suran-09/4


இலங்கையர்   மீது தாக்குதல் சரியா?


இலங்கையிலிருந்து வந்தவர்கள் சென்ற வாகனங்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அந்தத் தாக்குதலில் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை புத்தளம் மாவட்டம் ஷிலா என்ற பகுதியைச் சேர்ந்த 184 யாத்ரிகர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தனர்.
நேற்று, பூண்டி மாதா கோயில் திருவிழாவைக் காணச் சென்றார்கள். அங்கு வரக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டனர்.
இன்று காலை வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் சென்றபோது, அவர்களை உள்ளே அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதனால், அவர்கள் அங்கும் தரிசனம் செய்ய முடியவில்லை.
இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையிலும், அதுதொடர்பான செய்தி வேகமாகப் பரவிவரும் நிலையிலும் அவர்களை இலங்கைக்கு பாதுகாப்பாகத் திருப்பியனுப்ப போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
அதற்காக, அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். வரும் வழியில், திருவாரூர் அருகே மதிமுகவினர் அவர்களது வாகனங்களை மறித்து காலணிகளை வீசியதாகக் கூறப்படுகிறத
பின்னர் வாகனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தபோது, திருச்சி திருவெரும்பூர் அருகே மதிமுகவினர் கற்களை வீசித்தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 பேர் காயமடைந்ததாகவும், மூன்று வாகனங்கள் சேதமடைந்ததாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இன்று இரவு விமானம் மூலம் அவர்கள் இலங்கை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட மதிமுவைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மக்க ள் யாரும் தமிழ்நாட்டுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற செயல்கள் சரியானதல்ல.
இவை தமிழ் மக்களிடம் அன்பு காட்டி வரும் சிங்களவர்களுக்கும் இன வெறியை துண்டும் விதமாக அமைந்து   விடும் .ஈழ மக்கள் அமைதியாக வாழும் வழியை அடைத்து தீராபகைமையை உருவாக்கிடும்.
தாங்கள் தான் ஈழமக்களின் ஏகப் பிரதிநிதிகள்  என்று கூறிக்கொள்ளும் மதிமுக,சீமான் கட்சியினர் கொஞ்சம் உட்கார்ந்து அமைதியாக யோசிப்பது நல்லது .
இலங்கை படையினருக்கு பயிற்சியளிப்பது தவறு.அதை தடுக்க வீண்டியதுதான்பூராட வேண்டியதுதான். ஒரீ டத்தில் வாழா வேண்டிய மக்களான சிங்களவர்-தமிழர் இன வெறியை அதிகரிப்பதுசரியானதல்ல.
இந்தியாவில் எப்படி வட இந்தியர்களும் தமிழர்களும் இணைந்து வாழ்வது அவசியமோ அப்படி சிங்களர்-தமிழர் ஒற்றுமையான வாழ்வு அவசியம்.
இங்கு சிங்கள ருக் கு ஏ ற்படும் துன்பத்துக்கு ஈழத்தில் வாழும் தமிழன் பதில் சொல்ல
வேண்டிய கட்டாயம் உள்ளது.அதை நாம் தமிழர்கள்-மதிமுக வினர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?