ஊழல் ஒழிப்பு தினம்::

suran

ஊழலை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி உலக ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதை இந்தியாவை பொறுத்தவரை ஊழல் தினம் என்று கொண்டாடலாம்?
இன்றைய தினம் ஏதாவது விருதுகளை வழங்கி பிரதமர் வாழ்த்து தெரிவிக்கலாம்.
இதை பற்றி எல்லாம் நமது மத்திய ஆளுங்காங்கிரசு யோசிக்க வேண்டும்.
 முதல் விருதை பெற பலத்த போட்டியாளர்கள் இருப்பதால்  2ஜி,3ஜி, கே .ஜி
,நிலக்கரி ஊழல்வாதிகளை காப்பாற்றுவதையே தனது ஆட்சியின் தர்மமாக வைத்திருக்கும் மன்மோ கன் சிங்குக்கே வழங்கி பெருமைப்படுத்தலாம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------
11 மாணவர்கள் கதி?
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தைக் கடை பிடிக்க சட்டவிரோதமாக முயன்றனர் என்றும் ,அரசுக்கு ஆதரவான தமிழின விரோத கட்சி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர் என்றும் குற்றம்சாட்டி யாழ் பல்கலைக்கழக 11 மாணவர்களை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர்.
தமிழின விரோத கட்சியினர் தாங்களே செய்து கொண்ட  தாக்குதலை சாக்காக வைத்து மாணவர்களைத் துன்புறுத்த முயற்சி நடக்கிறது என்று யாழ் பல்கலை ஆசிரியர்கள் இலங்கை குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
suran
வட இலங்கையில் இருந்து பயங்கரவாதப் புலனாய்வுத்  துறையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்து அப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று வராததாலும் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமான இராணுவத்தினர் கெடுபிடிகள் காணப்படுவதாலும் எழுந்துள்ள அதிருப்தியால்தான் அம் மாணவர்கள் மாவீரர் தினத்தை கடைபிடித்து தங்கள் எதிர்ப்பை காட்ட  நேர்ந்தது என்றும்   ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இக்கடிதத்தால் ஏதும் நம்மை கிடைக்குமா என்று தெரியவில்லை?
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உலக நாடுகளும்,ஐ.நா.வும் கண்டு கொள் வதில்லையே?
இங்குள்ள தமிழின போராளிகளும் நடக்க வேண்டிய நடைமுறைகளை கண்டு கொண்டு அதற்கு போராடாமல் வீர வசனம் பேசி தங்கள் தமிழின வியாபாரத்தை நடத்தி சீமான்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நெப்போலியன் கடிதம் ஏலம்.
 பிரஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்  200 ஆண்டு களுக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று பாரிசுக்கு அருகே ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
1812 இல் பெருந்தோல்வியில் முடிந்த ரஷ்யா மீதான ஆக்கிரமிப்பின் போது இந்தக் கடிதத்தை நெப்போலியன்  தனது வெளியுறவு அமைச்சருக்கு எழுதியிருந்தார்.
suran
கிரம்லினில் உள்ள கோட்டை கொத்தளங்களுடன் கூடிய மாளிகையை எப்படியாவது தகர்த்துவிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதில் நெப்போலியன் குறிப்பிட்டிருக்கிறார்.
நெப்போலியனின் படைகள் ஆட்களே இல்லாமல் கைவிடப்பட்ட ரஷ்ய தலைநகரை அடைந்தபோது, அங்கு குளிர்ப்பனிக்காலமும் ஆக்கிரமித்துக் கொள்ளவே, பிரஞ்சுப் படைகளுக்கான விநியோக பாதையும் அடைபட்டு விட்டது.
இந்த நிலையில் பிரஞ்சுப் படைகள் தமது ரஷ்ய ஆக்கிரமிப்பில் தோல்வியை தழுவத் தொடங்கியிருந்தன.
suran
ஆனால், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அவர்கள் கிரம்ளின் ஆட்சிபீடத்தின் கோட்டை கொத்தளங்களுடன் கூடிய மாளிகை வளாகத்தை நிர்மூலம் செய்து விட்டு வெளியேற நினைத்தனர்.
அது குறித்துத்தான் நெப்போலியன் அந்தக் கடிதத்தில் தனது அமைச்சருக்கு எழுதியுள்ளார்.
ஆனால், அவரால், அந்த வேற்று மாளிகையின் பல கோபுரங்களையும், சுவரையும் மற்றும் அங்கிருந்த வெடிமருந்தையுந்தான்காலி   செய்ய முடிந்தது.
------------------------------------------------------------------------------------------------------------ 


______________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?