"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,




இது ஒரு அசிங்கம் பிடித்த விவகாரம்.தனது பத்திரிகை விற்பனைக்காக லட்மிகாந்தன் "இந்து நேசன்"பாணியை குமுதம் ரிப்போர்டர் இப்போது கையில் எடுத்துள்ளது.
தனக்கு பிடிக்காதவர்கள் அல்லது தனக்கு வேண்டியவர்களுக்கு ஆகாதவர்கள் என்று பத்திரிக்கையின் பக்கங்களை மஞ்சள் ஆக் குகிறவர்கள் தேவையானால் விபாச்சாரத்தில் [அதுதான் காரியம் ஆக கூட்டியும் கொடுப்பார்கள் என்பதைத்தான் மறை முகமாக சொல்லுகிறேன.]இறங்கவும் தயங்க மாட்டார்கள்.

அதற்கு குமுதம் ரிப்போர்ட்டரே சாட்சி.
பழைய நிர்வாகத்தில் இருக்கும்வரை மறை முகமாக செய்தவைகளை இப்போதைய நிர்வாகம் பகிரங்கமாக செய்ய ஆரம்பித்து விட்டது.
கருணாநிதி கூறும் அவாள் ஆத்திரம்   உண்மையிலேயே இருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 
முன்பு விஸ்வரூபம் விவகாரத்தில் அனைவரும் ஜெயலலிதா [அரசு]நடந்து கொண்ட விதத்தை  பற்றி செய்திகள் வெளியிட்டு கண்டித்த போது ,நமது குமுதம் ரிப்போர்ட்டர் மட்டும் இந்த விவகாரத்தில் கருணாநிதியை கண்டித்தது.
அதற்கு காரணமாக  "முன்பு ரஜினி வைத்து வாய்ஸ் கொடுத்து கருணாநிதி,மூப்பனார் வெற்றி பெற்றது போல் இப்போது கமல்ஹாசனை வைத்து வாய்ஸ் வாங்கி மக்களவை தேர்தலில் வெற்றி பெறவே  விஸ்வரூபம் விவகாரத்தை கருணாநிதி தூண்டி விட்டுள்ளார்."
 என்று கூறி எழுதியது.
எப்படித்தான் இப்படி புளுகுகளை நம்ப முடியாததை புலனாய்வு பத்திரிகையியல் என்று மன சாட்சியை ஓரமாக வைத்து எழுதுகிறார்களோ.இதை படிப்பவர்கள் நம்புவார்களா?என்ற சிந்தனை துளி கூட இல்லாமல்.யாரை திருப்தி படுத்த இவைகள் செய்திகளாக வடிக்கப்படுகின்றன?
"பெரியார்-மணியம்மை விவகாரமே வெறு"அதையும் இப்போதைய திமுக விவகாரத்தையும் ஒட்டு போட்டு ஒரே கல்லில் பிராமண எதிர்ப்பாளர்களான பெரியார்,கருணாநிதி இருவரையும் அசிங்கப்படுத்துவதாக எண்ணி தானே அம்மணமாகியிருக்கிறது.
வெறும் ஜெயலலிதாவின் முந்தைய பேட்டியை ஆனால் ஆத்திரமூட்டும் தலிப்பிட்டு வெளியிட்டத்தற்கு நக்கீரன் பட்ட பாடு குமுதம் அறியாததா?ஆனால் ஜெயலலிதா போல் கருணாநிதியும்,திமுகவினரும் பிரச்னை செய்யமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.
ஆளுங்கட்சியின் அம்மாவின் ஆதரவு தனக்கு இருப்பதால் இந்த அசிங்கம் பிடித்த தைரியம் குமுதத்துக்கு வந்திருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து வாங்கும் ரிப்போர்டர் வாசகர்கள் இந்த செய்தியின் மூலம் இதுவரை வந்த செய்திகளும் வெறும் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் வருகிறது என்று எண்ணுவார்களே.அது தனது பத்திரிக்கையின் நடுநிலையை,நமபகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டதே என்பதை குமுதம் ரிப்போர்டர் உணர வேண்டும்.
இது போன்ற செய்தி வெளியாகி சில நாட்கள் வெளியான பின்னரும் கூட திமுக-வினரிடமோ,கருணாநிதி பக்கம் இருந்தோ ஒரு சலசலப்பை காணோம் என்பது ஆச்சரியம் மட்டுமில்லை அதிர்ச்சியும் கூட .
பொதுவானவர்கள் கூட கோபப்படும் இச்செய்திக்கு எதிர் வினை  இதுவரை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இல்லை.
இப்போதுதான் நடவடிக்கை தொடர்பாக கருணாநிதி ஆலோ சிக்கிறாராம்.
இன்னும் பொதுக்குழு,செயற்குழு கூட வேண்டுமோ?
