கனவுலகில் இருந்து

இலங்கைத்தமிழர் பிரச்னை இப்போது தமிழகத்தை பொறுத்தவரை பரபரப்பு நிலையிலானது.
இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவருவது தமிழர்கள் வாழும் நாடான இந்தியா அல்ல .அமெரிக்கா.
அமெரிக்கா கொண்டுவர மும்முரம் காட்டுவது உண்மையில் தமிழர்கள் நலன் சார்ந்தது அல்ல.அதில் அரசியல் கலந்துள்ளது.இலங்கை சீனா,ரஷ்யா சார்பில் இருப்பதும்-அமெரிக்கா சொல்லை அவ்வளவாக மதிக்காமல் நடந்து கொள்வதுமே இத்தீர்மானம் கொண்டுவருவத்தின்  பின்னணி காரணிகள் .
ஆனால் அது கொண்டுவருவதால் இந்த ஈழத்தமிழர் பிரச்னையில் அவர்களுக்கு உலக நாடுகள் மூலம் விடிவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் அதை கூட ஐ.நாவில்  இந்தியா ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்க மறுத்துவருவது  மிக அநியாயம்.
காங்கிரசு கட்சியின் கட்டாயம்தான் -அதன் விடுதலிப்புலிகள் மீதான கோபம்தான் இந்திய வெளியுறவு கொள்கையையே இலங்கை ராஜபக்சேக்கு ஆதராவாக்கியுள் ளது.
இந்திய தேச மக்களின் நலம் காக்கும் கொள்கை அல்ல.இந்தியாவின் வெளியுறவு கொள்கை முற்றிலும் சோனியா குடும்ப விருப்பு-வெறுப்பின் வெளிப்பாடுதான் அது.
அதை விட கொடுமை.அந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வைப்பதில் தமிழினத் தலைவர்கள் என்று சொல்லி வலம் வருபவர்கள் செயல்பாடுகல் ஒரு  ஒன்றுபட்ட  செயல்பாடில்லை .
நெடுமாறன்-சீமான் தனி வழி.
வைகோ தனி பாதை.

டெசோ என்று திமுக கூட்டணி தனி தடம்.
12ம் தேதி இந்தியாவை வற்புறுத்தி டெசோ கடையடைப்பு போராட்டத்தை தமிழத்தில் அறிவித்துள்ளது.
ஆனால் இதை வெற்றியாக்கி விடக்கூடாது என்பதில் இந்திய மத்திய அரசை விட,காங்கிரசை விட வைகோ,நெடுமாறன் ,தினமலர் கூட்டம் தான் முனைப்புடன் செயல்படு கிறது.
வைகோ இந்த முழு அடைப்பு தேவை இல்லை என்று அறிக்கையே வெளியிட்டுள்ளார்.
முழு அடைப்பு தேவை இல்லைதான்.ஆனால் தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் காங்கிரசு மத்திய அரசை கட்டாயப்படுத்த தமிழர் ஒற்றுமையை காட்ட -உலக அளவில் தமிழர் உணர்வை காட்ட இப்போதைக்கு வேறு வழி இருக்கவில்லை.இருப்பதாக தெரியவில்லை.
ஈழத்தமிழர் பிரச்னையில் ராஜபக்ஷேவை கண்டிப்பதை விட,இந்திய சோனியா அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதைவிட  இங்குள்ள தமிழினத் தலைவர்கள் கருணாநிதியை மட்டும் விமர்சித்துக்கொண்டும் அவரின் பழைய செயல்பாடுகளையே சுட்டிக்காட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.
அது மட்டுமே எந்த வகையில் இப்போதைய ஈழப்பிரச்னையை சரி செய்து விடும்.?
நடக்க வேண்டிய செயல்களை பார்த்து இப்போதைய நடைமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பதை வைகோ,நெடுமாறன்,சீமான் செய்வதாக தெரிய வில்லை.
கருணாநிதி முன்பு ஆட்சியில் பதுங்கி ஈழப்பிரச்னையில் தவறான செயல்களை செய்தாலும் தற்பொது அதை உணர்ந்து இப்போதைய ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டிய செயல்களை அவர்களின் மீள்வாழ்வுக்கு உதவும் வகையில் செயல்பாடுகளை டெசோ மூலம் செய்கிறார்.அவருக்கு பெயர் வந்து விடக்கூடாது என்பதுதான் இப்போது மூவரணியினருக்கு எண்ணம்.
ஈழப்பிரச்னை வைத்து இவர்கள் உணர்ச்சி அரசியல் மட்டுமே செய்துவருகிறார்கள்.உண்மையிலேயே ஈழத்தமிழர் பிரச்னை முடிந்தால் இவர்களின் அரசியல் வாழ்வும் முடிந்து விடும் என்பதே அதற்கு காரணாமாக இருக்கலாம்.
அதற்கு இந்த மூவரும் ஒத்துழைப்பதுதான் அல்லது வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் உண்மையில் ஈழத் தமிழர் பிரச்னையில் அவர்களின் சரியான தற்பொதைய செயல்பாடாக இருக்கும் .
அதை விடுத்து டேசொவின் செயல்பாடுகளை மட்டுமே   விமர்சித்துக்கொண்டிருப்பது அவர்களின் உண்மையான ஈழத்தமிழர் நலனை பாதுகாப்பதில் உள்ள நோக்கத்தையே சிதறடித்து விடும்.




