கலை ஞானி


"கமல்ஹாசன்"  என்ற முன் மாதிரியை, முழு கலைஞனை, கலியுகத்தின் கலிலியோவை பற்றி அறிந்து கொள்வது நல்லது.

'மகாநதி' திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம். சென்னையிலிருக்கிற முன்னணி சினிமா எடிட்டர்கள் பலர் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். கமல் ஏதோ 'ஆவிட்'டுன்னு ஒண்ணு கொண்டு வராராம். அஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா... அதை கொண்டு வந்து வச்சுகிட்டுதான் மகாநதியை எடிட் பண்ண போறாராம். அதென்ன ஆவிட்டோ, டேவிட்டோ? இங்க ஒருத்தனுக்கு
ம் புரியல. தணிகாசலம் சாரு பிலிமை கையில புடிச்சு ஸ்பாட் வச்சு நறுக்கிற வேகம் வருமா? இல்ல அந்த பர்பெக்ஷன்தான் அதுல வந்துருமா? வௌங்கிரும். 

suran
இவர்களின் பேச்செல்லாம் அப்படியே கமல் காதுகளுக்கும் போனது. ஆனால் நம்ம படத்துக்கு ஆவிட் எடிட்டிங்தான். மூவியாலாவெல்லாம் இன்னும் கொஞ்ச நாளி¢ல் இருக்காது. வேணும்னா அதையெல்லாம் மியூசித்துல பார்த்துக்கலாம் என்ற கமல், இந்த விஷயத்தையும் ஒரு கை பார்த்துக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு களம் இறங்கினார்.

மும்பையிலிருந்து ஸ்

பெஷலாக ஒரு எடிட்டர் வந்துதான் மகாநதியை எடிட் பண்ண வேண்டியதாயிற்று. இங்குள்ள யாரும் அதை கற்று கொள்கிற எண்ணத்திலேயே இல்லை. அவ்வளவு ஏன்? இதை வேடிக்கை பார்க்கக் கூட யாரும் வரவேயில்லை அங்கு.
அது நடந்து சில பல வருடங்களில் ஒவ்வொரு எடிட்டிங் ஸ்டுடியோக்களிலும் ஆவிட் புகுந்து கொண்டது. ஏதோ ஆமை புகுந்தது போல ஆவிட்டை பார்த்து அஞ்சிய அத்தனை எடிட்டர்களும் தடவி தடவி கற்றுக் கொண்டார்கள் இந்த ஆவிட் தொழில் நுட்பத்தை. அதுதான் கமல்ஹாசன்! படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு ஸ்பாட் எடிட்டிங் செய்கிற அளவுக்கு தொழில் முற்றிப் போனதற்கு காரணமும் கமல்தானே அய்யா?

அப்படியே இன்னொரு சம்பவம்... இன்று வீட்டுக்கு வீடு பரவிவிட்டது கம்ப்யூட்டர் சாதனம்! பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், பல பத்திரிகை அலுவலகங்களில் கூட அது இருந்ததில்லை. க் ச் ம் என்று எழுத்துக்களை தேடி எடுத்து பொறுத்தி கொள்கிற அவஸ்தையும் இருந்தது. ஒரு சில மிகப்பெரிய பத்திரிகை அலுவலகங்களில் மட்டும் டிடிபி என்று சொல்லப்படுகிற அதிநவீன தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள். ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போலவே கம்ப்யூட்டரை பலரும் கருதி வந்த காலம் அது. 

