கறை படிந்தவர்கள்,


மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா கடந்த 27ம் தேதி கைலாய யாத்திரைக்செல்வதாக புறப்பட்டார்.ஆனால் அவர் கைலாயம் செல்ல வில்லை.நீதிமன்ற கண்ணில் இருந்து தப்பிக்க வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதாகவே தெரிகிறது.
டெல்லி விமான நிலையத்தில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் கடவு சீட்டை  ஒருவரிடமிருந்த பையில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதை ஒருவர் தன்னிடம் தந்து வேறு ஒருவர் வந்து வாங்கிக்கொள்வதாக சொல்லி பணம் கொடுத்ததாக அந்த பையை வைத்திருந்தவர் கூறியுள்ளார்.
சுரன்
வர,வர நித்தியானந்தா சாமியார் நிலையில் இருந்து டான் நிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறார்.செய்வதெல்லாம் மோசடி-ஏமாற்று இவரை இன்னும் தமிழக அரசு கைது செய்யாமல் இருக்கும் மர்மம்தான் புரியவில்லை.
அந்த கடவு சீட்டுகளை முடக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்மை பரிசோதனைக்காக கர்நாடக மருத்துவமனையில் ஆஜராக வேண்டிய நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இப்போது கொஞ்சம் தெளிவான நிலையில் இருக்கும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்
 "டெல்லியில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்கள் முடக்கம் செய்யும் நிலையில் இருப்பது குறித்து மனவேதனைப்படுகிறேன்.
சுரன்

நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா கைலாய யாத்திரைக்கு செல்வது குறித்து எனக்கு நித்தி தெரிவிக்கவே இல்லை.. நித்யானந்தாவின் சீடர்களும் இதுபற்றி தெரிவிக்கவில்லை. முறைப்படி இளைய ஆதினமான  நித்யானந்தா என்னிடம் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
நித்யானந்தாவுக்கு ஆள்பலம் இருக்கிறது. அவர் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்டு தருவார் என்ற நம்பிக்கை காரணமாகவும், நல்ல நோக்கத்திற்காகவும்தான் இளைய ஆதீனமான நியமித்தேன் என்று வருந்தியுள்ளார் ஆதீனம்.
ஆனால் இப்போது தெளிவாக பேசும் இவர் நித்தியானந்தா வந்து அமுதப்பால் தந்து குடித்து விட்டார் என்றால்.அவரை புகழ ஆரம்பித்து விடுவார்.
எல்லாம் போதை சொல்லும் பாதைதான்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

பத்தோடு........
வலிமையான லோக்பால் மசோதா வேண்டும் என்று காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா ஹசாரேக் குழுதங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

நிறைவில், அரசியல் கட்சி துவக்கப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


ஆக இந்திய கட்சிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகப்போகிறது.
தேர்தலில் இப்போதைக்கு நிற்கப்போவதில்லை என்று கசாரே கூறியுள்ளார்.அப்படி என்றால் கட்சி எதற்கு.?
அவர்களின் ஊழல் எதிர்ப்பு வரைவு கடை கொஞ்சம் கூட்டம் குறைய ஆரம்பித்து விட்டதால் கட்சி வியாபாரம் ஆரம்பித்துள்ளனர்.
எப்படியோ பத்தோடு பதினொன்று ஆகாமல் இருந்தால் சரி.
அரசியல் சாக்கடையில் குதித்தப்பின் இவர்கள் கொஞ்சம் காலம் சென்று தேர்தலி போட்டியிடுவார்கள்.பின் இவர்களின் லஞ்ச ஒழிப்பு மசோதாவை இவர்களே எதிர்க்க வேண்டிய நிலைக்கு சென்று விடுவார்கள்.அல்லது கைவிட்டு விடுவார்கள்.
_________________________________________________________________________________




மன்மோகன் முகத்தில் நிலக்கரி கறை



பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவுக்கு சொந்தமான நிலக்கரி வயல்களை தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தது மட்டுமின்றி,
 அனில் அம்பானி, டாடா போன்றோரின் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான நிலக்கரியை மானிய விலையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சப்ளை செய்யவேண்டும்;
சுரன்

 அவர்களது தேவையில் 80% சப்ளை செய்யத் தவறினால் அபராதமும் கட்டவேண்டும் என்று கோல் இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் மூலம் ஆணை பிறப்பித்திருக்கிறார் மன்மோகன்.
 பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் பங்குகளில் 10% தனியார்மயக் கொள்கையை ஒட்டி விற்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 1% பங்குகளை வாங்கியிருக்கும் லண்டனைச் சேர்ந்த டி.சி.ஐ. எனும் நிதி நிறுவனம் மன்மோகனின் ஆணையை எதிர்த்துள்ளது.
 “ஏழைகளுக்கு மலிவு விலை மின்சாரம் தருவதற்காகத்தான் இந்த ஆணை என்று அரசு கூறியிருப்பது பொய். இது கோல் இந்தியாவிடமிருந்து பிடுங்கி, தனியார் முதலாளிகளுக்குத் தரப்படும் 1,10,000 கோடி ரூபாய் மானியம். இதில் இலஞ்சம் விளையாடியிருக்கிறது
. இந்திய நீதிமன்றத்தில் இதற்கு நீதி கிடைக்காது. சர்வதேச மன்றத்தில் சட்டப்படி சந்திப்போம்” என்று கூறியிருக்கிறார், டி.சி.ஐ. நிறுவனத்தின் இயக்குநர் வல்துசென்.
ஆக  மன்மோகன் சிங்கின் பரிசுத்தவான்முகமூடி அதிகமாகவே கிழிந்து தொங்குகிறது.
இவர் ஆட்சியின் முறை கேடுகள் எல்லாம் லட்சம் கோடிகள் கணக்கில்தான்.இதை மக்கள் எத்தனை சைபர் என்று கணக்க்கிட்டே மண்டை காய்ச்சதுதான் மிச்சம்.
சரி .மன்மோகந்சோனியா-ராகுல் மற்றும் அவர்கள் சகாக்கள் இத்தனை பணத்தையும் என்னதான் செய்கிறார்கள்.?ஆயிர ரூபாய்த்தாட்களாக த்ன்னு தீர்ப்பார்களோ?
பணத்தை பூதம் காத்தது போல்  சுவிஸ் வங்கியில் காப்பதை தவிர அவர்கள் இதை வேறு என்ன செய்ய முடியும் ?
இதை எண்ணியாவது இனி வேறு முறைகேடுகள் செய்யாமல் இருப்பார்களா?
சோனியா,ராகுல் என்னவோ நல்லவர்கள் .மன்மோகன் கறை படியாதவர் என்ற கதைகள் எல்லாம் பாட்டி வடைசுட்ட கதைகளாகி விட்டது..
========================================================================
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?