ப சி [தம்பர] பேச்சு.....


சுரன்

அரிசி, கோதுமை, சர்க்கரை விலைகள் படிப்படியாகத்தான் உயர்ந்து 
வருகின்றன. நடுத்தர மக்கள் தண்ணீர் பாட்டிலை ரூ 15-க்கும் ஐஸ்கிரீமை ரூ 20-க்கும் வாங்க முடியும்போது மற்ற பொருள்களின் விலை உயர்வுக்கு ஏன் கூச்சலிடுகின்றனர் என சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.




விலை உயர்வால் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுகிறார்கள். எரிபொருள் விலை ஏற்றப்படுவது சர்வதேச சந்தையைப் பொறுத்தது. பெட்ரோல் விலையை இரண்டு முறை குறைத்து நிவாரணம் அளித்துள்ளோம் என்றும்
 சிதம்பரம் கூறியுள்ளார்.
இவரது பேச்சு பரபரப்பானதும் .தான் அப்படி சொல்லவில்லை.ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளதாக புலம்பியிருக்கிறார்.
நியாயம்தானே.மக்கள் கொழுத்துபோய் இவர்களை போன்றவர்களுக்கு வாக்களித்து விலைவாசிகளைக் குறைப்பார்கள் என்று கனவு கண்டு கோண்டிருந்தால் இவரை போன்ற அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களும் ஆளுங்கட்சிகளும் என்ன செய்ய முடியும்?
இவர்கள் கையில் விலைவாசியை குறைத்திடும் மந்திரக்கோல் இல்லை என்று முன்பே கூறி விட்ட பின்னரும் இவர்கள் ஆட்சியில் விலைவாசிகள் குறையும் என்று எதிர் பார்ப்பது நமது தவறுதானே.
குடி நீரையே விலைக்கு வாங்க வைத்துள்ள இவர்கள் அரிசி,கோதுமையை மட்டும் விட்டு விடுவார்களா?
குடிநீர் விநியோகத்தையும் தனியாரிடம் விட்டு, விட்டு அமைச்சர்கள்  என்ற பொறுப்பு ஒன்றும் இல்லாமல் பதவி சொகுசை மட்டும் அனுபவிக்கும் காங்கிரசு ஆட்சியாளர்கள் இப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம்.
சோறு கிடைக்காவிட்டால் கேக் சாப்பிடுங்கள் என்றும் தஞ்சையில் தங்கள் ஆட்சிகாலத்தில் எலி சாப்பிடுவதை பற்றி உடலுக்கு நல்லது என்றும் கூறிதானே தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்து இன்னமும் திராவிட கட்சிகளின் தயவால் மட்டுமே தேர்தலை சந்திக்கும் நிலைக்கு காங்கிரசு வந்துள்ளது.
அதை தமிழ் நாட்டை சேர்ந்த சிதம்பரமே மறந்து விட்டு பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
தங்கள் ஆட்சியில் பொதுவான தண்ணீரை கூட காசுக்கு வாங்கவைத்ததுதானே இவர்கள் சாதனை.
விற்பனை வரியை ராஜாஜி காங்கிரசு ஆட்சிக்காலத்தில் அரசு வருமானத்தை உயர்த்த கொண்டுவந்தார்.
சுரன்

அதை விட அதிகாமாக சிந்தித்து சிதம்பரம் சேவை வரியை கொண்டு வந்து மக்களிடம் உள்ள் பணத்தை எல்லாம் சுரண்டுகிறாரே.
இன்னமும் இவர்கள் இறந்தவர்களை புதைக்கும் செலவினத்திற்கு மட்டும் தான் சேவை வரியை அறிவிக்க வில்லை.
இதை படித்து விட்டு அதற்கும் வரியை கொண்டுவந்து விடாமல் இருந்தால் சரிதான்.
விலை உயர்வால் விவசாயிகள் பலன் பெறுகிறார்களாம்.
அப்புறம் ஏன் விவசாயத்தை விட்டு பலர் விலகி வருகிறார்கள்.விவசாய நிலங்கள்  வீட்டு மனைகளாக விற்கப்படுகின்றன.
அத்தனைக்கும் மேலாக விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
விவசாயப் பொருட்களை எல்லாம் பணக்கார வியாபாரிகள் கும்பல் வாங்கி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால்தானே  இங்கு விவசாய விளைப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது.
குறிப்பிட்ட தொழிலதிபர்கள் மட்டுமே கொழுத்துக்கொண்டு சுவிஸ் வங்கியில் பணத்தை சேர்த்துக் கொண்டே போகிறார்கள்.விவசாயி உரம் விலை கூட கட்டுப்படியாகாமல் செத்துக்கொண்டிருக்கிறான்.
இவ்வளவையும் சிதம்பரம் அறியாதவரா?
அடுத்த தலையாட்டும் காபந்து பிரதமராக சோனியா சிதம்பரத்தை தேர்ந்தெடுத்திருப்பதே இது போன்ற பண்ணாட்டு நிறுவன அடிமைத்தனத்திற்காகத்தானே?

ஆனால் அடுத்த தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இருப்பதாக தெரியைல்லை.
மத்திய உளவுத்துறை இப்போது தேர்தல் நடந்தால் இந்தியாமுழுக்க காங்கிரசுக்கு 80 இடம் கிடைத்தால் பெருசு என்று சோனியா காதில் போட்டு வைத்துள்ளது விரைவிலேயே உண்மையாகப்போகிறது.
சிதம்பரம் அந்த கடுப்பில்தான் நீரோ போல் பேசுகிறாரோ?
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?