பிப்ரவரி முக்கிய தினங்கள்

 இது கொஞ்சம் தாமதம்தான்.ஆனாலும் இந்த மாத முக்கிய தினங்களை ஒரு பார்வை பார்த்திடுவோம்.
முக்கிய நிகழ்வுகள்:-

3-2-2012 - பம்பாயில் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் வி.சாந்தாராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சாந்தாராம் 

6-2-1952 - இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத், அரசியாக முடிசூட்டப்பட்டார்.
6-2-2012 - இங்கிலாந்தில், பிறந்து 17 மணி நேரத்தில் இதய ஆபரேஷனுக்கு உட்பட்டு சாதனை படைத்தது ஒரு குழந்தை.
8-2-1959 - இந்திரா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி ஆனார்.
9-2-2010 - 11-ஆவது தெற்காசியப் போட்டிகளில் இந்தியா 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தது.
10-2-1959 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது - இதுவே முதல் வெற்றி.
13-2-2010 - கரீபியன் தீவு, ஹைதியில் 7.00 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கில் பொருள்கள் சேதமடைந்தன.
25-2-1988 - இந்தியாவின் பிருத்வி ஏவுகணை (150 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும்) வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
26-2-1887 - பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரத்தில் ஈஃபிள் டவர் கட்டும் பணி துவங்கியது.
26-2-2012 - போலியோ நோய் அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.

முக்கிய தினங்கள்:-

டார்வின் 
  • 2. உலக ஈரநில நாள்
  •   4. உலக புற்றுநோய் எதிர்ப்பு தினம்
  •   9. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள்
  • 10. உலக விஞ்ஞானிகள் தினம்
  • 11. உலக நோயாளிகள் தினம்
  • 11. உலக கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  • 12. டார்வின் தினம்
  • 18. இந்தியக் கடற்படை தினம்
  • 20. சமூகநீதி தினம்
  • 21. உலகத் தாய்மொழி தினம்
  • 25. காசநோய் எதிர்ப்பு தினம்
  • 28. தேசிய அறிவியல் தினம்
பிரபலங்களின் பிறந்த தினங்கள்:-
 
1-2-1895 ஓ.பி.ராமசாமி  - முன்னாள் தமிழக முதல்வர்
4-2-1922 பண்டிட் பீம்சென் ஜோஷி - இந்துஸ்தானி பாடகர்
6-2-1890 கான் அப்துல் கஃபார் கான் (எல்லை காந்தி) - சுதந்திரப் போராட்ட வீரர்
வ.வே .சு,

7-2-1812 சார்லஸ் டிக்கன்ஸ் - ஆங்கில நாவல் ஆசிரியர்
8-2-1897  ஜாஹிர் உசைன் - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
11-2-1847 தாமஸ் ஆல்வா எடிசன் - எண்ணற்ற மின்சாதனங்கள் கண்டுபிடிப்பாளர்
12-2-1824 சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் - இந்துமதத் துறவி
12-2-1809 ஆபிரஹாம் லிங்கன் - முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
13-2-1879 சரோஜினி நாயுடு - கவிக்குயில், இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை
19-2-1627 சத்ரபதி சிவாஜி - மராட்டிய மன்னர்
18-2-1836 இராமகிருஷ்ண பரமஹம்சர் - இந்து மதத் துறவி
15-2-1564 கலீலியோ - விஞ்ஞானஆராய்ச்சியாளர்
19-2-1855 வ.வே.சுவாமிநாத அய்யர் -தமிழறிஞர்
22-2-1732 ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி

29-2-1896 மொரார்ஜி தேசாய் - முன்னாள்பாரதப் பிரதமர்
29-2-1904 ருக்மணிதேவி அருண்டேல் - நாட்டிய கலைஞர், கலாச்சேத்ரா நிறுவனர்

நினைவு தினங்கள்:-

1-2-1876 மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை - தலபுராணங்கள் பல எழுதியவர்
1-2-2003 கல்பனா சாவ்லா - இந்தியர், அமெரிக்க விண்வெளி வீராங்கனை
3-2-1969 சி.என்.அண்ணாதுரை - முன்னாள்தமிழக முதல்வர்
4-2-1974 சத்யேந்திரநாத் போஸ் - இந்தியவிஞ்ஞானி
6-2-1931 மோதிலால் நேரு - ஜவாஹர்லால் நேருவின் தந்தை, சுதந்திரப் போராட்ட வீரர்
அண்ணா 
19-2-1915 கோபாலகிருஷ்ண கோகலே -சுதந்திரப் போராட்ட வீரர்
21-2-1906 வி.கனகசபை பிள்ளை - ஓலைச்சுவடிகளைச் சேகரித்த கவிஞர்

22-2-1958 அபுல் கலாம் ஆசாத் - சுதந்திரப் போராட்ட வீரர்
28-2-1936 கமலா நேரு - ஜவாஹர்லால் நேருவின் மனைவி
27-2-2008 சுஜாதா என்கிற ரங்க ராஜன்எழுத்தாளர்,  விஞ்ஞானி
28- 2-1963 டாக்டர் ராஜேந்திரபிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.

 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கும்ப மேளா -முடியும் வேளை ,

















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?