நாம் மட்டும் தனியே இல்லை



பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய அமெரிக்க   விண்வெளி ஆய்வு மையம் நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிகிற து.
கெப்லர்- 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தனர்.
அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து தொடர்ந்து நடந்த  ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டது.
 அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது.
அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.
சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்த இரண்டு கோள்களும் தலா 1.41 மற்றும் 1.61 சுற்றளவை கொண்டுள்ளன.
 இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும்.
 இந்த கோள்கள்  நிலப்பரப்பு அதாவது பாறை போன்ற அமைப்பை கொண்டதா அல்லது வெறும் நீர் அமைப்பை மட்டும் கொண்டதா என்பது குறித்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
  இந்த கோள்கள் உறுதியாக  மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாகத தான்  இருக்கும் என  அவர்கள் தெரிவித்துள்ளனர்  .
இந்த இரண்டும் ஏமாற்றி விட்டாலும் இந்த லட்சக் கணக்கான கோள்கள் வலம் வரும் பால் வீதியிலும்,அதை விட்டால் பி ரபஞ்சத்திலும்  நிச்சயம் உயிர் கள் வாழும் கோள்கள் இருப்பது என்னவோ நிச்சயம்தான்.
பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியே இல்லை. எங்கோ மனிதன் அல்லது அதற்கொப்பான உயிரினங்கள் வாழுந்துதான் வருகிறது.அது வெறும் பரிணாம வளர்ச்சியில் மனிதனை விட முன்னேறியதோ அல்லது மனிதனாக்கிக் கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கும் உயிராக கூட இருக்கலாம்.
நன்றி:அமீம் முகமது.[முகனூல்]
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஸ்டன் மாரத்தான் "விஸ்வரூபம்"
 -----------------------------------------------------
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த உலகப்புகழ் மாரத்தான் போட்டியில்  இரண்டு குண்டுகள் வெடித்ததில் 'மூன்று பேர் பலியாயினர்.
இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப்பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் பின்னர் அமெரிக்காவில் நடந்த  குண்டு வெடிப்பு இது .
வழக்கம் போல் அப்பாவிகள்தான் உயிரை பறி கொடுத்தனர்.
குண்டு வெடிப்பு அன்று.
இதில்  170 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அமெரிக்க  எப்.பி.ஐ.யினர்  தீவிரமாக தேடி வந்தனர்.
 குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
முதல் படத்தில் உள்ளவன் இறந்து விட்டான்.'Dzhokhar'
மா ராத்தான் போட்டி நடக்கும் பாதையில், குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தப்பியவன் 'Dzhokhar Tsarnaev'
இவர்கள் நீண்ட முடியுடன் தொப்பி அணிந்துள்ளனர். இந்த நபர்களும் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் .
உடன் பிறப்புகள் என்றும் தெரிய வருகிறது.இருவரின் பெயரையும் தமிழில் தப்பு தப்பாக எழுதுவதில் இருந்து தப்பிக்க ஆங்கிலத்திலேயே வைத்து விட்டேன்.
இவர்களின் பெற்றொர்கள் இருவரும் தீவிரவாதிகள் என்று தெரிய வந்ததும் அதிர்ச்சியில் உள்ளனராம்.இருவரும் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து, 10 கி.மீ.,தூரத்தில் உள்ளது வாட்டர்டவுன் பகுதி.
இங்குள்ள மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையத்தில் நேற்று இரவு போலீசாருக்கும், பாஸ்டன் நகரில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.
அந்த வழியாக சென்ற காரை மறித்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் போலீசார் துரத்தி சென்றனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
சம்பவத்தன்று கண்காணிப்பு காமிராவில் இருவரும்.
மற்றொருவன் தப்பி சென்று விட்டான்.

அவர்கள் தப்பிய கார் டிரைவர் காயமின்றி தப்பினார்.
தப்பி சென்றவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவனையும் எங்காவது சாலை ஓரத்தில் போட்டுவிடுவார்கள்.

அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கர்களைப் போன்று அவன்தான் குண்டு வைத்தான் என்று உறுதியாகத் தெரிந்தால் அப்போதே போட்டுத்தள்ளி விடவேண்டும்.குற்றவாளிஅயை விசாரிக்க 10 ஆண்டுகள் தண்ட னையை ஆய்வு செய்ய 10 ஆண்டுகள் என்று குண்டு வெடிப்பு கோபத்தை ஆறவைத்து பின்னர் நள்ளிரவில் ஒருவருக்கும்தேரியாமல் தூக்கிலிடுவது ஆட்சியாளர்களுக்கு அசிங்கம்.நமது இந்திய சட்டம்-ஒழங்கு நடமுறைக்கும் அவல ம்.

"விஸ்வரூபம்" பட விறு,விறு ப்பில் சில துப்பாக்கி சண்டை படங்கள்:





























கு ற்றவாளி இறந்து கிடக்கிறான்.



அமைதி உண்டாகட்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?