இதய தெய்வம் அம்மாவின் கட்சி அல்ல.

கடைசியில் நம்ம ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயராகத் தெரிந்துள்ளார்.

""கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை" என்று விஷால் கோபப்பட்டு இணையத்தில் எழுதி விட்டாராம்.
அது உண்மைதானே.

"ஆனால் நடிகர் சங்கம் ஒன்றும் செய்யாததை பார்த்தீரா.நானும்,சரத்குமாரும் கமல்ஹாசனிடம் சென்று ஆறுதல் கூறி வந்தது.கண்ணில் படவில்லையா?உன் மீது ஈன் நடவடிக்கை எடுக்கக் கூடாது " என்று பாய்ந்து குதறியுள்ளார்.

இந்த நடிகர் சங்கம் மீதான குற்ற சாட்டை கூறும் முதலாமானவரும் கடைசியானவரும் விஷால் அல்ல.பலரும் கூறியுள்ளார்கள்.

பிரச்னை முடிந்த அன்று "விஸ்வரூபம் பிரச்னையை முடித்து வைத்த முதல்வர் அம்மாவுக்கு நனறி!"

என்ற அறிக்கை ஒன்றை விட்டதி தவிற நடிகர் சங்கம் இந்த பிரச்னையில் எங்கே தலையை உள்ளெ விட்டது.?

ராதாரவி,சரத்குமார் மட்டுமா? கமலை பார்த்து துக்கம் விசாரித்து வந்தார்கள்.கணக்கற்றவ்ர்கள்.ஆந்திர,கர்நாடக,கேரளா,இந்தி நடிகர்கள் ,அரசியல்வாதிகள்,ரசிகர்கள் என்று ஆயிரக்கணக்கில் அவரை பார்த்து சென்றனர்.ஆனால் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர் .தமிழக அரசின் தடையை விமர்சித்தார்கள்.நீக்கக் கூறினர்.

ஆனால் அவர் உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம்.?
பிரச்னை முடிவில் நன்றி மட்டுமே அதுவும் அம்மா வுக்கு கூறி மட்டுமே விட்டுள்ளது.
வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மூச்சு விட்ட சப்தம் கூட வரவில்லை. அட ஆதரவாக அல்ல கமல் மதம் பற்றி எடுத்தது தவறுதான் என்று தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்கலாமே?
விஷால் மட்டுமா இணையத்தில் நடிகர் சங்கத்தை விமர்சித்தார்.எத்தனையோ நடிகர்கள் அப்படி பதிவு செய்துள்ளார்கள்.

ஏன் .ராதாரவிக்கு மருமகள் முறையை உடைய நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை கூட இணையத்தில் நடிகர் சங்கம் என்ன செய்கிறது? என்று கேள்வியை எழுப்பியிருந்தாரே .அவர் மீது என்ன நடவடிக்கையை இந்த நடிகர் சங்கம் எடுத்துள்ளது?
மொத்தத்தில் குற்றம் செய்தது நடிகர் சங்கம் மட்டும்தான் .அதை நடத்துபவர்கள் அதிமுக உறுப்பினர்கள் அம்மாவை மீறி செயல்படமுடியாத நிலை.அதுதான் அனைத்து நடிகர்களுக்கும்-பொதுமக்களுக்கும் தெரியுமே.பின் ஏன் இந்த நடிப்பு?

சேவை வரியை நீக்க,காவிரி தண்ணீரை திறக்க,ஈழத்தமிழர் பிரச்னை என்று பொதுப்பிரச்னைக்கெல்லாம் போராடி ,உண்ணா விரதம் இருந்த நடிகர் சங்கம் [இதில் பலவற்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.]தன் உறுப்பினர் பிரச்னையில் ஒன்றும் செய்யாமல் வாளாவிருந்து விட்டு பிரச்னை முடிந்த கட்ட கடைசியில் இந்த பிரச்னையின் ஆணிவேருக்கு நன்றி தெரிவித்தது  கொஞ்சம் அசிங்கமானதுதான்.
அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல்  இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்   நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின்  அதிமுக கட்சி அல்ல.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
  •  இவர்கள் கலாச்சார தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாம்.
-


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?