ஸ்டாலின் தலைவராவதை எதிர்த்து பே ட்டி கொடுத்தார் என்பதற்காக குஷ்பு வீட்டை  செய்தி வெளியாகி சில மணி நேரத்தில் தாக்கிய தொண்டர்கள்{?} இவ்வளவு அசிங்கமான செய்தி வெளியான பின்னரும் கண்டு கொள்ளாததன் அர்த்தம் என்ன?
அதுதான் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடோ?
சொல்லப் போனால் கருணாநிதி,குஷ்பு,மற்றும் திமுக,திக.கட்சிகள் என இதற்குள் நான்கு அவமரியாதை வழக்குகள் இதற்குள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆசிரியர்,கட்டுரையாளர்,வெளியீட்டாளர் மீது வரிசையாகப் போடப் பட்டிருக்க வேண்டும்.ஆனால் இது எதுவும் இதுவரை நடக்காதது அக்கட்டுரையை அவர்கள் ரசிப்பது போல் தெரிகிறது.
குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பரபர்ப்பை விற்கும் இதழ்களுக்கு ஒரு வார்த்தை.
உங்கள் வியாபாரத்துக்காக கட்சித் தலைவர்களின் அசிங்கம் பிடித்த அந்தரங்கங்களை வெளியிட்டு "சரோஜாதேவி" வாரிசு பத்திரிக்கைகளாகாதீர்கள்.
உங்கள் பரபரப்பு மற்றும் கற்பனை செய்திகளால்  பல தடவைகள் அப்பாவிகள்
அவதிக்குள்ளாகுகிறார்கள்.
பெண்களின் வாழ்வே கேள்விக்குறியாகுகிறது.பொது வாழ்வில் இருப்பதால் பெண்களை அளவுக்கு அதிகமாக விமர்சிப்பது மற்றொரு பாலியல் பலாத்காரமே.
குஷ்புவை மணியம்மையாக்கிய குமுதம் ரிப்போர்ட்டர் இதில் கால்வாசியளவாவது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்க இயலுமா?அல்லது தைரியம் தான் இருக்கிறதா?
இதற்கு இரு காரணங்கள்.
1,வழக்கு மற்றும் தாக்குதல் பயம்.
2,இனப்பாசம்.
குமுதம் ரிப்போர்ட்டர் இந்த இரண்டிலும் இரணடாவதைதான் கையில் எடுத்துள்ளது.
 குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைக் காரர்களும்,அதிபர்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் ,குடும்ப பிரச்னைகளையும் கொஞ்சம் மனதில் கொண்டு எழுது கோலை பிடிக்க வேண்டும்.
அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் காதலில் விழுந்த்திருப்பார்கள்,ஏன் காதலனுடன் ஓடி டும் இருப்பார்கள்.அதை பற்றி மற்றவர்கள் வேறு பத்திரிகையில் வெளியிட்டு அதுவும் சுவரொட்டி தலைப்பு செய்தியாக வெளியிட்டால் ரசிப்பார்களா?
பொது வாழ்வில் வந்தவர்கள் பொது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
அவர்களின் அந்தரங்கங்களுக்குள்  புகுந்து உங்கள் கற்பனை ஆபாசக் குதிரைகளை ஓட்டாதீர்கள் .அது ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களுக்கும் அவப்பெயரை உருவாக்கி விடும்.
முன்பு செவ்வி தர பிடிக்காமல் சென்ற விஜயகாந்தை விரட்டி மறித்து கட்டாயப்படுத்தியது கூட சரியான பத்திரிகையியல் அல்ல.தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை ஏமாற்றி சென்றவிட்டதால் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்று உணர்ந்து அதற்கேற்ப செவ்வி கேட்க முடியாதவன் நல்ல பத்திரிகைக்காரன் அல்ல.
பத்திரிகை தர்மமும் அல்ல.
குமுதம் குழுமம் கருணாநிதி-குஷ்பு அட்டைபடக்கட்டுரையில் நடந்து கொண்ட விதம் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது.
இதற்காக சட்டப்படி மட்டும் அல்ல.பத்திரிக்கை கவுன்சிலும் ஒழுக்க விதிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆலாய் பறக்கும் ஊழல் 

