தண்ணீர் ,,,தண்ணீர்,,,,


போர்கள், மலேரியா, டெங்கு,எய்ட்ஸ் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக இறக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் அசுத்தமான நீரைப் பருகுவதன் காரணமாக இறக்கிறார்கள். இதுதான் இன்றைய அதிர்ச்சி செய்தி.
சுரன்

உலகின் அனைத்துப் பகுதிகளிலுமே குடிதண்ணீரின் இருப்பு குறைந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 75 %நதிகள்,ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. 

அந்த நீரைக் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாது. 70 கோடிக்கு மேலான இந்தியர்களுக்குபோதுமான சுகாதார வசதிகள் இல்லை.ஆண்டுதோறும் 21 லட்சம் குழந்தைகள் அசுத்தமான நீரைப் பருகுவதன் காரணமாகச் சாகின்றன. நாட்டின் தலைநகராகிய டில்லிக்கு குடிநீர் அளிக்கும் புகழ்வாய்ந்த யமுனாநதி கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்ட நதியாகும்.அதில் இப்போது கூவம் போன்று கழிவு நீர்தான் உள்ளது. மும்பை, சென்னை, கொல்கொத்தா நகர்களின் கடல்களில் அசுத்தமான துர்நாற்றமடிக்கும் கலங்கிய குழம்பு போன்ற நீர்தான் நிரம்பியுள்ளது. கோடிக் கணக்கான மக்கள் வழிபட்டு நீராடும் கங்கைநதியோ திறந்த பிரமாண்டமான சாக்கடையாக மாறிவிட்ட்டது.
நிலத்தடி நீர் பெருமளவில் காலியானதுக்கு காரணம் பசுமைப் புரட்சிஎன்ற பெயரில்பயிர்களுக்கு வெள்ளம் போல் நீர் பாய்ச்ச நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டதுதான். பசுமைப் புரட்சி காரணமாக உணவுத் தானியங்களின் உற்பத்தி கூடியது உண்மைதான். ஆனால் இதற்காக தண்ணீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது கூடவே ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் அபாயகரமான அளவிற்குப் பயன்படுத்தப்பட்டது.அந்த விஷத்தன்மை பூமியினூடாக சென்று நிலத்தடி நீரைவிஷமாக்கியுள்ளது. மேலூம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக தண்ணீர் நிலத்தடியிலிருந்துதான் உறிஞ்சி எடுக்கப் படுகிறது.ஆனால் இப்படி உறிஞ்சப்படும் நீர் மீண்டும் சுரப்பதற்கான வாய்ப்பே இல்லை.
உணவுத் தானியங்களை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நீர்  அந்த தானியங்களில் மறைந்துள்ளது என எடுத்துக்கொண்டால் கிட்டத் தட்ட ஆயிரம் கிலோ தண்ணீரை உள்வாங்கி ஒரு கிலோ நெல் உற்பத்தியாகிறது. இதுபோல் உணவுத் தானியங் களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நாடும் எந்த அளவிற்கு உள்வாங்கிய நீரையும் ஏற்றுமதி செய்கிறது என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! தண்ணீர் என்னவோ நேரிடையாக மற்றும் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

பெட்ரோலியம், காடுகள் மற்றும் கனிமப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாவது உலக நாடுகளின் நீர்வளங்களை மாசுபடுத்தி வருகின்றன. வரும்பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு இப்போதைக் காட்டிலும் மூன்று மடங்குத் தண்ணீர் தேவைப்படும். ஆனால் இப்போதே தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ள இந்தியா மேலும் அதிக தேவைக்கு என்ன செய்யும்.
இதுவரை இந்திய அரசு தண்ணீர் சேமிப்பு,அதிகரிப்பு தொடர்பான மேலாண்மையில் கவனத்தை கொண்டு செல்லவே இல்லை.கூறிக்கொண்டிருப்பதேல்லாம் வெறும் விளம்பத்துக்காகத்தான்.உண்மையில் நீர் சேமிப்புக்கு ஒன்றையும் செய்யவே இல்லை.
இந்திய அரசியல் தலைவர்கள்தனியாரிடம் தண்ணீரை கொடுப்பதன் மூலம், புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்தல் மூலம் நீர்பிரச்சினையை சமாளித்து விடலாம் என்று தனியார் நிறுவனங்கள் கூறும் பொய்களை நம்பி இருக்கிறார்கள். கூடவே குறைந்து வரும் உலகின் நீர்வளங்கள்பற்றி முடிவுகள் எடுக்கும் பொறுப்பினைத் தனியார் துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். இந்த நெருக்கடி அந்த நிறுவனங்களுக்கு குடிநீர் மூலம் மக்களிடம் கொள்ளை லாபத்திற்கான சம்பாதிக்கும் வாய்ப்பைத்தான் தந்துள்ளது.
சுரன்

