கோவையில் சுற்றிய ஒருவன்

அல்லது கோவை தெருவை திரும்ப,திரும்ப சுற்றிய ஒருவன்.
கோவை.
நான் பேருந்தில் போகும் போதெல்லாம் விசாலமான சாலைகளும் பெரிய வணிக வளாகங்களுமாகத்தான் தென்பட்டது,

மக்கள் வசிக்கும் வீடு பகுதிகள் கண்ணால் நான் பார்த்ததாக தெரியவில்லை.
நான் தேர்ந்தெடுத்து சென்ற பாதை அமைப்பு அப்படியாக இருக்கலாம்.
 சென்னை யை விட சற்று விலைவாசிகள் அதிகம் போல் தெரிகிறது.
5 ரூபாய்க்கு தேநீரும்,காபியும் குடித்துப் பழகிய எனக்கு 20,10 என்று விலை கொடுத்து குடித்த தேநீர் அதற்கே உரிய புத்துணர்ச்சியும்,சுவையும்.திடமும்,தராமல் போய் பர்சு விரைவாக மெலிவது பற்றிய கவலைதான் அது தந்தது .
சில பொருட்களின் விலை எங்களூரை விட பன்மடங்கில் இருந்தது.
அதைப் பற்றிக்கூறி கோவை நண்பரகள் வயிற்றெரிச்சலை கட்டிக்கொள்ள ஆசை இல்லை.

கோவை நண்பர்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?
சென்னையில் சேரிகள் அடிக்கடி நாம் போகும் பாதையில் இடறும் கோவையில் கவனமாக தவிர்க்கப் பட்டிருப்பது போல் தெரிந்தது.
கோவை வாசிகள் இயற்கையிலேயே அமைதியானவர்கள் -மரியாதை தருபவர்கள் என்று கேள்வி பட்டிருந்தேன்.
நான் சந்தித்தவர்கள் அப்படித்தான் இருந்தனர்.
ஆனால் நான் செல்லும் போது பேருந்தை மறித்து கோசங்கள் எழுப்பிய இந்து முன்னணி ஊர்வலத்தைப்பார்த்ததும் அது பற்றி சந்தேகம் எழும்பியது.
காரணம் அவர்கள் கோசம் அவ்வளவு மதவெறியை கிளப்பும் இந்தப்படை போதுமாவாக இருந்தது.
ஆனாலும் அவ்வளவு கூட்டம் கொண்ட ஊர்வலம் இங்கே நடந்தால் நிச்சயம் சில கல்வீச்சுகளும்,எதிர் தரப்பினர் இடம் பக்கம் அசிங்கமான கோசங்களும் இருந்திருக்கும்.
சில பேருந்துகள் தங்களின் கண்ணாடிகளை முன் பக்கமாகவோ-பின் பக்கமாகவோ இழந்திருப்பது நிச்சயம்.
சுரன்

ஆனால் அங்கே அது இல்லை.அது கூட எனக்கு ஊர்வலம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.இப்படி பட்ட ஊரில் முன்பு அத்வானி வருகை வெடிகள்-உயிர் இழப்புகள் எப்படி வந்து சேர்ந்தது.?அதை மறப்போம்.
மற்றபடி ஒரு பிரபல துணிக்கடையில் மக்கள் போய் வருவதையும் அவ்வளவு பேர்களும் கணபதி சில்க்ஸ் என்ற பைகளை சுமந்து வருவதையும் பார்த்தால் என்னவோ இலவசமாக வாங்கி வருவது போல் அப்படி நெரிசல்.
கவலையுடன் வெளியே காபி குடித்து விட்டு காத்திருக்கும் ஆண்கள் சிலரின் கண்களில் ATM  அட்டைகளின் கவலை அவ்வப்போது தோன்றுவது போல் எனக்கு தெரிந்தது.அது பிரமையாகக் கூட இருக்கலாம்.
ஆனால் அடுத்த நாள் எனக்கு அதே நிலை வந்த போது நிச்சயம் அந்த பார்வையின் அர்த்தம் புரிந்து போனது.
சுரன்

நல்ல வேலை அல்லது வேளை வந்ததால் உடனே புறப்படும் வாய்ப்பு வந்ததால்,வந்த வேலை முடிந்ததால் அறையை காலி செய்து விட்டு அவசரமாக மனைவியி கண்ணில் கடைகள் படாத இடமாக முன்பே பார்த்து வைத்த வழியில் ஊர் வந்து சேர்ந்தோம்.
அது சரி வெளியூர் காரர்கள்தான் ரெயில் நிலையம்,பேருந்து நிலையம் தேடி போவார்கள் .அதை பேருந்து நடத்துபவர்கள் சரியாக இடத்தை சொல்லி விசிலடிக்க வேண்டாமா?