இந்திய மக்களை மீண் டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ள மிகப்பெரும் பாது காப்புத்துறை ஊழல் விவகா ரம், இதர வரலாறுகாணாத ஊழல்களைப்போல அர சின் கழுத்தைச் சுற்றியுள் ளது. 
அதிலிருந்து தப்பிக்கும் நோக்கோடு  இத்தாலி நிறுவனத்துடனான ஹெலி காப்டர் பேரத்தையே நீக்கிட  நடவடிக் கைகளை மன்மோகன் சிங் அரசு துவக்கியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு இத்தாலி நிறுவனத்திடமி ருந்து உயர்ரக ஹெலிகாப் டர்கள் வாங்குவது தொடர் பான இந்த ஊழல் விவகாரத் தில் காங்கிரசின் ‘இளவர சர்’ ராகுல்காந்தியின் அரசி யல் செயலாளருக்கு நெருங் கிய தொடர்பு உண்டு என்று பாஜகவும், பாஜக தலைமை யிலான ஆட்சி நடைபெற்ற போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரி ஜேஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உண்டு என இந்த ஊழலில் சிக்கியுள்ள இந்திய விமா னப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியும் பரபரப்பான குற்றச்சாட்டுக் களை தெரிவித்துள்ள நிலையில், அவசர அவசர மாக பேரத்தை ரத்து செய் திட மத்திய அரசு வட்டா ரம் முயற்சி மேற்கொண் டுள்ளதாக செய்திகள் தெரி விக்கின்றன.

இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து இந் திய விமானப்படைக்கு 12 உயர்ரக ஹெலிகாப்டர்கள் வாங்கிட ரூ.3 ஆயிரத்து 600 கோடி அளவிற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
இந்த ஒப்பந்தத்தை, குறிப் பிட்ட இந்த நிறுவனத்து டன் மேற்கொள்வதற்காக ரூ.360 கோடி அளவிற்கு விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரி கள், இத்தாலிய-இந்திய ஆயுத இடைத்தரகர்கள், உயர்மட்ட அரசியல் செல் வாக்கு பெற்ற பிரமுகர்கள் உள்பட பலருக்கும் லஞ்ச மாக அளிக்கப்பட்டிருப் பது வெளிச்சத்திற்கு வந்துள் ளது. இது இந்திய அரசிய லில் புயலைக் கிளப்பத் துவங்கியுள்ள நிலையில், மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) விசார ணைக்கு மன்மோகன் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், வெள்ளியன்றே சிபிஐயிடம் பாதுகாப்புத்துறை அமைச் சகத்தின் சார்பில் முறைப் படி புகார் அளிக்கப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து சிபிஐ முதல் தகவல் அறிக் கை பதிவு செய்துள்ளது.

இதனிடையே, இந்த ஊழல் விவகாரத்தில் நேரடி யாக தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட் டுள்ள விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, பாஜக கூட்டணி ஆட்சியில் தேசிய பாது காப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா வுக்கு தொடர்பு உண்டு என வியாழனன்று கூறியிருந் தார்.

