[நில] மோசடி அரசியல்..............

திமுக நடத்திய சிறை நிரப்பு போராட்டம் மக்களை ஏமாற்றும் போராட்டம் என அறிக்கை விடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெய லலிதா, நிலப்பறிப்பு புகார்கள் முந்தைய திமுக ஆட்சியின் போதே பொதுமக்க ளால் கொடுக்கப்பட்டிருந்தன.

 அதிமுக அரசு அமைந்த பின்பு தேர்தல் நேரத் தில் கொடுத்த வாக்குறுதியின் படி முந் தைய திமுக ஆட்சியில் நிலப்பறிப்பு கார ணமாக நிலங்களை இழந்தவர்க ளுக்கு அவற்றை மீட்டுக்கொடுக்க நடவ டிக்கை எடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
சுரன்


 “பெறப்பட்ட 34, 703 புகார்களில் இதுவரை 1,225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,229 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர். ரூ. 758.04 கோடி மதிப்புள்ள 1,317.15 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் மீட்கப்பட்டு நில உரிமைதாரர்களிடம் வழங்கப்பட்டுள்ளன” என உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் (2012-2013) கூறப்பட்டுள்ளது. அரசியல்வாதி கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 86 எனவும், அதில் திமுகவினர் மீது மட்டும் 42 வழக்குகள் பதிவாகியுள்ள தாகவும் அரசு தகவல் தெரிவிக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்கள் எத்தனையோ கற்பனைகளை சொல்வார்கள். அதற்கு பதில் கூறமுடியாது என்று கூறி யுள்ளார். நிருபர்கள் விடாமல், அங்கம் மாள் காலனி பிரச்சனை குறித்து கேட் டதற்கு, அந்த பிரச்சனை குறித்து திமுக ஆட்சியில் மாவட்ட அதிகாரிகள் விசா ரணை நடந்தது எனவும், அதற்கு பிறகு ஆட்சி மாறியதால் ஆட்சியாளர்கள் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக வழக்கைத் திருப்பி விட்டார்கள்.சிறுதாவூர்,கொட நாடு என்று ஜெயலலிதா மீதே நில அபகரிப்பு குற்றசாட்டுகள் உள்ளது.அதன் நிலை என்ன? என்று பதிலளித்துள்ளார். 
சுரன்


திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது அங்கம்மமாள் காலனி நில ஆக்கிர மிப்பு, பிரிமியர் மில் நில அபகரிப்பு, தாசநாயக்கன்பட்டி பாலமோகன் ராஜ் நில அபகரிப்பு, கோயம்புத்தூர் ஜூவல் லரி உரிமையாளர்களின் நில அபக ரிப்பு, அக்ரோ கூட்டுறவு சங்க நில அப கரிப்பு என ஐந்து நில அபகரிப்பு வழக் குகள் தொடுக்கப்பட்டன. இதனுடன் கடந்த ஜூன் 2ம் தேதி நள்ளிரவு அங் கம்மாள் காலனியில் போடப்பட்டிருந்த குடிசைகளை அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவத்தில் ரவுடிகளை ஏவி விட்டதோடு, கூட்டுச் சதி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி வெளியானது.

அங்கம்மாள் காலனி பிரச்சனை திமுக ஆட்சியிலேயே துவங்கிவிட்டது. பல ஆண்டுகளாக அங்கு இருந்த 25 குடும்பங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் மோசடியான நிலப்பதிவு மூலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந் தது. 2007ஆம் ஆண்டில் இந்த இடத் திற்கு மோசடியாக பத்திரம் தயார் செய்து, போலி ஆவணங்களை பதிவு செய்து, அதிகார பலத்தை பயன்படுத்தி 2008ல் அங்கு குடியிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். அங்கு குடியிருந்த 25 குடும்பங்களில் 2 குடும்பங்கள் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கிவிட்டன. 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பாதிக்கப்பட்ட 23 குடும் பங்களுக்கு அந்த இடத்தை 14 நாட்க ளுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டு மென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் 17.7.2008ல் அங்கம் மாள் நகர் சம்பந்தப்பட்ட பள்ளபட்டி காவல்நிலைய ஆய்வாளரும் 7.8.2008 சேலம் வருவாய் கோட்டாட்சியரும், அந்த 25 குடும்பங்கள் அங்கு இல்லை எனவும், அந்த இடம் கவுசிக பூபதி என்பவருக்கு சொந்தமானது என்றும் தன்னிச்சையாக ‘தீர்ப்பு’ எழுதினர். கவுசிக பூபதி, வீரபாண்டி ஆறுமுகத்தின் நேரடி உதவியாளர்.
சுரன்



