விஸ்வருப தோல்வி யாருக்கு?



இதை விட வெற்றி யாருக்கு என்பதில்தான் விடயமே உள்ளது.
விஸ்வரூபம் படம் இந்த பத்து நாட்கள் கிட்டத்தட்ட இந்தியாவையே தலைப்புச்செய்தியாகி விட்டது.
அனால் இப்பொது அது ஔ முடிவக்கு வந்து விட்டது.இப்போது கூட பிராமணர் சங்கத்துக்காரர் தடை கேட்டு மனு கொடுத்துள்ளார்.ஆனால் அதற்கெல்லாம் நமது அரசு தடை கொடுக்கப்போவதில்லை.
இது படக்காட்சி அல்ல. ஆப்கன் செய்தி படம்.
விஸ்வரூபம் இந்த 10 நாட்களில் பெஸ்புக்கிலும் -டுவிட்டரிலும் இந்திய அளவில் 50%தமிழக அளவில் 90% கையாளப்பட்டுள்ளதாம்.
சரி.இப்போது இந்த பிரச்னையில் வென்றது இசுலாமியர்களா?
கமல்ஹாசனா?
என்று ஒரு விஸ்வரூப கேள்வி போதுவானர்கள் மனதில் அலை யொடிக்கொண்டிருக்கிறது.
நிச்சயமாக இந்த விடயத்தில் இசுலாமியர்களும்-,கமல் ஹாசனும் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்.
விஸ்வரூப வெற்றியை சந்தித்திருப்பது.நமது ஜெயலலிதா தான்.
காரணம் வழக்கமாக இசுலாமிய மக்களின் தலைவர்கள் சில படங்களுக்கு எதிர்ப்பு காட்டுவது மத அடிப்படியிலாக வழக்கமாகி விட்டது.ஆனால் அவர்களை கமலை பழி வாங்க இம்முறை ஜெயலலிதா அம்பாகப்பயன் படுத்தி வெற்றிக்கனியை பறித்துள்ளார்.
இசுலாமியர்களின் கோரிக்கை துப்பாக்கிப் படத்துக்கும் வந்தது.அதில் அம்மையாரை அவர்கள் நேரிலேயே பார்த்தனர்.ஆனால் தடை என்ற பேச்சே அம்மா பக்கமிருந்து எழவில்லை.
ஆனால் கோட நாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் விஸ்வரூபத்துக்கு தடை  கோரி சும்மானாச்சும் ஒரு மனு வை உள்துறை செயலர் ராஜகோபாலிடம் கொடுத்ததற்கு அடுத்த மணித்துளிகளில் தடை கொடநாட்டு ஆணையாக வந்து  பிறப்பிக்கப்பட்டு விட்டது.
கோபம் கொண்ட கமல் நீதிமன்றத்தை தட்ட படம் பார்த்து விட்டு ஒன்றுமே இல்லையே என்று நீதிபதி அரசின் தடையை நீக்கி விட்டார்.
அதற்கு இசுலாமியர்கள் கொதித்து எழா நிலையி ல் அரசுதான்  கொதித்து இரவு  11.38க்கு உயர்நீதி மன்ற நீதிபதி யை எழுப்பி மேல்முறையீடு செய்தது அதன் பேரில் அடுத்த நாள் 2.50
மணிக்கு தடை நீக்கத்துக்கு தடை அவர் கொடுக்கும் முன்பே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விஸ்வரூபம் படம் இடைப்பட்டக் காலத்தில் யார்ய்ம் வெளியிட்டு விடக்கூடாது என்று கடுமையாக பார்த்துக்கொள்ளப்பட்டது.
திரையரங்குகளில் காவல்துறை மட்டுமல்லாமல் கிராம் நிர்வாக அலுவலர்,வருவாய் அலுவலர் காத்துக்கொண்டு இருந்தனர்.அது மட்டுமின்றி அதிமுகவில் உள்ள இசுலாமியர்களை கார்களில் கூட்டி வந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரசிகர்களையும்,திரையரங்குகளையும் தாக்கச் செய்துள்ளனர்.
இது விஸ்வரூபத்தின் எதிர்ப்பு இசுலாமியர்களிடமிருந்து அல்ல ஜெயலலி தாவிடமிருந்துதான் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.
இடையில் கமலின் கண்ணீர் பெட்டி,வட மாநிலங்களில் விஸ்வருபம் திரையிடல் என்று செய்திகள் வர மத்திய அரசும்,தணிக்கை துறையும்,படம் பார்த்தவர்கள் மற்ற மாநில முஸ்லிம்கள் படத்தை பார்த்து விட்டு அமைதி காத்தது என்று பல எதிர்ப்புகள் வர அம்மையார் முதல் முதன்முதல் வாயிற் திறந்து அமைதி பேச்சை தொடங்கக்கூறினார்.
இடையில்  இதனால் கருணாநிதி- ஜெயா மோதல் தனிப்பாதையில் நடந்ததுவேறு கதை  .
அதற்கு காரணம்உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு புதன்று வரும்.ஆனால் அதுவும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக வந்து விடக்கூடும் என்ற பயம்.அதன் பின் உச்ச நீதிமன்றம் போனால் அது சரிவராது.அங்கு ஏற்கனவே தீர்ப்பு எப்படி வந்துள்ளது  என்றும் கணக்கிட்டே பிரச்னையை தான் முடித்து வைத்தது போல் இருக்கட்டும் என்றெ இந்த பேச்சு வார்த்தை நாடகம்.
அதுவும் நடந்தது .அம்மாவின் கண்ணசைவில் இசுலாமிய அமைப்புகளும்,அரசும் இறங்கி வந்து பேச விஸ்வரூப பிரச்னை வாமனாகி போனது.