இதற்கு முன்னர் இங்கிலாந்து,அமெரிக்கா உட்பட்ட நாடுகள் தண்ணீரைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன.அதற்கான கொள்கைகளும் ஐ.நா.சபை மூலம் உருவாக்கப்பட்டது[1970]அப்படி ஒப்படைக்கப்பட்ட தனியார் தண்ணீர் மேலாண்மை அந்நாடுகளில்வெற்றி பெறவில்லை.அத்துடன் மக்களின் வெறுப்பை அரசுக்கு பெற்று தந்ததுதான் மிச்சம். முக்கிய காரணம் தனியார் கம்பெனிகள் நீர் வினியோகத்தைச் சரியான முறையில் செய்யவில்லை என்பது நிரூபணமாகி உலகின் பல்வேறு நாடுகளிலும், உலக வங்கியிலும் அக்கொள்கைக்கு எதிர்ப்பு உருவாகியது. நீர் வினியோக நிறுவனங்களில் ஊழல் மலிந்திருந்தது. நீரின் விலை மிகவும் அதிகரித்து கோடிக் கணக்கான மக்களுக்கு நீர் கிடைக்காமல் போனது. நீரின் தரமும் சுத்திகரிக்கப்படாமல் மோசமாக இருந்தது. மாசடைதல் பிரச்சினைகள், ஊழியர்களின் வேலை பறிபோனது, ஒப்பந்த மீறல் போன்ற எண்ணற்ற காரணங்களால் தண்ணீரில் தனியார் நிர்வாகம் தோற்றுப் போனது.இது கடந்தகால வரலாறு.இதை அறியாதது போல் இந்திய மன்மோகன் சிங் அரசு தனியாரிடம் நீர் வழங்கலைத்தரப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறது.நல்ல ஆட்சியாளர்களும்-புத்திசாலிகளும் செய்யும் செயல் அல்ல. 
நீர் வினியோகத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத் தனியார் நிறுவனங்கள் துவண்டுவிட வில்லை. இப்போது அவர்கள் வேறு சில உத்திகளை மேற் கொண்டனர். நீர் சுத்திகரிப்பு, நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்தல், காற்று மண்டலத்திலிருந்து நீரை உற்பத்தி செய்தல், தண்ணீர் ஜெனரேட்டர்கள் போன்ற உத்திகளைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டன.உலகின் சமுத்திரங்களைச் சுற்றி உப்பகற்றும் எந்திரங்கள் நிறுவப்படும். பெருமளவிலான எந்திரங்கள் அணுசக்தியைக் கொண்டு இயக்கப்படும். சாக்கடைத் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு நுண்தொழில்நுட்பம் (நானோடெக்னாலஜி) பயன்படுத்தப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தத் தண்ணீரைப் பெரும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும். அத்தனியார் நிறுவனங்கள் நம்மிடம் அத்தண்ணீரை அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் அடிக்கும் எண்ணத்துடன் தற்போது பழைய குருடியாக திரும்பிவந்துள்ளனர்.
சுரன்

“1885-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் விட்டல் கிரேண்ட்” கம்பெனிக்கு கனிம நீரை (மினரல் வாட்டர்) கண்டெய்னர்களில் அடைத்து விற்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின் ‘பெர்ரியர் கம்பெனிக்கு’ அவ்வாறான உரிமம் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் 100 ஆண்டுகளுக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்டன. 1970களின் ஆரம்ப கட்டத்தில் ஏறக்குறைய 10 கோடி லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அடைத்து விற்பனை செய்யப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இந்நீரின் அளவு 2,000 கோடி லிட்டராக அதிகரித்தது. 320 கோடி லிட்டர் பயன்படுத்தும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. மெக்சிகோ நாட்டில் 200 கோடி லிட்டரும் சைனா மற்றும் பிரேசில் நாடுகளில் 140 கோடி லிட்டரும் ஜெர்மனியில் 125 கோடி லிட்டரும் விற்பனையாகின்றன.’
ஆகாயத்திலிருந்து விழும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து, பெட்ரோலைப் போல் நான்கு மடங்கு விலைக்கு அதை விற்பனை செய்யப்படுகின்றன. 
உலகளாவிய தண்ணீர்த் தொழில் சந்தை பெரியது . அமெரிக்காவின் தண்ணீர் சந்தையில் ஆண்டு தோறும் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.அதாவது 40,000 கோடி.
சுரன்