வேலை நிறுத்தம் சரியோ-தவறோ.
அதுதான் இப்போது பக்சே ஆதரவு இந்திய அரசினை தமிழர்பக்கம் பார்க்க வைக்கும் ஒரு ஆயுதம்.
இன்றைய கட்டத்தில் கடைசி ஆயுதம் என்றுகூட வைக்கலாம் .
அதை கட்சி,கொள்கை வேறுபாடுகளை விட்டு,விட்டு தமிழர் என்ற ஒற்றுமையில் செய்ய வேண்டும் .
இது பிசு,பிசுத்தால் நம் தமிழர் ஒற்றுமை வேடிக்கையான பொருளாகி காங்கிரசு-சோனியா அரசு முன்னிலும் முனைப்பாக பக்சே ஆதரவு நிலை எடுக்க காரணமாகி விடும்.
இன்னமும் நெடுமாறன்,வைகோ,சீமான் போன்றோர் மாவீரன் பிரபாகரன் வருவார்.பக்சே ஒழிந்து விடுவான்.என்று கனவில் மிதந்து எதார்த்தநிலையை மறந்து தவறான நிலைகளை ஈழத்தமிழர் பிரச்னையில் திணிக்க வேண்டாம் .கனவுலகில் இருந்து இன்றைய நினைவுலகுக்கு வாருங்கள்.
இந்திய அரசுக்கு தமிழர் ஒற்றுமையை காட்டி நல்ல முடிவெடுக்க வைக்க செயல் படுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நுழைவுத் தேர்வுகளுக்கு இணையத்தளங்கள்.

Amrita Engineering Entrance (AEE)

http://amrita.edu/admissions/admissions.php
All India Engineering Entrance Exam (AIEEE)
http://aieee.nic.in/aieee2012/aieee/welcome.html
Birla Institute Technology and Science
Admission Test (BITSAT)
http://www.bitsadmission.com/
Bhartiya Vidyapeeth Engineering
Entrance Exam (BVPEEE)
http://www.bharatividyapeeth.edu
Consortium of Medical Engineering and Dental
Colleges of Karnataka (COMEDK UGET)
http://www.comedk.org/
Indian Institute of Technology Joint Entrance
Exam (IIT-JEE)
http://www.jee.iitd.ac.in/
IIST All India Admission Test (ISAT)
http://www.iist.ac.in/isat2011
Karunya University Engineering Entrance
(KEE)
http://www.karunya.edu/
Kalinga Institute of Industrial Technology
Engineering Entrance (KIITEE)
http://www.kiitee.ac.in/
Maharashtra Common Entrance Test (MHT CET)
http://www.dte.org.in/
SRM Engineering Entrance Exam (SRMEEE)
http://www.srmuniv.ac.in/
Uttar Pradesh Technical University State
Entrance Examination (UPTU SEE)
http://www.uptu.ac.in/
VIT Engineering Entrance Exam (VITEEE)
http://www.vit.ac.in/


நன்றி:தினமலர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?