கடவுளை நேரில் பார்த்தவர்.




"மலையுச்சியில் தனியாக இருந்தபோது, என் முன், கடவுள் தோன்றினார்,'' என, ஹாலிவுட் நடிகர் ஜிம் கேர்ரி, தெரிவித்துள்ளார்.
"த மாஸ்க்', "ட்ருமேன் ஷோ', "புரூஸ் ஆல்மைட்டி' போன்ற படங்களில் நடித்து, புகழ்பெற்றவர், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர், ஜிம் கேர்ரி.
இப்போது  51வயதாகும்  இவர், அமெரிக்காவில் உள்ள, மலை உச்சியில் இருந்தபோது, கடவுளை கண்டதாக, தெரிவித்துள்ளார்.
அது பற்றி  கூறியதாவது:-
"இயற்கையின் வினோதங்கள் பற்றி அறிந்துகொள்ள, அரிசோனா மாகாணத்தில் உள்ள, மலை உச்சிக்கு சென்றேன். லகோடா இன செவ்விந்தியர்கள், ஒரு கத்தியையும், ஏழு அடி நீளமுள்ள போர்வையையும் தந்து, என்னை தனியாக விட்டு சென்று விட்டனர்.அந்த பகுதியில், மலை சிங்கங்கள், விஷப் பாம்புகள், தேள்கள் அதிகம். என்னிடம், இரண்டு நாட்களுக்கு தேவையான, குடிநீர் மட்டும் இருந்தது.இருப்பினும், அந்த மலையுச்சியில் நின்று, மற்ற மலைகளை, ரசித்துக்கொண்டு இருந்தேன். என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு, பதில் சொல்லும் விதமாக, மலைகளின் மேல் விழும் நிழல்கள், அடிக்கடி, மாறிக்கொண்டிருந்தன.இரவில், சோர்டைந்த நான், போர்வையை விரித்து, படுத்துக்கொண்டேன்.அப்போது, விஷப் பாம்புகளை பற்றி, எனக்கு பயம் ஏற்பட்டது."கடவுளே, பயமாய் இருக்கிறது. எனக்கு துணையாக இரு' என, சத்தமாக கூவினேன்.அப்போது, எனக்கு முன்னால் இருந்த மலைத்தொடர், ஒரு மனிதனை போல், உருமாறியது. முதுகு பக்கமாக திரும்பி நின்ற, அந்த உருவத்தை பார்த்ததும், என் பயம் அகன்று விட்டது.கடவுளை, நேரில் கண்டது, எனக்கு மகிழ்ச்சி அளித்தது."
-இவ்வாறு ஜிம் கேர்ரி கூறியுள்ளார்.
சரி கடவுள் எப்படியிருந்தார்?ஏசு ,முருகன்,சிவன், அல்லா இவர்களில் எந்த மாதிரி கடவுள் தோன்றினார்?
இப்படி எல்லாம் கேட்பார்கள் என்றுதான் முன்னெச்சரிக்கையாக முதுகு பக்கம் திரும்பி நின்றதாக கெர்ரி சொல்லி வைத்து விட்டார்.
ஜிம்கேர்ரிக்கு குடிநீர் வைப்பதற்கு பதில் எந்த தண்ணீரையோ வைத்து விட்டார்கள் செவ்விந்தியர்கள்.அல்லது பயத்தின் உச் சியில்  அவருக்கு காட்சிப்பிழை ஏ ற்பட்டிக்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
சில 'தலை'வர்கள் இறுதி புகைப்படம்.

இப்போது சாவெஸ் மரணம் உலக அளவில் பெரும் தாக்கத்தையும்.வெனிசுலா மக்களிடம் பெரும் துயரையும்-இழப்பையும் உருவாக்கியுள்ளது.அது போன்ற மக்களிடம் புகழ் பெற்ற சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர்களின் இறுதி புகைப்படங்கள்.
                                          1924 (உண்மையான ) புரட்சித்தலைவர் வி.இ.லெனின்
                                          1953 இரும்பு மனிதர் ஸ்டாலின் 
                                         1976 சீன புரட்சித தலைவர்  மாவோ 
                                            1994 வட கொரிய தலைவர் கிம் 
                                         2011 வடகொரிய தலைவர் கிம் ஜாங் 2
                                          1986 பிலிப்பைன்ஸ் மார்கோஸ் 
                                          2013  வெனிசுலா சாவெஸ் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?