தோல்வியாளர்-1
------------------------
இது படமே இல்லை.
இது முற்றிலும் இசுலாமிய எதிர்ப்பு மட்டுமே .முழுக்கவே படத்தை தடை செய்ய வே ண்டும் என்று வெகுண்டு எழுந்தவர்கள்  கடைசியில் இப்படம் உண்மை சம்பவங்களின் கோர்வை என்ற வார்த்தையை நீக்கினால் போதும் .

மேலும் தாக்குதலுக்கு முன் தொழுவதும்,அல்லாஹூ அக்பர் என்ற வார்த்தைகள் வரும் 7 கட்டடங்களில் ஒலி  நீக்கம் செய்தால் போதும் என்றது.இவர்களின் எதிர்ப்பு நாடகம் எவ்வளவு பலகீனமான கதைக்கருவில் இருந்தது. என்பதை சுட்டிக்காட்டி விட்டது.இசுலாமியர்கள் இதில் பகடைக்காய்கள்  என்பதை சுட்டிக்காட்டி விட்டது.
ஓகோவென்று இழந்தது பார் இப்புரட்சி என்று பார்த்தால் சில ஒலி  நீக்கத்தில் முடிந்து விட்டது.இது இசுலாமிய மக்களுக்கல்ல அவர்களை தவறான பாதை யில் கொண்டு செல்ல
முயன்ற இரட்டையிலையில் வென்ற மனித நேயர்களுக்கு தோல்விதான்.

தோல்வியாளர்-2
-----------------------
கமல்ஹாசன் .மற்ற மாநிலங்களில்,உலக நாடுகளில் ஒப்புக்கொள்ளப்பட்டு பார்க்கப்பட்டு வருக்கிற படத்தில் அங்கு பிரச்னைகளை கிளப்பாத கட்டடங்களில் ஒலி யை நீக்குவதற்கும்,உண்மை சம்பவங்களில் உரு வாக்கப்பட்ட படத்தில் அந்த வாசகங்களை நீக்கவும் ஒப்புக்கொண்டத்தற்கும் ,உண்மையான தடையாளி ஜெயலலிதாவுக்கு நன்றிகளை உரித்தாக்கியதற்கும்.இவரும் தோல்வியையே சந்தித்துள்ளார்.
இரட்டைக்கோபுர தாக்குதலின் முன்பும்,பின்பும்.ஒபாமா தலைக்கு விலை வைக்கும் போதும் ஒசாமா பின் லேடன்  ,மற்றைய தாலிபான்கள் பேச்சை அல்ஜீரா தலைக்காட்சி ஒளிபரப்பியது .அப்போது ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்றும் முடிவில் இன்ஷா அல்லா என்று அவர்கள் கூறினார்களே அல்லது கூறியதை ஒளிபரப்பினார்களே .
அப்போது அப்படி கூறாதெ என்று இங்குள்ள இசுலாமிய தலைவர்கள் எதிர்ப்பு காட்டவில்லையே.அது போக அமெரிக்க -ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரவாதம் உலகறிந்த உண்மை.அதில் படத்தில் காட்டப்பட்டதி விட அதிக கொடூரங்க்கள் நடந்துள்ளன.அவைகள் உண்மையின் சாட்சிகள்தானெ.இதில் கற்பனை எங்கே வந்தது,வர க்கூடும்?.அந்த வாசகத்தை நீக்குவதும்,ஒலிகளை நீக்குவதும் அதிலும் தமிழகத்தில் மட்டும் நீக்க பணிந்தது படைப்பாளிக்கு தோல்விதானே.
மேலும் படத்தை வெளியிட தயாரிப்பாளராக முயன்றதற்கு வெற்றி போல் கிடைத்தாலும்,ஒரு இயக்குனராக-படைப்பாளியாக  ஏறும் தோல்வி.

ஒரே வெற்றியாளர்.
--------------------------
9கோடிகளுக்கு தனது ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் படத்தை தர மறுத்து அதை விட இரு மடங்கு 18 கொடிகளுக்கு அடுத்த தொலைக்காட்சிக்கு விற்ற கமல்ஹாசனுக்கு
 பாடம் புகட்ட தடையை போட்டு அதை விட இருமடங்குஇதுவரை 35 கோடிகள்  இழப்பை
உண்டாக்கிய ஜெயலலிதா  தான் இப்போதுக்கு வெற்றியாளராக "விஸ்வரூபம்"  எடுத்துள்ளார்.
"பழி"க்கு விஸ்வரூபத்தை" பலி"யாக்கி விட்டார்.

"எல்லாமே அம்மாதான்-
மத்ததெல்லாம் சும்மாதான்"

என்று தெரியாமலா பெரியவர்[ஒ.பன்னீர்செல்வம் போன்றவர்]கள் சொல்லி வைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?