உலகின் அனைத்து நாடுகளிலும் நீர் வினியோகத்தைத் தனியார் கம்பெனிகள் ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்புத் தோன்றியுள்ளது. . லத்தின் அமெரிக்க நாடுகளாகிய நிக்காராகுவா, வெனிசுவேலா, பொலீவியா, அர்ஜெண்டினா, லி ஆகிய நாடுகளிலும், ஆசியா கண்டத்தில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்ட்ரேலியா நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா - மேலும் சில ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, கனடா, சில ஐரோப்பிய நாடுகளிலும் தண்ணீர் தனியார் மயமாகல் எதிர்ப்பு இயக்கம் உருவாகி போராட்டங்கள் நடத்தி வரூகின்றன.
இதில் இந்திய மக்களும் இணைய வேண்டும்.                                   
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக உலகெங்கிலும் மக்களுக்குப் புலம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அகதிகளை இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் சில பகுதிகள், சைனா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம். இப்போது கிராமங்கள்தான் காலியாகி வருகின்றன. எதிர்காலத்தில் பெரு நகரங்களையே மாற்றி அமைக்கும் சூழல் ஏற்படும். ஏமன் நாட்டின் தலைநகரமாகிய சானா, பாகிஸ்தான் நாட்டின் பலுச்சிஸ்தானில் அமைந்துள்ள கவெட்டா நகரங்களில் ஏற்கனவே அவ்வாறு ஆகிவிட்டது. சைனா நாட்டில் உள்மங்கோலியா, நிங்க்ஸியா மற்றும் கான்சு மாநிலங்களில் பாலைவன அகதிகள் உருவாகி வருவதை அந்நாட்டு விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் நாலாயிரம் கிராமங்கள் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்தும் மக்கள் வெளியேற எண்ணியுள்ளனர்.
. பாலைவனப் பகுதியின் பெருக்கம் மற்றும் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக இரான் நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகி வருகின்றன. நைஜீரியா நாட்டில் ஆண்டுதோறும் 3500 சதுர கிலோ மீட்டர் அளவிலான நிலப்பகுதி பாலைவனமாக மாறிவருகிறது. பாலைவனமாதல்தான் அந்நாட்டின் தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஏனைய நாடுகளைப் போலவே நைஜீரியாவிலும் விவசாயிகள் வளர்ந்து வரும் பெரும் நகரங்களின் எல்லைப் பகுதிகளில் குடியேறி சேரிகளை உருவாக்கி வருகிறார்கள். இது அங்கு நிலவும் தண்ணீர் நெருக்கடியை இன்னமும் மோசமாக்கியுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் ஆங்காங்கே சிறு,சிறு குளங்களை வெட்டிவைப்பதாலும்.குடியிருப்பு பகுதிகளிலும் சிறு குட்டைகள் உருவாக்க இடம் ஒதுக்குவதன் மூலம் நிலத்தடி நீரை மழை நீர் சேமிப்பு மூலம் அதிகரிக்கலாம்.
இருக்கிற நீர் நிலைகளை அரசியல்வாதிகளும் மற்றையோரும் ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டுவதி விட்டு ஆழப்படுத்திடலாம்.
குளம் ,கண்மாய் பகுதிகளில் சமுகக்காடுகள் என்ற பெயரில் உடை மரங்கள், கரு வேலம் மரங்களை வளர்ப்பதினால் நிலத்தடி நீர் மட்டுமின்றி காற்றில் உள்ள நீர் பதத்தையும் உறிஞ்சி விடுகின்றது.எனவே இப்படி கருவேல மரக்காடுகளை வளர்ப்பதை நிறுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் நீரோடைகளின் மூலம் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை தடுத்து வழிமாற்றிவிடுவதன் மூலமும்,ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நல்லநீரை புது நீரோடைகள் மூலம் மக்கள் பகுதியில் சுற்றி வரவைப்பதன் மூலமும் எவ்வளவோ நீரை சேமிக்கலாம்.
சுரன்

வீடுகள்,அலுவலகங்கள்,தொழிற் சாலைகளில் கட்டிடங்கள் போக மீதமுள்ள இடங்களை மணலாக விடுவதன் மூலம் மழை நீர் பூமீயில் இறங்கி சேகரமாக உதவும்.
எப்படியோ தண்ணீர் சேகரிப்பை அதிகரிப்பதன் மூலம்தான் மக்கள் தேவையை தீர்ப்பதுடன் நீருக்காக உருவாகும் போரில் இருந்தும் தப்பிக்கலாம்.


________________________________________________________________________

சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?