ஆதாயம் தந்த வம்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிபற்றி வரும் செய்திகள் அவர் இந்தியாவின் உயரிய பதவிக்கு தகுதியானவர்தானா என்ற சந்தேகம் வருகிறது.
அவர்   ஆதாயம் தரும் பதவியான, இந்திய புள்ளியல் நிறுவன தலைவர் பதவியிலிரிருக்கிறார் என்று முதலில் குற்றசாட்டு எழுந்தது ஆனால் அதில் இருந்து விலகியதாக கூறி எழுதப்பட்ட கடிதத்தில் இருந்த கையெழுத்து போலியானது  என்ற  குற்றச்சாட்டு வந்துள்ளது. 
சுரன்
இப்போது குற்ற சாட்டுவதற்கென்றே உள்ள தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரணாப்முகர்ஜிக்கு எதிராக புதிய குற்றச் சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
பிரணாப்முகர்ஜி, இன்னமும் 2 ஆதாயம் தரும் பதவிகளில் உள்ளார். அந்தப் பதவிகளை விட்டு இன்னமும் விலகவில்லை என்று  கூறியுள்ளார்.
 மற்றொரு குடியரசுத்தலைவர் வேட்பாளர்  பி.ஏ. சங்மா சார்பாக  ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்பட 3 பேர் கொண்ட குழு,  தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து   "தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர் மீது அதிருப்தி தெரிவித்தும்
 பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் 2 பதவிகளில் இன்னும் தொடர்கிறார்.
சுரன்


 பிர்பும் என்ஜினீயரிங்  மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி துணைத் தலைவராகவும், ரவீந்திரநாத் பாரதி பல்கலைக்கழகத்தில் உள்ள  ரவீந்திர பாரதி சொசைட்டியின்  தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவை ஆதாயம் தரும்  பதவிகள் ஆகும்.இந்த பதவிகளை இன்னும் அவர் விட வில்லை.எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் மனு கொடுத்துள்ளனர்,
இந்த குற்ற சாட்டுகளுக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறதோ?
மற்ற தேர்தல்களைப்போல் அல்ல.குடியரசுத் தலைவர் தேர்தலில் இது போன்ற ஆதாயம் தரும் பதவிகள் விவகாரத்துக்கு இடமில்லை என்று தீர்ப்பு வெளியாகலாம்.
ஆனால் இது போன்று வரிசையாக பிரணாப் குற்ற சாட்டுகளில் சிக்கி முழிக்கிறார்.
இன்னமும் ஏதாவது பதவிகளில் பிரணாப் ஓட்டி ஆதாயம் அடைந்து கொண்டிருந்தால் சுப்பிரமணியன் சுவாமி கண்ணில் படும் முன் விலகி வைக்கவும்.
____________________________________________________________________________________________________________


ராமதாசின் அன்பு[மணி]மகன்_
இதுவும் ஆதாயம் பெற்றதால் வந்த வம்புதான்.


அன்புமணி உள்பட 10 பேர்களுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் வரக்கூறிசம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அன்புமணி நீதிமன்றம் பக்கம் எட்டி பார்க்கவேயில்லை. 

இதனால் நீதிபதி தலவந்த்சிங் அன்புமணிக்கு பிணையில் வரக் கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வருகிற 20-ந்தேதி பிடித்து முன்னிலை படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்பா ராமதாசு ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் தகுதியுடன் தைலா தோட்டத்தில் இருக்கிறார்.கையில் சாட்டையுடன் நீதி-நேர்மையை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.ஆனால் அவரின் அன்பு[மணி]மகன் பிடி வாரண்டுடன் அலைந்து கொண்டிருக்கிறார்,
சுரன்


அன்பு மணி குடும்பமே நியாயத்துக்கும்,நீதிக்கும் போராடும் போராளிகள்.அவர் மீது சிபிஐ வழக்கு தொடுத்தது பற்றிய விபரம் அறிந்து கொள்வோம்.
மத்திய சுகாதார துறைக்கு முன்பு அமைச்சராக வேலை பார்த்த  அன்புமணி. அப்போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தகுதியற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு அதிகாரத்தை வளைத்து முறையற்ற அனுமதி அளித்ததாக  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. 
முறையற்ற அனுமதி வழங்கல் என்றாலே அங்கு பண நடமாட்டம் இருந்திருக்க வேண்டும்.
இது தொடர்பான வழக்கில் அன்புமணி, தற்போது மத்திய அமைச்சரவை செயலகத்தில் துணை செயலாளராக இருக்கும் கே.வி.எஸ்.ராவ் (அன்புமணி பதவியில் இருந்த போது மத்திய சுகாதார துறை துணை செயலாளராக இருந்தார்), சுகாதார அமைச் சகத்தின் பிரிவு அலுவலர் சுதர்ஷனகுமார், சப்தர் ஜிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ்.தூபியா, திபேந்திரகுமார், இந்தூர் இன்டெக்கில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதோ ரியா, கல்லூரியின் முன்னாள் டீன் டோங்கியா, மருத்துவ கல்லூரி இயக்குனர் சக்சேனா, நிதின் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 27-ந்தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதது. 
சுரன்

கே.வி.எஸ்.ராவ் தற்போது அரசு உயர் பொறுப்பில் உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கடந்த மே  மாதம் 16-ந்தேதி  கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்து சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தலவந்த்சிங் இந்த வழக்கு விசாரணையை ஜுலை 7-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார். 
ஆனால் அதில் அன்புமணி நீதிமன்றம் பக்கம் போகாததால்தான் இந்த பிடியாணை.
____________________________________________________________________________________________________
சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?