இந்நிலையில், இந்த விவ காரத்தில் காங்கிரசுக்கும் தொடர்பு உண்டு என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. காங் கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அரசியல் செயலாளரான கனிஸ்கா சிங்கிற்கு இந்த ஊழலில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டு மென சிபிஐக்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் களில் ஒருவரான கிரித் சோமய்யா கடிதம் எழுதி யுள்ளார்.

அதில் "அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனம் இந்தி யப் பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக இத்தாலியில் அந்நிறுவனத் தின் தலைவர்களான கியூ செப்பே ஓர்ஸி என்பவரும் புர்னோ ஸ்பாக்னோலினி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்தியாவில் பிரதான இடைத்தரகராக செயல்பட் டவர் கிறிஸ்டியன் மைக்கே லின் தந்தை மேக்ஸ் ரிச்சர்டு என்பவர் ஆவார்.
 இவர் சமீ பத்தில் இறந்துவிட்டார். 
இதைத்தொடர்ந்து கிறிஸ் டியன் மைக்கேல் பிரதான இடைத்தரகராக செயல்பட் டார். இந்த கிறிஸ்டியன் மைக்கேல்தான், இந்திய விமானப்படை இத்தாலி நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ள ஹெலிகாப் டர் பேரத்தில் முக்கிய ஏஜெண்டு ஆவார். இந்த ஒப்பந்தத்தை மேற்கண்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு கைமாற்றிக் கொடுத்ததற்காக கிறிஸ்டி யன் மைக்கேலுக்கு 30 மில் லியன் யூரோ டாலர்கள் (217 கோடி) ‘சன்மானமாக’ அந் நிறுவனம் வழங்கியுள்ளது.
 கிறிஸ்டியன் மைக்கேல் மூல மாக இந்நிறுவனம் இந்திய உயரதிகாரிகள் மற்றும் பிர முகர்களுக்கு பெருமளவில் லஞ்சம் கொடுத்துள்ளது.
 இந்த நபரும், இவரது தந்தை ரிச்சர்டும் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களு டன் மிக நெருக்கமான உறவை பேணி வருபவர்கள் என்று பாஜக பொதுச்செய லாளர் கிரித் சோமய்யா தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார். 
முக்கியமாக  காங்கிரசின் புதிய தறபோ தைய  பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு நெருக்க மான கனிஷ்கா சிங்கிற்கு மைக்கேல் மிக நெருக்கமா னவர் . இந்த பேரத் தில் மற்றொரு முக்கிய இடைத்தரகரான கிடோ ரால்ப் ஹாஸ்க் என் பவர், மேற்படி கனிஷ்கா சிங்கின் உறவினர்களால் நடத்தப்படும் ரியல் எஸ் டேட் நிறுவனத்தின் தலை வராக இருப்பவர்"  -என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.

எனவே, பாதுகாப்புத் துறையில் நடந்துள்ள இந்த ஊழலில் பாஜகவுக்கும், காங்கிரசின் உயர்மட்ட தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகத் துவங்கியுள்ளது.

இந்தப்பின்னணியில், 2010ம் ஆண்டு கையெழுத்தி டப்பட்ட இந்த ஹெலிகாப் டர் பேரத்தையே ரத்து செய்வது என மன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத் திற்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பாது காப்பு அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது. மேலும் இத்தாலி அரசிடம் இதுதொடர்பாக மேலும் விபரங்கள் அளிக் குமாறு பாதுகாப்பு அமைச் சகம் கேட்டுக்கொண் டுள்ளது.