பத்திரிகையாளர்களை சந்திக்கிற சினிமாக்காரர்கள் பத்திரிகை செய்திகளை கைகளால் எழுதி, அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்வார்கள். போட்டோக்கள்? நு£ற்றுக்கணக்கான போட்டோக்களை பிரிண்ட் போட்டு மேக்ஸி, போஸ்ட் கார்டு சைஸ் என்று விதவிதமாக தருவார்கள். அதை ஒரு அட்டையில் ஒட்டி பிலிம் எடுத்து பிளேட் போட்டு என்று... ஆறேழு பரிட்சைகளை தாண்டிதான் ஒரு துணுக்கு செய்தியாக இருந்தாலும் பத்திரிகையில் இடம் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில்தான் நான் கமல் பிரஸ்மீட் ஒன்றுக்கு சென்றிருந்தேன். கேள்வி பதில் நேரம் முடிந்து கிளம்பும்போது அழகாக வட்ட வடிவில் ஒரு பொருளை கையில் கொடுத்தார்கள் கமல் அலுவலக ஊழியர்கள். அதுதான் குறுந்தகடு என்பதே தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தார்கள் அநேக நிருபர்கள். (நானும் கூட) இதுக்குள்ளேதான் கமல் சாரோட போட்டோ இருக்காம். கொண்டு போய் ஆபிஸ்ல கொடுங்கப்பா. அவங்க கம்ப்யூட்டர்ல போட்டு கண்டுபிடிப்பாங்க என்றெல்லாம் ஆளாளுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆனார்கள்.
கமல் சொன்னார், 'இன்னும் கொஞ்ச நாளில் இப்படிதான் ஆகப்போவுது. போட்டோ பிரண்ட் போட்டு கொடுக்கிற வழக்கமெல்லாம் மறைஞ்சுரும்' என்று. ஆழ்வார்பேட்டை ஏரியாவிலிருக்கிற இறைச்சி கடைகளில் 'தல'க்கறிக்கு அவ்வளவு விற்பனை இல்ல. ஏன்னா கமல் மாதிரி ரொம்ப பேரு இங்க இருப்பாங்க போலிருக்கு என்று கமென்ட் அடித்தபடியே கலைந்த கூட்டம்தான் நாங்கள் எல்லாம்.

எதையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து... என யோசிப்பவர் கமல். நாமெல்லாம் பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தால், கமல் அண்டார்டிகாவுக்கு அந்த பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பார். அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களில் ஒன்றுதான் இந்த டிடிஎச் ஒளிபரப்பு. (கமல் செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்து தொலைப்பதாம்?)

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது. அப்படி ஒளிபரப்பினால் தியேட்டர்களை இழுத்து மூட வேண்டி வரும் என்று அவரவர் தொழில் குறித்து அச்சப்படுவதும் நியாயம்தான். சின்னத்திரை வந்தபோதும் இதே அச்சத்தோடு இருந்தவர்கள்தான் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்போதைவிட இப்போதைக்குதான் படங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. எங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கூடியிருக்கிறது. இத்தனைக்கும் தினந்தோறும் மூன்று படங்களையாவது ஒளிபரப்பிவிடுகின்றன முன்னணி சேனல்கள்.

சின்னத்திரையில் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தபோது சினிமாக்காரர்கள் திரண்டு சென்று அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டார்கள். 'ஏன்யா... உங்க சினிமா வந்து நாடகத்தை அழிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும். இந்த விஞ்ஞான வளர்ச்சியை ஏத்துகிட்டுதான் ஆகணும்' என்றார் கலைஞர். அதே போன்றதொரு 'உரத்த குரல்' இப்போது தேவைப்படுகிறது கமலுக்கும்!
ஆடியோ மார்க்கெட் ஒழிஞ்சுருச்சே என்று சினிமாக்காரர்கள் அலறும்போதுதான் அதைவிட பல மடங்கு கொட்டிக் கொடுக்கிறதே, சேனல் ரைட்ஸ்... அத பற்றி ஏம்ப்பா பேச மாட்டேங்கிறீங்க? என்ற எதிர் கேள்வி பிறக்கிறது இங்கே.

சரி விவாதத்தை விட்டுவிட்டு கமல் பிரச்சனைக்கு வருவோம். சுமார் எழுபது கோடியை இந்த படத்திற்காக இறைத்திருக்கிறார் அவர். நேற்று வந்த சூர்யா போன்ற நடிகர்கள் எல்லாம் முப்பது கோடி சம்பளம் கேட்கும்போது சாதனையாளர் கமல், படத்திற்கு ஆன செலவு போக பதினைந்து கோடியாவது இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?

