நோக்கம் வெற்றி




                                

டெசோ வெற்றியா தோல்வியா?
டெசோ மாநாட்டால் நடக்கப்போவது ஒன்றும் இல்லை.அது கண்கூடு.
ஆனால் கருணாநிதியின் டெசோ மாநாடு நோக்கம் வெற்றியா?தோல்வியா? என்றால்
வெற்றிதான்.
அவர் நினைத்தது போல் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
இந்திய அரசு மட்டுமின்றி இலங்கை அரசையும் கொஞ்சம் ஆட்டி வைத்துள்ளார்.
இலங்கையில் அவர் டெசோ நடத்தும் நாளன்று அரசு ஆதரவாளர்கள்.
கருணாநிதியின் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போன்றோர் படத்தை எரித்து டெசோ நடத்துவதை தடை செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
டெசோ ஒன்றும் செய்யப்போவதில்லை.அது அரசியல் நாடகம் என்றும்,கருணாநிதி சோனியா பேச்சை கேட்டு செயல்படுபவர்தான் என்றும் தெரிந்தும் இலங்கை அரசு பயந்தது போல் சில வேலைகளை செய்ததௌ ஏன் என்று தெரியவில்லை,
சுரன்

டெசோவில் கலந்து கொள்ள விசாவை மறுத்து கடவு சீட்டை முடக்கியுள்ளது.டெசோவில் கலந்து கொள்ளும் ஈழத்தமிழ் தலைவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளது.
இதெல்லாம் தேவையா?
கருணாநிதிக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர் மீது பாசம் இருந்தாலும் இந்திய சோனியா காங்கிரசு அரசை தாண்டி அவர் ஒன்றும் செய்யப்போவதில்லை.
அங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் அதிமுக ஜெயா அரசு காவல்துறை டெசோ மாநாடு தொடர்பாக நடந்து கொண்டது சரியான அணுகு முறை அல்ல.
மாநாடுக்கு தடை என்றும்-உச்சநீதிமன்றம் வரை சென்று வந்ததும் தேவையானதல்ல.
சுரன்

கருணாநிதியை மாநாடு நடத்திக்கொள் என்று விட்டிருந்தால் அதுபாட்டுக்கு அமைதியாக மத்திய அரசுக்கு பயந்து நடந்து முடிந்திருக்கும்.

அதை விட்டு தேவையற்ற விளம்பரத்தை ஜெயா அரசு தேடி கொடுத்துள்ளது.
மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பற்றியே நீதிமன்றம்  சென்ற காவல்துறை-அரசு   நீதிமன்றம் பாதுகாப்பை பற்றி கூறியும் ஒரு போலிசை கூட  மாநாடு நடக்குமிடத்தில் நிறுத்தாதது ஏன்?
சுரன்


ஆக டெசோ மாநாடு இலங்கை-,இந்திய அரசுகளை ஒன்றும் செய்யமுடியாது ,இதனால் ஈழத்தமிழருக்கு ஒரு காசு கூட நன்மை இல்லை என்று தெரிந்தும் மத்திய ,மாநில அரசுகள் இப்படி நடந்து கொண்டது வேடிக்கையாக இருக்கிறது.
ஆக ஒரு மாநாடுஅரசியல் நடந்துள்ளது.கருணாந்தியின் நோக்கம் நிறைவேறியுள்ளது.அந்தவகையில் டெசோ வெற்றி மாநாடுதான்.
டெசோ தீர்மானங்கள் நிறைவேறுகிறதோ இல்லையோ.கருணாநிதி தீர்மானம் நிறைவெறி விட்டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?