பொது அமைதியை கெடுக்கும்

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன், சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை எடுத்துள்ளார். அதை டிடிஎச்சில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார்.
suran
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் வந்த செல்போன் நம்பர்களை வைத்து விசாரித்தனர். இதில், ஓசூரை சேர்ந்த மூர்த்தி (26), முருகன் (42), சூர்யா (42) ஆகியோர் மிரட்டியது தெரியவந்தது.  கமல்ஹாசனின் ரசிகர்களான 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் களை போலீசார் கைது செய்தனர். நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கொலை மிரட்டல் என்பது மிக மோசமான செயல்தான் .ஆனால் இவர்களை பொன்ற ரசிகர்கள் மிரட்டல் என்பது வெறும் வாய்ச்சொல்.அவர்கள் ரசிக்கும் நடிகரின் மீதான பாசத்தால் வரும் வார்த்தைகள் மட்டுமே.
இதற்கு அவர்களை காவல்துறை விசாரித்து கண்டித்தால் போதாதா?
புழல் சிறைவாசம் அவசியமா?
படத்தை திரையிடமாட்டோம் என்ற இவர்களின் மிரட்டலுக்கு பதிலாக வந்ததுதான் அந்த விசிலடி த்தான் ரசிகர் மிரட்டல்.
அவர்கள் உண்மையிலேயே ஒசூரில் இருந்து கத்தியும் கையுமாக வந்து விடவில்லையே?
இதற்கு கைது ,சிறை தேவையா?
suran

