கல்வி வியாபாரியின் தடங்கள்

குன்னம் கிராமத்தில் ஜேப்பியார் கல்லூரி கட்ட 62 ஆயிரத்து, 953 சதுர அடிக்கு கட்டடம் கட்டத்தான், உள்ளாட்சி அமைப்புகளிடம்  அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் படி, மாணவியர் விடுதி, கேன்டீன், வகுப்புகள் நடைபெறும் கட்டடம், ஆய்வகம், ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
ஆனால், அனுமதியின்றி, மாணவர்கள் விடுதி, ஆய்வகம், முதுகலை வகுப்புகளுக்கான கட்டடம், உள் விளையாட்டரங்கு, ஆகியவை கட்டப்படுகிறது. 
சுரன்
கட்டடங்கள் அனைத்தும் மூன்று மாடிகளைக் கொண்டதாக கட்டப்படுகிறது.அதற்கு அனுமதி பெற வில்லை.மேலும் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத் இந்த கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு கலந்தாய்விலும் இக்கல்லூரி கலந்து கொண்டுள்ளது.கல்லூரியில் கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்படுவதை, அதிகாரிகள் யாரும், இதுவரை"கண்டுகொள்ளவில்லை!'ஆனால் விபத்தீல் பத்து பேர்கள் இறந்ததும் அனுமதி யின்றி கட்டிடம் கட்டப்படுவதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு அறிவிப்பு  அனுப்பப்பட்டுள்ளது.
சாதாரண காவலராக [போலீஷ்] வேலை பார்த்த ஜேப்பியார் எம்.ஜி.ஆரின் கண்ணசைவால் இன்று மாபெரும் கல்வி வியாபாரியாக அல்லது கல்வித் தந்தையாக உருமாறியுள்ளார்.முன்னதாக எம்ஜிஆர் அரசு சாராயக்கடைகளை திறந்த போது பலகடைகளை நடத்தி பணம் குவித்தார்.அதைவிட மூக்குத்தி என்ற பலான ஆபாச வார இதழை ஜெய மணி என்பவரை ஆசிரியராக வைத்து நடத்தி பணம் குவித்தார்[.நீதியின் குரல் என்பதும் இவர் நடத்திய  இதழ்தான்.]
அப்படி சம்பாதித்ததைதான் கல்வி வியாபரத்தில் முதலீடாகவும் போட்டார்.
முந்தைய வாழ்வில் எம்.ஜி.ஆரின் பாதுகாவலராக அதாவது அடியாளாக இருந்தவர்தான் இவர்.
இதுவரை தனது கல்வி வியாபாரத்தில் பல முறைகேடுகள் செய்தாலும் இப்போதுதான் வசமாக சிக்கியுள்ளார்.அதிமுக அனுதாபியான இவர் பெயர் இந்த விபத்தின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவே யில்லை.ஆனால் விடயம் பெரியதாகிவிட்டதால் வேறு வழியின்றி சேர்க்கப்பட்டுள்ளார்.வெளியே வருவது ஒன்றும் அரிதானதல்ல.
காரணம் பெரிய இடம் இவர் வசம்.
ஜேப்பியாரின் தொழில் சாம்ராஜ்யம்
___________________________________
சுரன்
அதிமுக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜேப்பியார் எம்ஜிஆர் இறந்த பின் ஜெ-ஜா போட்டியில் கல்வி வியாபர வளர்ச்சியை கண்டு அதன் பக்கம் கவனத்தை திருப்பினார்.பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். பல கல்லூரிகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன.

