சின்னப்பிள்ளைத்தனம்,

பெங்களூருவில் 17  திரையரங்குகள்  


விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக நடிகர்கள் -இயக்குனர்கள் மற்றையோர் ஆதரவு தெரிவித் துள்ளனர்.
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அதிமுக தொழிற்சங்கம் மட்டும் முக்கிய வேலையில் இருப்பதால் இன்னமும் கருத்துகூட தெரிவிக்க வில்லை.
முக்கிய வேலை?
நடிகர் சரத் குமார் தனது அதிமுக ஓட்டுகட்சியை பலப்படுத்திவருவதுதான்.
ஆனால் இந்திய அளவில் ஆதரவு வார்த்தைகள் கமல்ஹாசனுக்கு பெருகி வருகிறது.ஆனால் இது பொன்றவற்றை நம் அம்மையார் கண்டு கொள்ளவே மாட்டார்.அவருக்கு பலி வாங்கல் மட்டுமே கவனத்தில் இருக்கு.சாலைப்பணியாளர்களுக்கு பணி வழங்க்கக்கூறி நீதிமன்றம் உத்திரவிட்டப்பின்னரும் என்ன செய்தார் என்பது நாம் அறியாததல்ல.இப்போது மக்கள் நலப்பணியாளர்கள் அம்மாவின் கண்பார்வைக்கு  ஆண்டுக்கணக்கில் தீர்ப்புக்குப்பின்னரும் காத்திருக்கிறார்கள்.
தான் மட்டும் நீதிமன்றம் செல்ல வாய்தா வாங்குவது மற்றவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுவதுமே அவரின் பொழுது போக்காகி விட்டது.
ஸ்டாலின்,கருணாநிதி போன்றோரை சிறையில் தள்ளிவிட்டு பின்னர் வழக்குக்கு காரணம் தேடி கிடைக்காமல் அவர்கள்  வெளியெ  வந்தது பழிய கதைதானே ?
   கமல்ஹாசனை இதுவரை உள்ளே தள்ளாததே அம்மாவின் பெருந்தன்மையாக இருக்கும் போல் தெரிகிறது.சோ,சரத்குமார் ,ராதா ரவி  ஆகியோர் அதைத்தான் சொல்லுவர்.
தமிழ் நாட்டை த்தவிர மற்ற இந்தியா முழுக்க விஸ்வரூபம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் போது இங்கு மட்டும் தடை.
மற்ற மாநில அரசுகள் எல்லாம் அனுமதிக்கும்போது இங்கு வெளியிட்டால் உருவாகக்கூடிய சிறிய பிரச்னைகளை கையாளத் தெரியாத கையாலாகாதவர்களா இங்குள்ள ஆட்சியாளர்கள்-அதிகாரிகள்.
உச்ச நீதிமன்றம் கூறியும் தண்ணீரை திறக்காத கர்நாடாக அரசை நீதிமன்ற தீர்ப்பை வைத்து மேல் முறையீடு சென்று தண்ணீரை வாங்க முடியாத ஆட்சியாளர் ஒரு படத்தை திரையிடக்கூடாது என்பதற்காக அதிகாரத்தையும்,அரசுப்பணத்தையும் ,நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்.
விஸ்வரூபம் படம் தடைக்காக  உச்ச நீதிமன்றம் கூட அரசு செல்லும் என்று அறிவித்திருப்பது  சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.அங்கு சென்றும் தடை போட்டது தவறு என்று தீர்ப்பாகி விட்டால் இவரது அரசுக்குத்தானே அசிங்கம்.அதை கண்டித்து ஐ.நா.சபைக்கு, அதன் பின் உ லக நீதிமன்றம் செல்லுவாரா என்ன?வே று என்ன சொல்ல?

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்:- "இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் சந்தித்தோம். சுருக்கமாக கூறினால் ஒரு படத்துக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம். கமல்ஹாசன் ஒரு உயர்ந்த  கலைஞர். கமல் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.அதில் ஆட்செபரமான,இசுலாம் எதிர்ப்பு ஏதும்இருப்பதாக  முஸ்லீமான எனக்கு தெரியவில்லை.இது கமல்ஹாசன் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது."
நடிகர் நாகார்ஜுன்: "கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை.தமிழ அரசின் பலி வாங்கலாகவே எனக்கு தெரிகிறது."
 

நடிகர் சித்தார்த்: மிகச்சிறந்த தமிழ் நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுவதாக சொல்வதை கேட்ட போது இதயம் நொறுங்கி விட்டது. தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் ஓட தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு துயரமான நாள். மோசமான வாரம்.

நடிகர் ரஜத் கபூர்: விஸ்வரூபம் படம் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வெளியாகி உள்ள நிலையில், அதனால் நாட்டின் ஒற்றுமைக்கு எப்படி பங்கம் வந்து விட்டது? தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அது நாடு முழுமைக்கும் பொருந்தாதா அல்லது நம்மிடம் பல நாடுகள் இருக்கிறதா?

நடிகை ஜெயப்பிரதா: விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே 'மெசேஜ்' இருக்கும்.

இந்தி பட அதிபர் மகேஷ்பட்: கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்.

தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன்: தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்.

நடிகர் மனோஜ் பாஜ்பாய்: ஒரு படத்தை சுமுகமாக திரையிடுவதற்கு தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் உறுதி அளிக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு அத்தகைய சான்றிதழ் கிடைத்த பிறகும் தமிழ்நாட்டில் அச்சத்தை தரும் சூழ்நிலையை  தமிழ் நாட்டின் அரசாங்கமே உருவாக்கிக்கொண்டிருப்பதுதான் ஆச்சரியம்.தமிழ் நாட்டில் அறிவிக்கப்படாத மிசா இருக்கிறது.   

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?