விலையில்லா கைபேசி-மதியில்லா மத்தியரசு



இலவசமாக மிதி வண்டி கொடுத்தாயிற்று.இலவச சீருடை,விலையில்லா மின் விசிறி,மிக்சி,முதல் நாப்கின் வரை கொடுத்தாயிற்று,
மன்மோகன் சிங்கும்,சோனியாவும் அடுத்ததாக என்ன கொடுக்கலாம் என்று மண்டையை உடைத்து இப்போது கை பேசியை அதாங்க செல் பேசியை கொடுக்க முடிவு செய்துள்ளதாக கைபேசி வழியே ஒரு செய்தி உலவுகிறது.
அது பற்றி இந்த விடுதலை நாள் விழாவில் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் உள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவசமாக அல்லது விலையற்ற செல்பேசி  வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது இந்தியாவில். 90 கோடி பேருக்கு மேல், கைபேசி வைத்துள்ளனர். தினமும் அதன் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு[?] கீழே வாழும் குடும்பங்களில், கைபேசி இல்லாமல் துன்பத்தில் வாடுவது மத்திய அரசைமிகவும் வாட்டியுள்ளது.
நீதிமன்றம் கூறியும் உணவுதானியங்களை,அதுவும் அரசு கிடங்கில் எலிகளால் வீணாகும் தாணியங்களை இலவசமாக கொடுக்க மறுத்த மத்திய அரசு இப்போது கைபேசியை இலவசமாக கொடுக்க திட்டமிடுவது எங்கேயோ உதைப்பதாக தெரிகிறது.அது அநேகமாக அம்பானி வீட்டு கதவாக இருக்கலாம்.

இந்தப் புதிய திட்டத்திற்கு, "ஒவ்வொரு கையிலும் ஒரு கைபேசி' என, பெயர் வைக்கவும் திட்டமுள்ளது. 

இந்தியாவில், 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. வறுமை கோடு நகர் புறத்தில் 34ரூபாய்,கிராமத்தில் 26 ரூபாய் ஒரு நாளைக்கு தங்கள் வாழ்வாதாரத்திற்காக செலவிடும் ஊதாரிகள் மட்டுமே வறுமைக்கோடுக்கு கீழ் வருவார்கள் என்று பொருளாதார மாமேதை மான்டெக் சிங் அலுவாலியா சொல்லியிருக்கிறார்.
 ஒரு குடும்பத்தில் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பதாக கணக்கிட்டால், மூன்று கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக கைபேசிவழங்கப்படும்.
அதுவும் வெறுமனே கொடுக்காமல், ஒவ்வொரு மாதமும் 200 உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கவும் திட்டமிட்டுள்ளனராம்.200 அழைப்புக்குள் அவர்கள் பேச்சிக்கொண்டு சிக்கனமாக வாழ வேண்டும்.


இத் திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் திட்டக் குழுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
நமது இந்திய அரசு எப்பவுமே மிகப்பெரிய தொலை நோக்குடனேயே நடந்து கொள்ளும்.
இப்போகூட விவசாயம் செய்பவர்களுக்கு 1000 கோடியைவிட குறைவாக செலவாகும் உரமானியத்தை கொடுக்க மறுத்து கொடுப்பதை குறைத்துக்கொண்டே வந்துவிவசாயம் செய்பவர்களை அதை விட்டே ஓடவும்-தற்கொலையும் செய்யத்தூண்டும் மன்மோகன் சிங் அரசு விலையில்லா செல்பேசி வழங்குவது எதற்காக?
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் விலையில்லா கைபேசி வழங்க  ஒப்பந்தமிட்டு அவர் தயாரித்து குவித்துள்ள பேசிகளை விற்றுக்கொடுப்பதற்காகத்தான் இருக்கும் வேறு எதற்காக?
இதற்கான ஒப்பந்தங்கள் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் உடன் இருக்காது என்பது தெரிகிறது.
________________________________________________________________________

ஆறு மாத மழை ஒரு நாளில்

எல்நினோ தனது வேலையில் கவனமாக இருப்பது தெரிகிறது.
இந்தியாவில் பெய்ய வேண்டிய பருவ மழை சரிவர பெய்யாமல் வறட்சியாக இருக்கையில்  பிலிப்பைன்சில் நாட்டின் தலைநகர் மணிலாவில் பெய்த பலத்த மழையால் 19 பேர் பலியாகியுள்ளனர்.
 பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் “சாயோலா’ என்ற புயல் தாக்கியது. இதில் பிலிப்பைன்சில் மட்டும் 50க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
நூறாண்டு பேசும் ஓராண்டுசாதனை போல் ஆறு மாத மழை ஒரு நாளில் பெய்துள்ளதாம்.

 இரண்டு நாட்களாக மணிலாவில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறு மாத காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை அளவு ஒரே நாளில் பெய்ததால், மணிலா நகரை கழுத்தளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும்பாலானோர் கூரை மீது தங்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டை விட்டு சென்றால் பொருட்கள் திருடு போய்விடும் என்ற பயத்தால் மக்கள் வீட்டு கூரை மீது அமர்ந்துள்ளனர். 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிலாவில் நான்கு பகுதிகளில் மோசமான அளவுக்கு வெள்ளம் பாதித்துள்ளதால் அந்த பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து தண்ணீரில் விழுந்துள்ளதால் சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

_________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?