  • சத்யபாமா பல்கலைக் கழகம்,
  •  பனிமலர் பொறியியல் கல்லூரி,
  •  பனிமலர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 
  • பனிமலர் பாலிடெக்னிக், 
  • ஜேப்பியார் பொறியியல் கல்லூரி,
  •  புனித ஜோசப் பொறியியல் கல்லூரி,
  •  எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லூரி, 
  • மாமல்லன் பொறியியல் கல்லூரி, 
  • ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,
  •  செயின்ட் மேரீஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் 
  • .இவை மட்டுமல்ல
  • , கொதிகலன் தயாரிப்பு தொழிற்சாலை, 
  • பால் பண்ணை,
  •  ஹாலோ பிளாக், 
  • இரும்பு முருக்கு கம்பி,
  •  சிமென்ட்,
  •  குடிநீர் தயாரிப்பு தொழிற்சாலைகளும் இவரின் தொழில்களில் உண்டு.--------------------------------------------------------------------------------------------------------------
ஹாரி பாட்டர் புத்தக  சாதனை முறியடித்த 50 

இதுவரை விற்பனை சாதனையில் முன்னிலையில் இருந்த ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல்  பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. 
சுரன்

இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின். அதன்பின், டான் பிரவுன் என்பவர் டாவின்சி கோட் என்ற நாவலை எழுதினார். இந்த நாவலும் உலகளவில் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் எல் ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய காதல் பற்றிய நாவல் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி ஆன் லைனில் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், புத்தக வடிவில் 4 மாதங்களுக்கு முன் இந்த நாவல் வெளியிடப்பட்டது. விற்பனைக்கு வந்த 4 மாதத்திலேயே நாவல் 5.3 கோடி பிரதிகள் விற்று முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது என்று இதன் வெளியீட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பிப்டி ஷேட்ஸ் வரிசையில் பிப்டி ஷேட்ஸ் டார்க்கர், பிப்டி ஷேட்ஸ் பிரீட் ஆகிய நாவல்கள் முறையே 36 லட்சம், 32 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. இதுகுறித்து நாவல் ஆசிரியர் எல் ஜேம்ஸ் கூறுகையில், என் நாவல் எல்லா கடைகளிலும் இருப்பதை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால், ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கூட, இந்த அளவுக்கு என் நாவல் விற்பனையாகும் என்று நினைத்து பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன் என்றார்.
_________________________________________________________________

கருணாநிதி தப்பினார்,

டெசோ மாநாடு, தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் நாளை சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி. ஏ. மைதானத்தில் நடக்கும் என்று கருணாநிதி கூறியிருந்தார்,
இந்த மாநாடு பற்றி பலவித கருத்துக்கள் பரவி இருந்தது.ஒழுங்காக நடக்காது,ஈழத்தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கலந்து கொள்ள  மாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன.
சுரன்

கருணாநிதியோ மாநாடு சிறப்பாக நடக்கும் என்று குறி  வந்தார். . இந்த மாநாட்டிற்கு தடை கோரி ஏற்கனவே கோர்‌ட்டில் வழக்கு அதிமுக வால் பினாமி பெயரில் தொடரப்பட்டது.
அதை வைத்து நீதிமன்ற ஆணையின் படி காவல்துறை ஆலோசிப்பதாக கூறப்பட்டது.
இப்போது  சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் ,மாநாடு நடக்கும் மைதானம் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை என்பன உள்ளிட்ட 11 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனவே டெசோ மாநாடு அனுமதி கேட்டிருந்த தி.மு.க. எம்எல்.ஏ. அன்பழகனிடம் மறுப்பு தொடர்பான கடிதம் அளிக்கப்படும் என இணை கமிஷனர் சேஷாயி கூறியுள்ளார்.
எப்படியோ மாநாடு எப்படி நடந்து முடிகிறதோ என்ற கவலையில் இருந்து கருணாநிதி தப்பிவிட்டார்.
இனி அவர் வந்திருப்பார்.தனி ஈழம் தீர்மான நிறைவேற்ற முடிவு செய்திருந்தோம்,அத்தனையையும் ஜெய அரசு கெடுத்து விட்டது  என்று கூறிக்கொள்ளலாம் அல்லவா?
========================================================================
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?