ்த்தி வரும் முதலமைச்ச ருக்கும் எனது பாராட்டுகள்.

செ.கு. தமிழரசன் (குடி யரசு கட்சி): ஒரு நல்ல அரசு எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை சட்ட மேதை அம்பேத்கர் வகுத் தாரோ அதற்கேற்றாற் போல் நலிந்த மக்களுக்கு நன்மை பயக்கும் அரசாக வும், நம்பிக்கைக்குரிய ஜன நாயக அரசாகவும், சமூக சமத் துவ அரசாகவும் செயல்பட் டுள்ளது.
இதில் ஆறுமுகம்,சரத்குமார்,செ.கு.தமிழரசன் ஆகியோர் அதிமுக வின் கிளை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.ஆனால் அவர்களைவிட மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் அ.சவுந்திர ராஜன் பேச்சு இல்லை.ஜால்ராதான் சூப்பரப்பு.இப்படியே மெயின்டன் பண்ணுங்க.பேசாம திருப்பூர் கந்தசாமி திமுக வில் சேர்ந்ததுபோல் நீங்க அதிமுகவில்சேர்ந்திரலாம்.போகிற காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு கூட கிடைக்கலாம்.
ஆக மொத்தத்தில் எது எப்படியானாலும் முதலாண்டு முடித்ததற்கு வாழ்த்துக்கள்.
சுரன்

________________________________________________________________________

சில அகில உலக குற்றவாளிகள்.


இவர்கள் சர்வதேச காவல்துறையால் தேடப்படும் குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.




ஜாக்கின் குஷ்மன்[மெக்சிகோ போதை கடத்தல்]
அல் ஷவாகிரி[அல் கொய்தா தற்போதைய தலைவர்]

தாவூத் இப்ராகீம்[மும்பை குண்டு வெடிப்பு]

சிமியொன் மோகில்விச்[உக்ரேன் மாபியா]
மேட்டியோ மெசினொ[சிசிலியன் தாதா]
குபுகா[கென்யா]
ஜோசப் ரோ கோனி[உகாண்டா போராளி]
உமாரோவ்[ரசிய இசுலாமிய தீவிரவாதி]
_______________________________________________________________________


சுரன்
காமிராவில் தலை தெரியாமல் பாதுகாப்பு
சுரன்
நித்திக்கு எதிரான மடாதிபதிகள் கூட்டமா?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?