"ரெயில் நிலையம் தெரியாத நான் மூட்டை,-ஜிப்புகளுடன்[முடிச்சுகள் இப்போது யார் போட்டு வருகிறார்கள்] பேருந்தில் ஏறி ரெயில் நிலைய நிறுத்தத்தை கண்டிப்பாக எனக்கு சொல்லுங்கள்.இரங்கணும். என்றே.அரைமனதாக ஓட்டுனர் தலையைசைத்ததுபோல் தெரிந்தது.
ஒவ்வோரு நிறுத்தமாகக் கூறியவர் கே.ஜி இறங்குங்கள் என்றார்.நான் கேஜியைத்தான் இறங்கச்சொல்லுகிறார்.நாம் ரெயில் நிலையம் அல்லவா.என்று இருந்து விட்டுபேருந்து கிளம்பியது தலையை நீட்டி வலப்பக்கம் பார்த்தால் ரெயில நிலையன் செட்டிங் போல் தெரிந்தது பக்கத்தில் உள்ளவரிடம் இது என்ன ரெயில் நிலையமா என்றேன் .அவர் என்னைப் பார்த்ததில் 'அட பட்டிக்காடே?' என்று எழுதியிருந்ததைப் பார்த்து விட்டேன்.
சுரன்

அவர் ஆமாங்க.நீங்க இறங்கலியா? என்றார்.ஓட்டுனரை முறைத்து பார்த்து இறங்கிய போது "சொல்லவில்லையே "என்றேன்.

அவரோ பதில் சொல்லும் முன் அதே பக்கத்து ஆள் 'சொன்னாருங்க"என்றார்.
"நான் நன்றாக கவனிச்சேன் அவர் கேஜோ என்னவோதானே சொன்னார்"
ஆமாங்க அது ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பிரபல ஓட்டல் பெயருங்க.அந்த ஓட்டலுக்கு எதிரேதான் அந்தரெயில் நிலையம் உள்ளது."என்றார்.
வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு. மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்தவழியே திரும்பி நடந்தால்  ரெயில் நிலையத்தை தவிர மற்றவை எல்லாம் வந்தது.
சந்தேகத்துடன் வழிப்போக்கர் ஒருவரை விசாரித்தேன்.
அவர் நீங்க வந்த வழியில் திரும்பிப்போங்கள் அங்குதான் இருக்கிறது என்றார்.
சுரன்

நான் வந்த பேருந்து ஒரு  திருப்பு,திரும்பி நின்றது அப்போதுதான் தெரிந்தது.நான் அது ஒரு சாலையில் திரும்பி நிறுத்தத்தில் நிற்கிறது என்று பழையபடி தப்பாக நினைத்துள்ளேன்.
பின் சரியாக வந்து ஊர் திரும்பி இந்த பதிவை போட்டுக்கொண்டிருக்கிறேன்.
ரெயில் நிலையத்தை வைத்து பக்கத்தில் உள்ள ஓட்டலை அடையாளம் சொல்லுவார்கள் எங்களூரில் இங்கு ஓட்டல் பெயரை ரெயில் நிலைய நிறுத்தத்துக்கு வைத்து என்னை அலைய வைத்த அந்த ஓட்டுநர் இனியாவது மூட்டை முடிச்சுகளுடன் வரும் அசலூர்க்காரர்களை ரெயில் நிலையம் அல்லது ஜங்க்சன் என்று இறக்கி விடட்டும்.

ரெயில் நிலையமே தெரியாமல் வரும் அசலூரான் அருகில் உள்ள கடைகளைப்பற்றியா தெரிந்திருப்பான்?
நான் பட்ட துன்பம் மற்றோரு கோவை அறியா ஊர் திரும்பும் தூக்கு-தூக்கிக்கு வர வேண்டாம்.
மற்றபடி கோவை நல்ல சென்னை-எங்களூரை விட விசாலமான மனித மனங்களும் ,சாலைகளும் நிரம்பிய சுகாதாரமான மாநகராகத்தான் தெரிகிறது.நான் பார்த்தவரையில்.
சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?