பயச் சுனாமி

சுனாமி மறக்க முடியுமா?
 ------------------------------------
அந்த ஆண்டு கிறிஸ்துமசுக்கு அடுத்த தின ஆழிப்பேரலை பேரழிவு மறக்க முடியுமா?இதுவரை கடலை வேடிக்கை பார்க்கவும்.அதன் கரையில் காற்று வாங்க நடை போட்டத்தையும் மாற்றி கடலை பற்றிய அச்சம் மனதில் வேரோடி போன தினம்.தமிழர்களின் தாயகம் லெமுரியா கண்டம் கடற்கோளில் போனதை ஒப்புக்கொள்ள வைத்த தினம்.
இப்போது அந்த கடலின் சீற்றத்துக்கு பலியான நம் சொந்தங்களை நினைவில் கொள்வோம்.
"சன்'னில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தவர் இடையில் 'என்னப்பா இப்படி அதிர்கிறது?'என்று அதிர்ச்சியில் எழுந்ததை நேரலையாக பார்த்தபோது சிரிப்புதான் வந்தது.
அதன்பின்னர் அதே செய்திகளில் சென்னை கடற்கரையில் கடல் சீற்றம்,அதில் நடை பயிற்சி சென்ற மனிதர்கள்  ,அவர்களின் கார்கள்-வாகனங்கள் மாநகரை நோக்கி கடலலைகள் எரிச்சலில் தள்ளுவதை பார்த்தபோதுதான் உண்மை நிலை உரைத்தது.
பார்க்க,பார்க்க குமரிவரை பேரலைகளின் அழிவுச்செயல் மனதை பயத்தில் அழுத்தியது.
உலகமே அழியப்போவதாக எண்ணம் பதிந்து கையாளாக பயத்தை தந்தது.வேளாங்கண்ணி கோவிலில் கிறிஸ்துமசை முன்னிட்டு கும்பிட்டு கடலி நீராடிய நன்கு தெரிந்த செய்தியாளர் கும்பிட்டது பலிக்காமல் கடல்கோளில் பலியான செய்தியும் வந்தது.
இதேபோல் எத்தனை உயிர்கள் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பின்னே கடலுக்கு கொஞ்சம் அமைதி திரும்பியது.ஆனாலும் இப்போதும் கடலின் வழக்கமான எற்ற,இறக்க காலங்களிலும் சுனாமி பயம்தான் வருகிறது.
suran-sunami

பூம்புகார்,தென்மதுரை பொன்ற நகரங்களை கடல்கோள் கொண்டு போன கதைகளை மெய்யாக கண் முன் கண்ட நாள் .மனிதன் உலகையே ஆண்டு தன கைவசப்படுத்தினாலும்,அணுவை பிளந்து சாதனை செய்தாலும்கடவுள் துகளை கண்டு உலகின் படைப்பை உணர் ந்தாலும் மனிதனை விட இயற்கைதான் வலியது அதன் முன் மனிதன் தூசுதான் என்பதை உணர்த்திய நாள்.
இது பொன்ற இயற்கை இடர்பாடுகளை கண்டு மனிதன் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டான் .இதை பயன் படுத்திக்கொண்டு ஒரு கும்பல் இதோ உலகம் அழியப்போகிறது,இந்த தேதியில் அழிந்து விடும் என்று உலக அழிவுக்கு  நாள் குறித்துக்கொண்டிருக்கிறது.
மாயா நாகரிகம் அன்றைய காட்டுமிராண்டித்தன வாழ்க்கையில் மிக முன்னேறிய ஒரு சமுக வாழ்வு.அதனால் அவர்கள் நாட்குறிக்க கண்டுபிடித்திருந்த நாட்காட்டிதான் உலகின் வாழ்வையே நிர்ணயம் செய்வதாக மூட நம்பிக்கையை உலகம் முழுக்க பரப்பி அதில் ஒரு மன கு ழப்பத்தையே உலக மக்கள் மனதில் உருவாக்கி விட்டார்கள்.
மாயா நாட்காட்டி முடிந்தால் உலகம் முடியும் என்றால் மாயா நாட்காட்டி உண்டாக்கிய முதல் நாளில் இருந்துதான் உலகமே உருவாக்கி சுற்ற ஆரம்பித்ததா?இக்கேள்வி ஏன் மக்கள் மனதில் உருவாக வில்லை என்றுதான் தெரியவில்லை.
அவ்வப்போது நம் மக்களிடம் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
அது அவர்களுக்கு ஒரு சமுகம் தழுவிய பொழுது போக்கு என்று கூட சொல்லலாம்.
மஞ்சள் சேலை கட்டினால் அண்ணனுக்கு நல்லது,பச்சை சேலை கட்டினால் தம்பிக்கு நல்லது,சிகப்பு சேலை கட்டினால் கணவனுக்கு நல்லது.நீலச்சேலை மகனுக்கு நல்லது என்று திடீர் என யாரவது கிளப்பி விடுவார்கள் .அந்த சேலை கட்டியதால் கடைசியில் புடவை கடைக்காரருக்குத்தான் நல்லதாக அமையும்.
ஒருவேளை இந்த வதந்திகளை உருவாக்கியது முடங்கிப்போன கலர் சேலைகளை விற்க வியாபாரிகள் செய்யும் தந்திரமாகக்க் கூட இருக்கலாம் .
இரவு ஒரு பெண் தலையை விரித்து வெ ள்ளைச்சேலை யுடன் தெருத்தெருவாக அழுதுக்கொண்டே போனாள் அதனால் வேப்பிலையை தெரு முழுக்க கட்டுங்கள்.
அந்த கோவிலில் விளக்கு எற்ற எற்ற அணைந்து விட்டதாம் வீடுதோறும் விளக்கு எற்றுங்ககள்,ரத்த காட்டேரி வீடு கதவை தட்டுகிறது இதை செய்யுங்கள்-அதை செய்யுங்கள்
இது போன்ற செய்திகள் அடிக்கடி கேட்டு அது புரளிதான் என்று தெரிந்த பின்னரும் அடுத்த வதந்திக்கு பயந்து பரிகாரம் செய்யும் மக்களை நன்கு புரிந்து கொண்ட சிலர் அவர்களின் பக்தியையும் -பயத்தையும் கசாக்கிக்கொள்ள செய்யும் தந்திரங்களே இது போ ன்ற வதந்திகள்.
இது தெருவில் பாம்பு வித்தைக்காரன் சொல்லும் தாயத்து வாங்காவிட்டால் ரத்தம் கக்கி சாகும் மிரட்டல் போன்றதுதான்.
இது போன்றவைகள் தெரிந்திருந்தும் மீண்டும் ,மீண்டும் ஏமாறுகிறோமே அதுதான் நமது ஒட்டு மொத்த சமுக குணம்.சிறுவயது முதலே பூச்சாண்டி காட்டி  வளர்க்கப்பட்ட வளர்ப்பு முறை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------





 

 



---------------------------------------------------------------------------------------------------------------
"எம்.ஜி.ஆர்" நினைவு தினம்
'மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். 
suran
பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார், 1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார். மு தல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?