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தம்பி தனது தற்கொலைக்கு காரணம் என்ற குற்றசாட்டுக்கு கடித புகாருக்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அமைச்சர் சுரேஷ் பாலாஜி தம்பி மீதான குற்றசாட்டுகளுக்கு அவரை குண்டர் தடுப்பில்தான் உள்ளே வைக்க வெண்டும்.அதை செய்ததா தமிழக காவல்துறை .?
இதற்கே காவல்துறை இப்படி நடந்து கொள்கிறது என்றால் .
இவை எல்லாம் போகட்டும் 'மாட்டுக்கறி மாமி"கட்டுரை வெளியிட்ட ஒரே காரணத்திற்காக நக்கீரன் கோபாலுக்கு எத்தனை கொலை மிரட்டல்கள்.அது போதாதென்று பகுதி,பகுதியாக அதிமுகவினர் கிளம்பிவந்து நக்கீரன் அலுவலகத்தை தாக்கி அங்குள்ளவர்களையும் கொலை வெறி தாக்குதல் நடத்தினரே அந்த நேரம் வழக்கு வெறு நடந்து கொண்டெஇருந்தது.
அதை முன்னின்று நடத்திய அசோகன் போன்றவர்களை இதுவரி கைது செய்துள்ளார்களா?தொலைக்காட்சிகளில் கூட அந்த தாக்குதல் காட்சிகள்,கொலை மிரட்டல்கள் ஒளிபரப்பாகியதே .
நக்கீரன் இருக்கும்பகுதிக்கு குடிநீர் ,மின்சாரம் எல்லாம் துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்களும் சேர்ந்து தண்டிக்கப்பட்டார்கள்.அது பொது அமைதிக்கு ஊறு உருவாக்கவில்லையா?
suran
ஜெயலலிதா இப்போது சொன்ன மாதிரி ஒரு குற்றம் செய்தாலே குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளலாம் என்பதற்கு காவல்துறை எடுக்கும் நடவடிக்கை பற்றி மிகப்பயமாக உள்ளது.
இது எதிர்கட்சிக்காரர்களை வரைமுறையில்லாமல் குண்டர்களாக்கி சிறை வைக்க மட்டுமே பயன் படும்.
முதல்வர் ஜெயலலிதா கூறியது போல்
 'ஒருமுறையே பொதுஅமைதிக்கு  அச்சுறுத்தலாக குற்றம் செய்தால் அதற்கு குண்டர் தடுப்பை தாராளமாக பயன்படுத்தி உள்ளெ தள்ளலாம்.'
வார்த்தைகள் மிக கொடுரமானது.
எதிர்கட்சிகள் இப்பொது நடத்தும் ஆர்ப்பாட்டங்கள்,சாலை மறியல் ,முதல் தட்டி போர்டுகள் வரை அனைத்துமே  பொது மக்களுக்கும்,அமைதிக்கும் இடைஞ்சளைத்தருவதுதானே.?
கலைஞர் விடும் அறிக்கைகள் கூட அந்தவகையில் சேர்க்கலாமே.
இப்படி சொல்லுவதன் மூலம் வீரபாண்டி ஆறுமுகம்,பொன்முடி போன்று இனி யாரும் குண்டராவதில் இருந்து தப்ப முடியாது.
இதைத்தானே தமிழக முதல்வர் எதிர் பார்த்தார்.
பால் தாக்கரே மரணம் தொடர்பாக முகநுலில் குறிப்பு எழுதிய பெண்களை உள்ளெ போட்ட மாதிரி இது பொன்ற இடு கைகள் கூட பொது அமைதியை கெடுக்கும் என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்பதுதான் எனது தற்பொதைய பயம்.
suran
இது கமல் ரசிகர்கள் சம்பந்தமான ஆதரவு இடுகை அல்ல.
பொதுவான சட்டம்-ஒழுங்கு அனைவருக்குமான ஒழங்காக இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான்.
ஒரு குற்றம் செய்தாலே குண்டர் சட்டம் என்றால் அது உணர்ச்சி வேகத்தில் குற்றம் செய்ப்பவர்களுக்கு மட்டுமல்ல.பொது அமைதிக்கு அச்சுறுத்தல் என்ற வார்த்தை உபயோகம் மின்தடையை எதிர்த்து சாலை மறியல் செய்தால் கூட அதை முன்னின்று நடத்தியவரை குண்டராக்கிவிடும் வாய்ப்பை காவல்துறைக்கு தரும்.
இதை அரசியல் கட்சிகள் கண்டிக்காதது ஏன் என்று தெரியவில்லை.அதிகமாக பொது அமைதிக்கு ஊறு விளைவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவர்கள்தானே?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
  நாவலாசிரியர் செல்வராஜ் "தோல் " நாவலுக்கு சாகித்ய அகாடமி  விருது.
 ==============================
திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2010ல் மேலாண்மை பொன்னுசாமி, 2011ல் காவல்கோட்டம் நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும் வழங்கப்பட்டது. 
suran
இந்த ஆண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த நாவலாசிரியர் செல்வராஜ், எழுதிய தோல் என்ற நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கமாக யதார்த்த மொழிகளில் எழுதியுள்ளார். 26 அத்யாயங்களாக 117 கேரக்டர்களுடன் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலை இவரது உள்ளத்தை வருத்தவே நாவலாக வடிவமைக்க தொடங்கினார்.பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பிரசுரிக்கவில்லை. கைப்பிரதியாக இருந்த இந்த நாவலை நண்பர் ஒருவர் பார்த்து அதன் ஆழமான கருத்தை வியந்து புத்தகமாக வெளியிட உதவியுள்ளார். இந்த நாவலுக்காக தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு சிறந்த நாவலுக்கான விருதை அளித்தது. இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளது.இவர் எழுதிய முதல் நாவல் மலரும்-சருகும் ஆகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட தேனீர் எனும் நாவல் திரைப்படமாக வந்துள்ளது. இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதை, 50 ஓரங்க நாடகம், இருவரின் வாழ்க் கை வரலாறு, 6 நாவல்கள் எழுதியுள்ளார். விருது கிடைத்த நாவல் இவர் எழுதிய 5வது நாவலாகும். 

மேலும்அசாம் நாவலாசிரியர் சந்தனா கோஸ்வாமி, வங்காள எழுத்தாளர் சுப்ரதா முகோபாத்யாய, மணிப்பூரி எழுத்தாளர் ஜோதா சி. சனாஸம் உள்பட 24 மொழிகளில் சிறந்த படைப்புகளை வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சிறுகதைப் பிரிவில் ஜெயந்த் பவார் (மராத்தி), உதய் துலங் (நேபாளம்), கௌராஹரி தாஸ் (ஓரியா), கந்தஹார் ஹன்ஸ்டா (சந்தாலி), மறைந்த எழுத்தாளர் இந்திரா வாஸ்வானி (சிந்தி), பெட்டிபோட்லா சுப்பிரமாமையா (தெலுங்கு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த விமர்சகராக சந்திரகாந்த் டோபிவாலா (குஜராத்தி), சிறந்த சுயசரிதையாக ஷெபாலிகா வர்மா எழுதிய "மைதிலி' ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.
சென்ற முறை விருது வாங்கிய சு.வேங்கடேசன், இப்போது விருது வாங்கப்போகும்
டி .செல்வராஜ் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
   
sri lankan leopard

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?