"தீ "


suran

மதுரை மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என கேட்டு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா டாக்டர் ராமதாசுக்கு கடிதம்  அனுப்பி உள்ளார். அதில் " மதுரை மாவட்டத்தில் பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர். ராமதாஸ் 20.12.2012 அன்று வருகை புரிந்து அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடத்தி ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  
இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர்  அவர் மீது மதுரை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு ஏன் தடைஉத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதற்கான முகாந்திரம் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்திரவிட்டுள்ளார்."
நிச்சயமாக விளக்கம் கேட்பது தவறு .சாத்திய மோதல்களை தூண்டினார் என்று நடவடிக்கை எடுப்பதுதான் நல்லது.
ராமதாசின் தற்பொதைய பேச்சுக்கள்,நடவடிக்கைகள் முழுக்க சாத்திய மோதல்களை உருவாக்கும் படி அமைந்துள்ளது பகிரங்கமாகவே தெரிகிறது.
வன்னியர்களை தூண்டி தர்மபுரியில் கலவர விதையை விதைத்து விட்டு தற்பொது அவ்வப்போது சாத்திய குமுறல்கள் களமான தென்மாவட்டங்களில் தனது சகுனித்தன வேலை யை  ஆரம்பிக்க வந்துள்ளார்.
suran
இப்படி சாதிய மோதல்களை தூண்டியாவது தான் அல்லது தனது மகன் அன்புமணி முதல்வராக மாட்டோமா?என்ற நப்பாசைதான் ராமதாசுக்கு.
தனக்கு பதவி வெண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை சாதி வெறிக்கு பலியாக்க துடிக்கும் ராம்தாஸ் போன்றோர்கள் தலைவர்கள் அல்ல.குண்டர் சட்டத்தில் போது அமைதிக்கு அச்சுறுத்தல் உருவாக்கியதற்காக உள்ளே செல்லவேண்டியவர்கள்.
மதுரை வந்த அவர் ஊடகங்களை வெளியே  அனுப்பிவிட்டு  கதவை மூடிக்கொண்டு சாதி அமைப்பினருடன் சதியாலோசனை செய்துள்ளார்.என்ன,என்னவெல்லாம் அதில் பேசப்பட்டதோ?
தென்மாவட்டங்களில் சிறுவர்கள் விளையாடும் கபடி,கிரிக்கெட் போட்டிகளிலும் -பள்ளிக்கு பேருந்தில் செல்லும்போது இடம்பிடிப்பதிலும் கூட சாதி மோதல்கள்  வருகிறது.
ஏற்கனேவே தங்களுக்கு பெயர் கிடைக்க சாதி அமைப்பு நடத்துபவர்கள் இவரின் ஆசை வார்த்தைக்கு ஒத்துழைத்து போக ஆரம்பித்து விட்டால் நம் தமிழகம் சாதி கலவரத்தில் நாசமாகி விடும்.
அரசு இதனை முளையிலேயே கிள்ளி எறிய வெண்டும்.சாதி வெறித் தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும் .
சா"தீ ",மத வெறிகள் மனிதனை மீண்டும் காட்டுமிராண்டியாக்கி விடும்.
------------------------------------------------------------------------------------------------------------
பல கோப்புக்களை ஒரே தடவையில் தரவிறக்க,

 இன்று எமக்கு தேவையான அத்தனை விடயங்களையும் இலகுவாக பெற்றுத்தரும் அளவிற்கு இணையத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமானதாகக் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இணையத்தளங்களில் இருக்கும் பல்வேறு பயனுறுதி மிக்க கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

 இருந்த போதிலும் அவற்றின் உதவியுடன் பொதுவாக குறித்த ஒரு நேரத்தில் ஒரு கோப்பு வீதமே தரவிறக்கம் செய்துகொள்ள முடிகின்றது.
ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களை எளிதா வாகவும், வேகமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை Web Batch Downloader எனும் மென்பொருள் தருகின்றது.
தரவிறக்க
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

suran
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?