இப்படத்தின் முதல் தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்ட பிவிபி நிறுவனம், போட்ட பணத்தை திரும்ப கேட்கிறது. சுமார் ஐம்பது கோடி ரூபாயை அவர் தரவேண்டிய நிலையிலிருக்கிறார். ஆனால் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து இந்த படத்தின் மொத்த விலையுமே ஐம்பது கோடியாகதான் நிர்ணயிக்கிறார்களாம். அதை மேலும் குறைக்கிற விதத்தில் நடுவில் வந்து சேர்ந்தது முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக கிசுகிசுப்பு எழுந்ததுமே படத்தின் வியாபார தொகையும் பாதிக்குமேல் குறைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

தீப்பிடிக்கிற நேரத்தில் தப்பி ஓடுகிற வழியில் அழகான கோலம் போட்டிருக்க வேண்டும் என்றோ, அது கிழக்கு வாசலாக இருக்க வேண்டும் என்றோ நினைக்க முடியாது. நடுநிலையோடு நோக்கினால் கமலின் நிலையும் அதுதான். போட்ட பணத்தை எடுப்பதற்காக அவர் புதிதாக திறந்த புழக்கடைதான் இந்த டிடிஎச் என்று கருத வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுயலாபத்துக்காக உயிராக நேசிக்கும் சினிமாவை காவு கொடுக்கிறவரல்ல கமல் என்பதையும் அவரது கடந்த கால சினிமா வரலாறுகள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பாரம்பரியமான சினிமா நிறுவனங்கள் எல்லாம் எங்கே போயின? சத்யா மூவிஸ் எங்கே, தேவர் பிலிம்ஸ் எங்கே? சூப்பர்குட் எங்கே, எல்.எம்.எம் எங்கே? ஏ.வி.எம் நிறுவனம் ஏன் வருடத்திற்கு ஒரு படத்தை கூட எடுக்க மாட்டேன் என்கிறது? இன்னும் இதுபோன்ற முக்கிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் ஒதுங்கின? சினிமா ஆரோக்கியமாக இல்லை. பணம் போடுகிற முதலாளி அப்படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் ஓடி ஒளிகிற அவல நிலை இங்கு தொடர்கிறது. ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், கள்ளப்பண முதலாளிகளும் ஆசைக்கு ஒரு படம் எடுத்து அதிலும் தானே ஹீரோவாக நடித்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். அவ்வளவு ஏன்? பல்லாயிரம் கோடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்து கோலி குண்டு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களே கூட விழிபிதுங்கி கிடக்கின்றன. 



எல்லாவற்றுக்கும் காரணம் வியாபாரத்தை இங்கே சுதந்திரமாக செய்ய முடிவதில்லை என்பதுதான். சூழ்ச்சியும் அசந்த நேரத்தில் கால்களை வாரிவிடும் கலையும் இங்கே சகஜமாக இருக்கின்றன. படப்பெட்டிகளை டெலிவரி செய்யும்போது பேசிய பணத்தை எண்ணி வைக்கிற விநியோகஸ்தர்கள் இங்கே இருப்பதே இல்லை. இங்கு எல்லா படங்களின் டெலிவரியும் ரத்தக்கறையோடு நடப்பதை லேப் பக்கம் சென்றால் நடுங்க நடுங்க கவனிக்க முடியும்.

'விஸ்வரூபம்' விஷயத்தில் கூட கமலுக்கு எதிரான சில சினிமா பிரமுகர்கள் முஸ்லீம் அமைப்புகளையும், தியேட்டர்காரர்களையும் துண்டி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் இதே சினிமாவிலிருக்கும் பெரும்பாலனோர் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்களே, சினிமா எப்படி பிழைக்கும்? 


ஒரு சங்கத்தின் சட்டதிட்டங்கள் இன்னொரு சங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சினிமாவில் முடியும். விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த கட்டுக்கோப்பான சட்டதிட்டங்களை எல்லாரும் மதித்தே ஆக வேண்டும் என்கிற முரட்டு சிந்தனை இங்கே பல வருடங்களாக இருக்கிறது. வேதனை என்னவென்றால் பணம் போடுகிற முதலாளியும் இங்கே கைகட்டி நிற்க வேண்டி இருக்கிறது.