இதைத் தான் அதிகாரிகள் விசாரித்து வந்ததாக திமுக தலைவர் கருணா 

நிதி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் அதிகாரிகள் விசாரித்த லட்சணம் இதுதான். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 23 குடும்பத்தினர் மீண்டும் அங்கு குடியேறி னர். அவர்களது வீடுகள் ஜூன் 3ம் தேதி அடித்து நொறுக்கப்பட்டன.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணித் தலைவர்கள் மீது நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த புகார்களில் பல, திமுக ஆட்சியில் இருந்த போதே தரப்பட்டு காவல்துறையினரால் கண்டுகொள்ளப்படவில்லை என்பதிலும் புகார் தந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்பதி லும் உண்மை இல்லாமல் இல்லை.
சுரன்


ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதும் நிலப்பறிப்பு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடும் இல்லை.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் கிராமத்தில் 213 விவசாயிகளுக்கு சொந்த மான 915 ஏக்கர் நிலத்தில் 542 ஏக்கர் நிலத் தை பி.செல்வம் மற்றும் அவரது சகோதரர் கள் சண்முகம், சங்கரன் ஆகியோர் பினாமி கள் பெயரில் மோசடி செய்தனர். செல்வம் சகோதரர்களில் ஒருவர் ஆளும் அதிமுக வின் ஒன்றியச் செயலாளர்.

2009ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் காரணமாக மோசடியாக பெற்ற பட்டாக்கள் ரத்து செய்யப் பட்டன. 2010ம் ஆண்டு வெள்ளத்தால் சாகு படி பாதிக்கப்பட்டபோது நிலமோசடி செய்த செல்வம், விவசாயிகளுக்கு வரவேண்டிய வெள்ள நிவாரணத் தொகையையும் மோசடி செய்து ரகசியமாக வாங்கிக் கொண்டார். மார்க் சிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாகவே பிறகு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தொகை கிடைத்தது.
சிறுதாவூர் பங்களா.


இதனால் ஆத்திரமடைந்த செல்வம் சமூக விரோதிகளை ஏவிவிட்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசச் செய்தார்.

சட்டமன்றத்தில் கட்சியின் எம்எல்ஏக்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். அதன் பிறகே சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

கோவில்பட்டி நகரத்தில் 1960ம் ஆண்டு பொதுமக்களிடம் நிதிவசூல் செய்து அறக்கட் டளை உருவாக்கி, 4 ஏக்கர் நிலம் ஹாக்கி மைதானமாக உருவாக்கப்பட்டது. இதை அன்றைய லட்சுமி மில் மேலாளர் பராமரிப்பது என்ற அடிப்படையில் பொதுநல அறக்கட்ட ளையாக பதிவு செய்யப்பட்டது.

இன்றைய லட்சுமி மில் மேலாளர், அறக் கட்டளை நிர்வாக மேலாளர் என்ற முறையில் ஹாக்கி மைதானத்தை சில சமூக விரோதி களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய் தார்.
கொடநாடு ஜெ அரண்மனை


 இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மைதானம் ஹாக்கி மைதானமாகவே தொடர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட் டது. இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோதி கள் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசினர். ஹாக்கி மைதான நில மோசடி யில் சம்பந்தப்பட்டவர்கள் முன்பு திமுகவில் இருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இன் றைய ஆளும் கட்சியான அதிமுகவில் சேர்ந்து விட்டனர்.

