அமைதியும் சமாதனமும்

சில இந்திய நடப்புகள் புரிய மாட்டேன் என்கிறது.இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க திட்டமிட்டு தாக்குதல் நடத்தி 9பேர்களுக்கும் மேல் படுகொலை செய்த அப்சல் குரூ  தூக்கை சிலர் கண்டித்துவருவதாக தெரிகிறது.
மற்றொரு நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வந்து மக்களாட்சியின் அடையாளமான கட்டிடத்தையே தகர்க்கவும்,அதை எதிர்த்து போராடியவர்களை கொல்லுவதுமான தீவிரவாதியை தூக்கில் மாட்டியது எதற்காக கண்டனத்துக்குள்ளாகுகிற்து?
கண்டிப்பவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்களா?அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சட்டத்தை மட்டுமல்ல மனிதாபிமானத்தையே மீறி குண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கட்டும் அவர்களை சிறையில் மட்டும் வைத்து பாதுகாத்து  பிரியாணி எல்லாம் போட்டு காப்பாற்றுங்கள் என்பதுதான் அவர்களின் வேண்டுகோளா?
 இசுலாமியர்கள் மட்டுமல்ல சில அரசியல் வியாதிகளும் சொல்லுகின்றனர்.
ஒன்றுமே தெரியாத சாலியில் நடந்து சென்ற குற்றத்துக்காக,கடைகளில் அடூத்த நாள் சாப்பாட்டுக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள்,தங்கள் குழந்தைகளுக்கு பரிசு வாங்க வந்தவர்கள் போன்ற அப்பாவி மக்கள் அதாவது இந்தியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக குண்டு வெடிப்பில் சாலையில் துண்டுகளாக சிதறி கிடந்தார்களே அந்த நிகழ்வுகளுக்கு பரிகாரம் வெண்டாமா?அந்த குண்டுகளுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் சொந்தங்கள் பலியாகியிருந்தால் அந்த இறப்புகளின் வேதனை புரிந்திருக்கும்.
எத ற்காக இந்த குண்டு வெடிப்புகள்? யாருக்குக்காக.?
மதத்தின் பெயரால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு நாட்டால் செய்யப்படும் தீவிரவாதம் தானே.
 கசாப்பை,அப்சலை தூக்கில் போட்டால் மதத்தின் பேரால் துக்கப்பட்டு கண்டிக்கும் கூட்டமும் இந்தியாவில் உள்ளது.
மதம் அமைதியையும் ,மனித நேயத்தையும் சொல்ல வில்லையா?
இந்தியாவில் மதம் பெயரால் அரசு யாரையாவது பழி வாங்க்கிக்கொண்டிருக்கிறதா.சொல்லப் போனால் வாக்குகளுக்காக சிறுபான்மையினர் என்ற பெயரில் மதங்களுக்கு சலுகைகளும்,பாதுகாப்பும்தான் அரசியல்வாதிகளால் தரப்படுகிறது. 
இந்தியாவில் இசுலாமிய மக்கள் அமைதியாக வாழ்வதை விட பாகிஸ்தானில் அல்லது மற்றைய இசுலாமிய நாடுகளில் வாழ்பவர்கள் நிலையை ஒப்பிட்டு பாருங்கள்.
தினமும் ஏதாவது ஒரு காரணத்தால் குண்டுகள் வெடிக்கின்றன.புனி தமிக்க வ ழிப்பாட்டுத் தளங்களிலேயே வழபாட்டு நேரத்திலேயே குண்டுகள் வெடிக்கின்றன.குறைந்தது 25 பேர்கள் பலியாகின்றனர்.அது போதாது என்று சன்னி,ஷியா ,அடிப்படைவாதிகள்,பழங்குடியினர் என்று பல மோதல்கள்.நிம்மதியான வாழ்வுக்கு இடமின்றி தினம் போராட்டம்.கல்வி வெண்டும் என்று படிக்க ஆசைப்பட்ட சிறுமி சுட்டு சிதைக்கப் படுகிறாள்.
அமைதியும் சமாதனமும்தாம் ஒவ்வொரு மதமும் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு தரும் என்று மத நம்பிக்கையற்ற நான் நினைக்கிறேன்.கண்டிப்பாக தர வேண்டும். அதற்காகத்தான் மதத்தையே மனிதன் உருவாக்கியிருக்கிறான்.ஆனால் அந்த மதத்தின் பெயரால் குற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள்.அவர்களுக்காக வருந்தாதீர்கள்.
இவர்களும் அயோத்தி பாபர் மசுதியை இடித்தவர்களும் ஒன்றுதான்.இரு கூட்டத்தையும் ஒரே தட்டில் வைக்கப்பாருங்கள்.வைத்துப்பாருங்கள்.இவர்கள் வைத்த குண்டு வெடிப்பில்  இந்துக்கள் மட்டும் சாகவில்லை,கிறிஸ்தவர் மட்டும் சாக வில்லை.இசுலாமியனும் இறந்திருக்கிறான்.மொத்தத்தில் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள்.இவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக் தேவை.
அதுதான் இதை தொடரவரும் அடுத்த வெறியனுக்கு ஒரு அச்சத்தை தரும் .
இப்போது இந்த தூக்கை கண்டிப்பவர்கள் முழுமனதுடன் கண்டிக்கவில்லை.அவர்கள் மனதில் வாக்குகள் அள்ளும் ஆசையும்,இன்றைய ஆளுங்கட்சியை சங்கடத்தில் வைத்து பார்க்கும் நாற்காலி ஆசையுமே உள்ளது.
விலங்குகள் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்-உணவுக்காகவும்தான் மனிதர்களை ,பிற உயிர்களை கொல்கிறது .ஆனால் இவர்கள் நோக்கம் ,..?
தூக்கிலிடப்பட்டது ஒரு மதவாதியை அல்ல.
தீவிரவாதியை.
மனித உயிர்களை துச்சமாக மதித்து கொல்லும் இவர்கள் மனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை.
இந்த பதிவு குறிப்பிட்ட மதத்தினர்கள் யாரையும் குற்றம் சாட்டும் நிலையில் பதிவிடப்படவில்லை.
எனது இசுலாமிய நண்பர் அப்சல் குருவுக்காக என்னிடம் வருந்தி கூறியதற்கு நான் அவருக்கு பதில் சொன்னதை பதிவாக்கியிருக்கிறேன். 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லாம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளின் பதிவுகள்தான்.
ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். 



















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?