கமல் என்ற முதலாளியின் நிலைமையும் இன்று அப்படிதானிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர். 'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது. சுண்டல் விற்க கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ, அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது' என்று இவர்கள் சொல்வதற்கும் அதிகாரம் இல்லை.

இந்த சின்ன உண்மையை புரிந்து கொண்டால் போதும்... விஸ்வரூபம் பிரச்சனை, இவ்வளவு பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கவேண்டிய தேவையே இருக்காது!


                                                                                                                            -ஆர்.எஸ்.அந்தணன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரதமரின் அபாயச் சங்கு!  
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என் றால் எரிபொருட்களுக்கு கொடுக்கும் மானி யத்தை வெட்டவேண்டும். உடனே எரிபொருட் களின் விலையை உயர்த்த வேண்டும் என்று அபாயச்சங்கை ஊதியிருக்கிறார். இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக எரிசக்தி குறைவான கட்ட ணத்தில் கிடைக்கிறது என மிகவும் வருத்தப்பட் டிருக்கிறார். மின்சாரக் கட்டணத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும் என மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட தேசிய வளர்ச்சிமன்றக் கூட் டத்தில் முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் பெரும் கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு மீண்டும் சலுகை களை வாரி வழங்கியிருக்கிறது. ஏற்றுமதியாளர் களுக்கு வழங்கப்பட்டு வரும் 2 சதவிகித வட்டிச் சலுகையை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்தும், ஏற்று மதிக்கான வட்டியில் தள்ளுபடி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 2013ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் கூடுதல் ஏற்றுமதிக்கு ஊக் கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித் துள்ளது. இங்கு கேள்வி என்னவென்றால், ஏழை களுக்கும், நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவைக்கு வழங்கப்படும் மானியங்களும், சலுகைகளும் மட்டும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. அதே நேரத்தில் பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மானியங்களையும், சலுகை களையும் வழங்கும் போது இனிக்கிறது ஏன் என்பதுதான்.

2011-12ம் நிதியாண்டில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு வசூலிக்காமல் விட்ட வரி மட்டும் ரூ. 5 லட்சத்து 29 ஆயிரத்து 432 கோடியாகும். இதே நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் அந்நிய நாட்டில் பதுக்கி வைத்தி ருக்கும் கறுப்புப்பணம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். இதையெல்லாம் விட்டுவிட்டு சாதாரண மக்கள் மீது சுமையை ஏற்றி பெரும் முதலாளிகளையும் பன்னாட்டு நிறுவனங் களையும் கொள்ளை லாபம் ஈட்டச் செய்வதில் மட்டும் மத்திய அரசு குறியாக இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பணத்தை வைத்துக்கொண்டு செல வழிக்க வழிதெரியாமல் நிற்கிறார்களா? அன் றாடப்பாட்டிற்கே வழியில்லாமல் அரை வயிறு, கால் வயிறு பட்டினியாக நாளைக் கழிக்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவசா யிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து வரு கின்றனர். மின்சாரத் தட்டுப்பட்டால் பல தொழில் கள் மூடப்பட்டு வருகின்றன. சாதாரண மற்றும் நடுத்தர உழைப்பாளி மக்கள் ஏற்கனவே இருக் கும் விலைவாசி உயர்வால் வாழ வழியின்றி விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்தத் தருணத்தில் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று மேலும் எரிபொருட்களின் விலையை உயர்த்த வேண்டும்; மின் கட்ட ணத்தை உயர்த்த வேண்டும் என்று “விலை உயர்வு” என்ற ஆயுதத்தை வைத்து மக்களைப் படுகொலை செய்ய மத்திய அரசு தயாராகி வரு வதையே மன்மோகன் சிங்கின் பேச்சு எடுத் துரைக்கிறது. உலக நிதி மூலதனத்தின் கொள்ளை லாபவெறிக்கு இந்தியாவை இரையாக்குவதை ஆளும்  காங்கிரஸ்  அரசு தனது கொள்கையாகக் கொண்டு செயல்படு கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?