காணாமல் போனவர்கள்.....


"நாடு முழுவதும் 55 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்அனுப்பியுள்ளது.
சுரன்
டில்லியை சேர்ந்தவர் சர்வாமித்ரா .இவர் வழக்குரைஞர் .இவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல நோக்கில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 
"நாடு முழுவதும் 55 ஆயிரம் குழந்தைகள் மாயமாகி காணாமல் போய் இருப்பதாகவும், இது குறித்து அரசு தரப்பில் எவ்வித முறையான பதிலும் இல்லை என்றும் , இவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் முழு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
 என்றும் கேட்டிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலானஇருக்கை முன் வந்தது. 55 ஆயிரம் சிறார் காணாமல் போனது பற்றி கவலை தெரிவித்த நீதிபதி , வழக்கில் இது தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்குமாறு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கமறியல்  அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
சர்வாமித்ரா என்ன கணக்கில் 55000 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்கு தொடுத்தார் என்று தெரியவில்லை.
தினசரி நாளிதழ்களில் வந்த காணாமல் போன குழந்தைகள் செய்தியின் அடிப்படையில் இந்த கணக்கை அவர் போட்டுள்ளாரா என்று தெரியவில்லை.
ஆனால் இது உண்மையான கணக்காயிருந்தால் மிக கொடுமையான எண்ணிக்கையில் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள்
மாநில அரசுகள் சரியான எண்ணிக்கையை தருமா?
கண்டு பிடிக்க இயலாத தங்கள் இயலாமையை மறைக்க எண்ணிக்கையில் குளறுபடி செய்துதான் நீதிமன்றத்துக்கு விளக்குவார்கள்.
இந்த குழந்தைகள் சிலர் நல்லபடியாக வளரலாம்.
ஆனால் பெரும் பான்மையான வர்கள்,கொத்தடிமை தொழிலாளர்களாகவும்-பிச்சை எடுக்கும் தொழிலுக்கும்தான் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள்.
=======
அசாமில், பழங்குடி போடோ இனத்தவருக்கும் வங்கதேசத்திலிருந்து பிழைப்புக்காக வந்த குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதல்களை அடுத்து அசாமியர்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.
கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த அசாமில் தற்போது புதிதாக பேருந்து ஒன்று கொழுத்தப்பட்டும், பாலம் ஒன்று சேதகமாக்கப்பட்டதையும் அடுத்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஆனால் அசாமில் சென்ற மாதம் நடந்த மோதல்களில், 77 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த வதந்திகள் சிலரால் பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்போது பெங்களூர் நகரில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர், தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற பயம் காரணமாக, பெங்களுரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆனால், வெறும் வதந்திகளின் அடிப்படையில், மக்கள் வெளியேறுவதாக இந்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநில மக்கள் இ்நதியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுரன்
பெங்களூர் நகரில், சுமார் இரண்டரை லட்சம் வடகிழக்கு மாநிலத்தவர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், பாதுகாவலர் மற்றும் மருத்துவமனை உள்ளிட்டத துறைகளில் பணியாற்றுபவர்கள்.
தங்கள் பகுதியை சேர்ந்த அனைவரும் பெரும் பீதியில் இருப்பதாக பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ள மோஜ் என்பவர் தெரிவித்தார். தனது நண்பர் ஒருவரை சிலர் கத்தியைக் காட்டி 'உயிர்மேல ஆசை இருந்தால் உனது ஊருக்கே திரும்ப ஓடிப்போய்விடு’ என்று மிரட்டியதாக அவர் தெரிவித்தார்.
மும்பையி அசாம் கலவரம் தொடர்பாக ஊர்வலம் நடத்தி கலவரத்தில் சிலர் ஈடுபட்டதாலும், மைசூர் நகரில் திபெத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கருதி தாக்கப்பட்டதை அடுத்துதான், வதந்தி வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
புதன்கிழமை மட்டுமே 4 ஆயிரம் பேர் பெங்களூரில் இருந்து வெளியேறியிருப்பதாகதெரிகிறது. மொபைல் தொலைபேசியின் குறுந்தகவல் மூலமாக வதந்திகள் பரப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுரன்
பெங்களூர் நகரில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், புதன்கிழையன்று தங்கள் மாநிலத்துக்குப் புறப்பட கூட்டம் கூட்டமாக வந்ததால், பெங்களூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.
கூட்டத்தை சமாளிக்க, ரயில்வே அதிகாரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

_______________________________________________________________________-______________-
சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?