தெய்வச்செயல்புரம் பிரச்சனையில் இன் றைய ஆளுங்கட்சியைச் சார்ந்த பலரும் சம் பந்தப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலையில் சமூக சேவகரான ராஜ்மோகன் சந்திரா கிரிவலப்பாதையில் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் 26வது வார்டு அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன், அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் போலீசில் சரணடைந்துள்ளனர். சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா, அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன் மீது நிலமோசடி உள் ளிட்ட புகார்களை போலீசாரிடம் கொடுத்துள் ளார். தனது உயிருக்கு வெங்கடேசன் மூலம் ஆபத்துள்ளது என்றும் ராஜ்மோகன் சந்திரா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சுரன்



இதே வெங்கடேசன் வகையறாக்கள்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபத்திரனை கூலிப்படையை வைத்து தாக்கியவர்கள். வெங்கடேசன் நில மோசடியில் ஈடுபட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதனால் ஆத்திர மடைந்த வெங்கடேசன் கும்பல் தோழர் வீரபத் திரனை தாக்கியது.

இந்த தாக்குதல் தொடர்பாக வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், போலீசார் அவரை தேடி வருவதாக கூறிவந்த னர். அவர் முன் ஜாமீன் பெற்று திருவண்ணா மலை டவுன் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத் திட்டு வந்தார்.

அப்படியிருக்கும்போதுதான், வெங்கடேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையால் ராஜ் மோகன் சந்திரா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நிலமோசடி மற்றும் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய கவுன்சிலர் வெங்கடேசன் அதிமுகவிலிருந்து நீக்கப்படவில்லை. 
சுரன்


அவர் மீது அந்தக் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில்தான் ராஜ்மோகன் சந்திரா படுகொலை நடந்துள்ளது.

நில மோசடி புகார்கள் அதிமுகவினர் மீதும் தற்போது பரவலாக எழுந்து வருகிறது. அவர்கள் மீது இன்றைய அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மணல் கடத்தல் என்பது முந்தைய திமுக ஆட்சியை விட இன்றைய அதி முக ஆட்சியில் தங்குதடை யின்றி நடைபெற்று வருகிறது. மணல்கடத் தலை தடுத்தவர்கள் சிலர் (அதிகாரிகள் உள்பட) படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சுரன்

நிலமோசடியை பொறுத்தவரை திமுக வினர் மீது தொடரப்படும் வழக்குகள் போல அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிமுக வினர் மீதும் தொடுக்கப்படுமா?இதுவரை இல்லை என்பதுதான் தமிழக மக்கள் அறிந்த உண்மையாகும்.

தமிழக மக்களின் பெரும்பகுதியினர் குடி மனைப்பட்டா கேட்டு பன்னெடுங்காலமாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பட்டா தருவதில், உபரி நிலத்தை பிரித்து விவசாயத் தொழிலாளர்களுக்குத் தருவதில் ஆட்சியில் இருந்த திமுகவும் சரி, ஆட்சியில் இருக்கும் அதிமுகவும் சரி அக்கறை காட்டவில்லை என் பதே உண்மையாகும். மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. இரு கட்சியினர் மீதும் நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. ஆட்சியில் இருக்கும் போது ஒன்று; எதிர்க்கட்சியாய் இருக்கும்போது ஒன்று என்ற இருவித அணுகுமுறையையே இருகட்சிகளும் ஒரே மாதிரி பின்பற்றி வரு கின்றன.
_____________________________________________________________________________
விஸ்வரூபமும்,அடுத்து வந்த ஹாலிவுட் படமும்  உலக அளவில்  வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்க அரிசோனா மாநில நகரில் கமல்ஹாசன் ரசிகர்கள் வெற்றி ஊர்வலம் சென்ற போது எடுக்காத படம்.
சுரன்
 இப்படி நடந்தால் எப்படி இருக்கும்.?உலக அளவில் தமிழ்சினிமா பேசப்படுமா?
________________________________________________________________________________

இங்கிலாந்து ‌மழைக்காடுகளில் புதிதாக  மரத்தவளை இனம் 2008 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பெயரை வைத்துள்ளனர்.
தவளை சார்லசுடன் -இளவரசர்
சார்லஸ்.

சார்லஸ் மழைக்காடுகள் மற்றும் அங்கு வசித்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். அத்தொண்டைசிறப்பிக்கவும்,அங்கீகரிக்கவும் 2008ம் ஆண்டில் டாக்டர் லூயிஸ் கொலாமாவால் கண்டுபிடிக்கப்பட்ட மரத் தவளைக்கு இளவரசர் சார்லஸ் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?