வரிசையாக மொத்தமாக வாங்க..!

"விஸ்வரூபம் "படத்துக்கு  தடை விதிக்கக் கோரி"  ஒரு  கிறிஸ்துவ அமைப்பினர் திடீர் என அதிரடி செய்தி வெளியிட்டுள்ளனர்.
 நாடு முழுவதும் இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் என்று கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு உடனடியாக விசாரணைக்கு பட்டியலிடப் படவில்லை.அடுத்த வாரம் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப் படும் என்று தெரிகிறது. படத்தில் நடித்துள்ள கமல்ஹாசனுக்கு எதிராக மனுதாரர் இந்த மனுவில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சார்பில் ஜெபகுமார் என்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 
தடை விதிக்க கோரும் காரணம் இது வரை சரிவர தெரியவில்லை.இசுலாம்,இந்து மதத்தினர் எல்லாம்  தடை கோரி விட்டார்கள்  .நாம் மட்டும் சும்மா இருந்தால் நாம மதத்துக்கு அசிங்கம் என்று நினைத்திருப்பார்.
இன்னும் யார்,யார் எல்லாம் இருக்கிறார்கள்.அனைவரும் வரிசையாக வந்து மொத்தமாக மனுவை தாக்கல் செய்து விட்டால் வரிசையாக எண்ணிட்டு விசாரிக்கநீதிமன்றத்துக்கு வசதியாக இருக்கும்.அதன் நேரமும் விஸ்வரூபம் படத்தின் மூலம் வீணடிக்கபபடுவது தவிர்க்கலாம்.
முடிந்தால் அம்மா மூலம் தடையும் வாங்கி விடலாம் .
புத்தம்,ஜைனம்,பார்சி ,மதத்துக்காரர்களும்  வரிசையாக வந்திடலாம் .
தடைக்கான காரணம் ?அதை பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.
ஜெயலலிதா மற்றவர்களை கைது செய்யும் முன் அதற்கான காரணங்களை சொல்லிக்கொண்டா இருக்கிறார்.முதலில் கைது.அடுத்து காரணம் தேடல் .அதுதான் இன்றைய நடை முறை.
நீங்களும் முதலில் தடையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் காரணத்தை பின்னர் தேடிக்கொள்ளலாம்.ஏதாவது படத்தில் சிக்காமலா போய் விடும் 
"புஷ் படத்தை துப்பாக்கியால் சுடும் காட்சி வருகிறது.அது கிறிஸ்தவர்கள் மனதை புண்ணாக்கி விட்டது.புஷ் ஒரு கிறிஸ்தவர்.அது தெரிந்தே கமல்ஹாசன் மதத்தை இழிவு படுத்தி விட்டார்."என்று சொல்லிக்கொள்ளலாம் .
மத்த மதத்துக்காரர்கள் "இந்து,இசுலாமியர்,கிறிஸ்தவ மதத்தை எல்லாம் கிண்டல்-இழிவு செய்து விட்டு எங்கள் மதத்தை எல்லாம் விட்டு விட்டார்.இதன் மூலம் எங்கள் மதத்தை கமல்ஹாசன் மதிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.அல்லது உள்ளங்கை புண்ணாகத் தெரிகிறது.இது எங்கள் மதத்தை இழிவு செய்யும் செயல் அதனால் விஸ்வரூபம் படத்தை ஒரு 7  1/2  நாட்கள் தடை செய்ய வெண்டும்."என்று நீதிமன்றத்திலும்,உள்துறை செயலரிடமும் மனு கொடுக்கலாம்.
பின்னர் அரசு பார்த்துக்கொள்ளும்.
ஆனால் இவர்கள் எல்லோருமே கமல்ஹாசனின் "விஸ்வரூபம்"படத்துக்கு விளம்பரத்தூதர்களாகத்தான் இருக்கிறார்கள்.இவர்களுக்கும் கமலுக்கும் இடையில் ஏதாவது ரகசிய ஒப்பந்தம் இருக்காலாமோ?
போகிற போக்கைப்பார்த்தால் அப்படி விபரீதமாக எண்ணத் தோன்றுகிறது.
"கமல்ஹாசனுக்கும் எனக்கும் பகை கிடையாது.கருணாநிதி இல்லாததையும்-இருக்கிறதையும் சொல்லி வருகிறார்."என்கிறார் முதல்வர் ஜெ .
கமல்ஹாசனோ இப்படி அவரை ஓட,ஓட விரட்டி தடை கொடுத்த "ஜெ,க்கு நன்றி .படத்தைப் பார்க்க எப்போவருவீர்கள்? நாள் குறியுங்கள் -கூறுங்கள் " என்கிறார்.
என்னமோ நடக்குது.மர்மமாய் இருக்குது என்றுதான் பாடத்தோன்றுகிறது .
90 கோடிகளுக்கு மேல் படத்தில் முடக்கி விட்டு."படம் ஓடினால் மன்னன்-ஓடாவிட்டால் நாடோடி "என்று எம்ஜிஆர் நிலையில் இருந்த கமல்ஹாசனை இசுலாமியர்கள் மூலம் படத்துக்கு ஏகத்துக்கும் தமிழத்தின் ரத்த அழுத்தமே உயருமளவு  பரபரப்பை எற்படுத்தி வெற்றிக்கனியை கமலின் மடியில் விழ வைத்திருக்கிறார் ஜெ.


இப்போது சொல்லுங்கள்  ஜெயலலிதா கமல்ஹாசனை பழி வாங்க நினைத்து ஆனால் அந்த பழி வாங்கும் நடவடிக்கை மூலம் அவரின் படத்துக்கு மிகப்பெரிய "திறப்பை" [அதாங்க ஒப்பனிங்] வரவேற்பை,எதிர்பார்ப்பை தந்த வர.அவருக்கு மீண்டும்,மீண்டும் கமல்ஹாசன் நனறி தெரிவிப்பதும்,படம் பார்க்க அழைப்பதும் தவறானதா?
நன் றி மறப்பது நன்றன்று.

இது தின மலர் செய்தி.

"பொதுவாகவே  கமல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆனால் இப்படத்திற்கு எழுந்த பிரச்னை, இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அனைத்து தரப்பினர் இடையே‌யும் ஆர்வத்தை தூண்டியது. அதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு இரு தினங்களுக்கு முன்பே ஏராளமானபேர் முன்பதிவு செய்து இருந்தனர். மேலும் டிக்கெட் வாங்க அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தினர். சில நகரங்களில் ரசிகர்களுக்காக நள்ளிரவு சிறப்பு காட்சியும், இன்னும் சில இடங்களில் காலை 6மணிக்கு சிறப்பு காட்சிகளும் காட்டப்பட்டது. தமிழகத்தில் சுமார் 600 தியேட்டர்களில் படம் ரிலீஸாகி உள்ளதாக கூறப்படுகிறது. 
அனைத்து தியேட்டர்களிலும் ரசிர்கள் கூட்டம் அலைமோதுகிறது."
 "விஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக"
- கமல் கூறியுள்ளார்.

                   இதுவரை கமல்ஹாசன் கட் -அவுட்டுக்கு ரசிகன் என்றைக்கு பாலாபிஷேகம் செய்தான்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
  •     வாடிகானில் உள்ள அரண்மனை அறை.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?