மூன்றாவது மனிதன்?


அமெரிக்காவின் மக்களிடம் கருத்து கணிப்பை பெற்று வெளியிடும் கோல் – அப் (Gol-up) நிறுவனம் ஆசியா கண்டத்தில் உள்ள சின்ன நாடுகளில் கருத்துக்கணிப்பு செய்துள்ளதாம்.இந்த ஆய்வின் படி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயல்பாடுகளுக்கு இலங்கை மக்களில் 91 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிந்துள்ளது.
சுரன்

6 சதவீதமான மக்கள் ஜனாதிபதியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரித்துள்ளனர்.
3 சதவீதமான மக்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
21 ஆசிய நாடுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில், மக்கள் ஆதரவு அதிகமுள்ள ஆட்சியாளர்களில், இலங்கை ராஜ பக்‌ஷே 3வது இடத்தை பெற்றுள்ளார்.
டைம் இதழில்தான் இடம் பெற முடியவில்லை.இதிலாவது மூணு கிடைத்ததே?
இந்த ஆய்வின்படி முதல் இடத்தை லாவோஸ் நாட்டின் தலைவர் சொம்மாலி செயிக்நசன் பெற்றுள்ளார், இரண்டாவது இடத்தை காம்போடியாவின் ஜனாதிபதி ஹன்சென் பெற்றுள்ளார்.
________________________________________________________________________
மதிப்பிழக்கும் ரூபாய்.
இந்திய ரூபாயின் மதிப்பு சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. புதன்கிழமையன்று இடம்பெற்ற டாலருக்கெதிராக  என்றுமில்லாதளவு குறைந்துள்ளது.
55.39 ரூபாயிலிருந்து 55.89 ரூபாயாக இது வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கமானது இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாமென நம்பப்படுகின்றது.
சுரன்

உலகளாவிய பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதமும் குறைந்துவருவது இந்த அச்சத்தினை இன்னும் அதிகரித்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரூபாய் கடந்த வருடம் ஆகஸ்டிலிருந்து வீழ்ச்சியடைந்துவருகின்றது. இது டாலருக்கு எதிராக 26 %வரை குறைந்துவிட்டது.
இந்தியரிசர்வ் வங்கியானது இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் டாலர்களை விற்பதன்மூலம் பணவீழ்ச்சியைத் தடுக்கமுயற்சிக்கும் என்று தெரியவருகிறது.
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிநாட்டு நாணயமாற்றுச் சந்தையில் சமநிலையற்ற தன்மையை நீக்கி ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசு செய்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மாத ஆரம்பத்தில்தான் மத்திய வங்கி பணவீழ்ச்சியைத் தடுத்துநிறுத்தும் முயற்சியில் ஏற்றுமதியாளர்களை அவர்களது வெளிநாட்டு நாணயமாற்றின் 50 வீதமானவற்றை இந்திய ரூபாய்களாக்குமாறு கேட்டிருந்தது.
சுரன்

அத்துடன் ஏற்றுமதியாளர்கள் தங்களது கணக்குகளிலுள்ள வெளிநாட்டு நாணயங்களனைத்தையும் ரூபாயாக மாற்றிய பின்னரே ஏனைய வெளிநாட்டுப் பணத்தினை வாங்க அனுமதிக்கப்படுவரென்றும் அது தெரிவித்திருந்தது.
ஆனாலும்இதனால் ரூபாயின் வீழ்ச்சியை இதுவரை தடுக்கமுடியவில்லை .
பெட்ரோலிய பொருட்கள் விலையை அதிக அளவில் உயர்த்திக்கொண்டே போவது.விலைவாசி உயர்வைத்தான் உண்டாக்குகிறது.அதன் மூலம் பணத்தின் மதிப்பு கீழிறங்கிகொண்டேதான் போகிறது.ஆனாலும் பெட்ரோல் உட்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க பிரணாப்முகர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை ஒன்றும் நடக்காது.ரிசர்வ் வங்கி வேறு தனது பங்குக்கு வட்டி விகிதத்தை ஏற்றிஅது சரிவரவில்லை என்று குறைத்து குழப்பிக்கொண்டிருக்கிறது.
ஒரு பொருளாதார மாமேதையை பிரதமராக வைத்துக்கொண்டு இப்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்த திணறலாமா?
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?