இதனிடையே, இத்தாலி யில் கைது செய்யப்பட்ட மேற்கண்ட நிறுவனத்தின் தலைவர்கள் வெள்ளியன்று அந்நாட்டின் தலைநகர் ரோமில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசா ரணை துவங்கியுள்ளது. இந் தியாவுக்கு துனீசியாவில் பதிவு செய்யப்பட்ட கம் பெனிகள் பெயரில் பல ஒப் பந்தங்கள் மூலமாக கிட்டத் தட்ட 20 மில்லியன் யூரோ டாலர் அளவிற்கு லஞ்சப் பணத்தை இவர்கள் கை மாற்றியிருப்பது தெரியவந் துள்ளது. இதுதொடர்பான அடுத்த கட்ட விசாரணை களில் மேலும் மேலும் அதிர்ச்சிகரமான உண்மை கள் அம்பலமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்தாலி என்றாலே இந்தியாவுக்கு விள்ளங்கத்தைதான் தருகிறது.
இப்போதுதான் குவத்ரோசி விவகாரத்தை அமுக்கி வைத்துள்ளனர்.
அடுத்து இந்திய மானம் ஹெலிகாப்டரில் ஏறியுள்ளது.
இதில் முக்கிய விற்பனைகளில் அன்பளிப்பு -லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க இயலாது.அது நடைமுறைதான் என்று ஒரு இத்தாலிய அமைச்சர் திருவாசகம் சொல்லியுள்ளார்.
தனிப்பட்ட நபர்கள்,நிறுவனங்களில் அப்படி லஞ்சத்தை வழங்குவது வழக்கமாக இருக்கட்டும்..
ஒரு அரசு வாங்கும்  பொருட்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்,அலுவலர்களுக்கும் கொடுப்பது நாட்டையே சீரழித்துவிடும்.தரமற்ற படைத்தளவாடங்க்கள் என்ன வகையில் நாட்டைப் பாதுக்காக்க உதவும்?
--------------------------------------------------------------------------------------------------------------
டாலர் வீழ்ச்சி 
உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டா லர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமரிக்க டா லர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. அமரிக்க டா லர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டா லர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்ததையை ஆகிரமித்துவரும் அதே வேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பிவருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. 
அமரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டா லர் உலகத்திலிருந்து அகற்றப்படும் நிலை உருவாகிவருவதை நிறுத்தமுடியாது என்று அமரிக்க சந்தை ஆய்வாளர் டிக் போவி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஒரு ரில்லியன் டாலருக்கு மேல் அதிகரிக்கும் கடன் நாடான அமரிக்காவின் நாணயம் இன்னும் உலக நாணயமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பெரி எச்சன்கிரீன் கூறுகையில் டாலர் இன்று பாதுகாப்பான நாணயமாகமுதலீட்டாளர்கள் கருதவில்லை என்கிறார்.
பெரும்பாலான பொருளியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் டாலரின் ஆதிக்கம் முற்றாக வீழ்சியடைய ஆரம்பிக்கும்-
----------------------------------------------------------------------------------------------------------------
தீக்கற்கள் வீச்சு 
ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆறு நகரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரு ஒளிக் கீற்றாக எரிகல் காற்று மண்டலத்தில் சீறிச் செல்வதையும், அதன் வால் பகுதியில் பயங்கர வெளிச்சத்துடன் தீப்பிழம்பு வெடிப்பதையும் வீடியோ படங்கள் காட்டுகின்றன. யூரல் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் என்ற ஊரில் அலையலையாய் வந்த எரிகல் சிதறல் மழையால் ஏற்பட்ட அதிர்வலையில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, கார்களின் அலாரங்கள் அலர ஆரம்பித்தன.
என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடிவந்த மக்களின் உடல்களில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்லோரும் பரபரப்பாக தொலைபேசியில் ஒரே நேரத்தில் பேச முற்பட, அந்தப் பகுதியில் கைத்தொலைபேசி மின் அலைச் சேவை பளு தாளாமல் சற்று நேரத்துக்கு செயலிழந்து போனது.
இந்த எரிகல்லின் சில துண்டுகள் செர்பகுல் என்ற ஊர் அருகே இருக்கின்ற நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாகிஸ்தானில் சந்தைபகுதியில் எற்பட்ட குண்டு வெடிப்பில் சிதைந்த கட்டிடம்.
இதில் 82 பேர்கள் கொல்லப்பட்டனர்.குண்டு வெடிப்புக்கு காரணம் ?
 -

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்மகிட்ட இல்லாததை இப்படியாவது பார்த்து வைப்போம்!





"முத்தா"ய்ப்பு '


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?