காந்திய கல் வீச்சு.......,



அன்னா கசாரே தன்னை காந்தீயவாதி என்று கூறி ஊழலுக்கு எதிராக போராடினாலும்.அவரின் சில பேச்சுகளும்,அவர் ஆதரவாளர்கள் நடவடிக்கைகளும் நடமுறைக்கு பொருந்தாததாக உள்ளது.
 அடிக்கடி உண்ணாநிலையில் இருப்பது அவரின் வாடிக்கையாக இருந்தாலும் அவரின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதன் காரணம் என்ன என்பதை அவர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
இங்குள்ள அரசியல்வாதிகள் 90 சதம் லஞ்ச-ஊழல் மழையில் நனைந்தவர்களாக இருக்கும் போது இவரின் லோக்பால் வரைவை வர விடுவார்கள் என்றும்-அது நடமுறைக்கு உடனே வர வேண்டும் என்றும் நினைப்பது நடக்க கூடிய காரியமாக உங்களுக்குத் தெரிகிறதா?
அது இருக்கட்டும் இங்கு பிணையில் விட 100 கோடி பேரம் பேசும் நீதியரசர்கள்
கையில் காசு வாங்காமல் காரியம் செய்யாத அதிகாரர்கள் நிறைந்த நாடு நம் பாரதத் திருநாடு.
அது கிடக்கட்டும் இப்போதைய  கசாரே உண்ணாநிலை போராட்டத்துக்கு அவ்வளவாக கூட்டம் சேர வில்லையாம்.
சுரன்

இதனால் பரபரப்பை உருவாக்க கசாரே ஆதரவாளர்கள் சிலர் பிரதமர் வீடு முன் ஆர்ப்பாட்டம் செய்ய கிளம்பியுள்ளனர்.[கொஞ்சம் பேர்கள்தான்]
அவர்களை தடை செய்யப்பட்ட பகுதியில் காவலர்கள் நிறுத்திய போது பின் வாங்கி பின் கற்களை காவலர்கள் மீது வீசி கலாட்டா செய்துள்ளார்கள்.காவலர்கள் மீது கல் வீச காரணம் என்ன?அவர்களா இவர்கள் இலக்கு.அவர்கள் வெறும் வேலையாட்கள்.லஞ்சப்பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது வீசினாலாவது பயன் உள்ளது.
________________________________________________________
மரப்பெஞ்சு தந்த போதை.
மதுரை அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் செய்த வேலை நம் மாணவர்கள் எதிர்காலத்தை நினைக்கவே பயத்தை உருவாக்குகிறது.
அடிக்கடி மது அருந்தும் சில மாணவர்கள் சிலர் அன்று போதை ஏற்ற திட்டமிட்டுள்ளனர்.
கையில் காசில்லாதவர்கள் கண்ணில் அவர்கள் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்ளும் மரப்பெஞ்சு பட.அதை பள்ளி விட்டு அனைவரும் போனபின்னர் துண்டு,துண்டாக உடைத்து மரத்துண்டுகளை அருகில் உள்ள விறகுக்கடையில் விற்று டாஸ்மாக் கிறக்கத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 12 படிக்கும் மாணவந்தான் கொஞ்சம் வயதானவன் அப்படி என்றால் மற்ற வர்கள் தரத்தை நினையுங்கள்.
சுரன்

அரசுக்கு வருமானத்தை தருகிறது என்பதற்காக அரசு விதிகளை காற்றில் பறக்க விட்டு மதுக்கடைகளை ஒரு தெரு பாக்கியில்லாமல் திறந்துள்ளனர்.மக்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் ,பள்ளிகள்,கோயில்கள் ,பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் என்ற பாகுபாடை அரசு கண்டுகொள்வதில்லை .அதன் பயந்தான் இன்று பள்ளியில் மரப்பெஞ்சை மாணவர்கள் விற்று சரக்கு வாங்கி அரசு வருமானத்தை உயர்த்தும் அளவு போயுள்ளது.
இது போன்று மக்களை கெடுத்து வாழ்வை இழக்க வைக்கும் சம்பாத்தியம் அரசுக்கு தேவையா?
இப்படி காசு பண்ணும் அரசுக்கும் குடி கெடுக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.
சுரன்

இன்றைய படங்களில் தனுஷ்,சிம்பு .விஜய் போன்ற இளசுகளின் மனங்கவர்ந்த நடிகர்கள் தங்கள் படங்களில் தவறாமல் மது அருந்துவதும்,அப்பனுடன் கூட சேர்ந்து மது அருந்துவதும் அதை நியாயப்படுத்தி பேசுவதும் நம் இளையவர்கள் மனதில் மது அருந்துவதை நியாயப்படுத்துகிறது.அது போன்ற காட்சிகளை காசுக்காக வைக்கும் இயக்குநர்கள்,பணத்துக்காக அதில் நடிக்கும்[?]நடிகர்களுக்கும் காசுக்காக தெருதோறும் மதுபானக்கடைகளை திறக்கும் அரசுக்கும்-காசுக்காக முந்தானை விரிப்பவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாக தெரியவில்லை.
பணம் வரும் என்பதற்காக அரசு அத்தொழிலையும் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது என்பதே இப்போது நமது கவலை.
 _____________________________________________________

முதல் தங்கம் சீனாவுக்கு



லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தபின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது.
சுரன்
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், 103.9 புள்ளிகள் எடுத்த இ ஸிலிங் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட போலந்தின் சில்வியா பொகாச்கா 103.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதே போட்டியில் சீனாவின் யூ டான் மூன்றாவதாக வெண்கலப் பதக்கம் பெற்றார்.
_________________________________________________________________

சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?