தாடா வுக்கு தடா



சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மறுநாள் மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை  மூடப்பட்ட து தொடர்பாக  எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்ததா ல் கைது  செய்யப்பட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ள சகின் தாடா என்ற பெண் இது குறித்து  மனதளவில்  அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
இவரின் பதிவை ஆதரித்து விருப்பம்[ "லைக்"] போட்ட இன்னொரு பெண் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இணைய தள சுதந்திரம் குறித்த விவாதத்தை கி ளப்பியுள்ளது.

கைது நடவடக்கைகளை பிரஸ் கவுன்சில் ,மற்றும் பலரால் கண்டிக்கப்பட்டு ள்ளது.
இதற்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் சின்மயி க்கு எதிராக கருத்து தெரிவித்த சிலரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்கால வாய்ப்பூட்டு சட்டம் மீள வந்துவிட்டது.
முகநூலில் பதிந்தவர்-விரும்பியவர் 
வகுப்புவாதம்,தீவிரவாதம் ,கலவரம் தூண்டும் செய்திகளை தடை செய்ய மிகவும் யோசிக்கும் மத்திய -மாநில அரசுகள்  தனிப்பட்ட பிரபலங்கள் பற்றிய கருத்துக்களை மட்டும் உடனே நடவடிக்கை எடுப்பது ஏன்?
 தாக்கரே மரணத்துக்குப்பின் கடையடைப்பு தேவைதானா?
ஏற்கனவே அவர் இறந்தவுடனேயே கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் அவதியுற்ற நிலையில் ,உடல் தகனத்துக்கு மறு நாள் கடையடைப்பு தேவையா?என்றதற்குத்தான் தாடா வுக்கு  தடா போடப்பட்டுள்ளது.
 ______________________________________________________________________________________________
வண்ணத்தில் பிரதமர்[வால்மார்ட்டில் வாங்கியதா?]

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?