" மருந்துகள் உபாதை தரக் கூடாது..., "


“கிளிவெக்” மருந்து தயாரிப்பு காப்புரிமை பற்றிய   வழக்கில் உச்ச நீதி மன்றம்   சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி யுள்ளது.
 மருத்துவ உலகில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகை ஆராய்ச் சிகள் மக்களின் நல்வாழ்வுக்காகவும், நோய்களிலிருந்து பாதுகாப்பை பெறு வதற்காகவும்தான் இருக்க வேண்டும் என்பது உலக மக்களின் விருப்பம்..
அவ்வகையில் சில உயிர்க் கொல்லி நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிற்கு நோய் தடுப்பு மருந்துகளே தற்சமயம் உள்ளன. முற்றிலுமாக குணப்படுத்து வதற்கான மருந்துகள் கண்டுபிடிக் கப்பட வில்லை.

இந்தப் பின்னணியில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையும், அதனால் இந்த மக்கள் மட்டுமல்லா மல் பல்வேறு நாடுகளுக்கும் அது எந்த வகையில் பெரும் நிவாரணம் அளிக்கப் போகின்றது என்பதை நாம் போகப் போக பார்க்க இயலும்.

ஆனாலும் இந்த தீர்ப்பினால், தங்களின் ‘சேவை’  தடுக்கப் பட்டுள்ளதாக கொள்ளை லாபம் அடித்த "நோவர்டிஸ் "நிறுவனத்தின் நிர் வாக இயக்குநர் ரஞ்சித் சஹானி நீலிக் கண்ணீர் வடித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காப்புரிமை சட்டத்தை தீர்ப்புகளின் மூலம் கட் டுப்படுத்துவது நியாயமாக இருக்காது என்கிறார். மேலும், விலை பிரச்ச னையை சமாளிக்க, இரு வகை விலை கொள்கை, அரசு மானியங்கள், உயிர்காக்கும் மருந்துகளை அரசுகளே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்குவது, அரசு மருத்துவமனைகள் மூலம் மருந்துகளை நோயாளிகளுக்கு கிடைக்கச் செய்வது என பல திட்டங் களின் வழியாக மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்யலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

இவரின் இக்கருத்துக்களை பார்த் தவுடன் பலருக்கும் கூட ‘ஆஹா என்ன நியாயமான கருத்து’ என நினைக்கத் தோன்றும். ஆனால் அதுவா உண்மை ?
ஒரு மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய மருந்தை 6000 - 8000 ரூபாய்க்கு வாங்குவது எவ்வளவு பெரிய நிவாரணம் என்பதை யோசிப் போம்.
ஆனால், தங்கள் கொள்ளை லாபத்தில் கொஞ்சம்கூட குறை யாமல், அரசே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?

மேலும், மருந்து நிறுவனங்கள் மருந்து விற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டுவதில்லை என்று பொய் மூட்டையை திறந்து விட்டுள்ளார். மருந்து நிறுவனங்களின் லாப வேட் டையை பற்றி நாம் பல்வேறு கட்டங் களில் செய்திகள், கட்டுரைகள் மூலம் அறிந்து வந்துள்ளோம். அதிலும் குறிப் பாக பன்னாட்டு நிறுவனங்கள் மூன் றாம் உலக நாடுகளை குறிப்பாக இந்தி யாவை, எப்படி தன் வேட்டை காடாக மாற்றி, சுரண்டுகிறது என்பது தெரிய வரும்.
 உண்மை இப்படி இருக்க இவர்களின் லாபத்தை ஒரு பைசா கூட இழக்காமல், இந்திய அரசு இவர் களின் மருந்தை 1 லட்சத்திற்கு வாங்கி மானிய விலையில் மருத்துவ மனைகள் மூலம் கொடுக்க வேண்டு மாம் !
என்ன கொடுமை இது .
விஷயம் என்னவென்றால், இப்படிப் பட்ட லாபவெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்து வருவது மத்திய மன்மோகன் அரசு என்பது அனைவருக்கும் தெரியும்.

காப்புரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த போது, மக்கள் மன்றத் திலும், நாடாளுமன்றத்திலும் (இரு அவைகளிலும்) அக்கறையோடு எதிர்ப்பு தெரிவித்து உரிய மாற்றங் களை ஓரளவுக்கு செய்ய வைத்தது இடதுசாரிகள் மட்டும் தான் என்பதை நாடறியும். அதன் பயன்கள் இன்று நமக்கு கிடைத்துள்ளது என்றால் அவர்களின் பங்கும் முக்கியம். தன்னுடைய வாதத்தில், மேலும் ஒரு பிரச்சனையை முன் வைக்கிறார் ரஞ்சித் சஹானி. இந்தியாவில் மத்திய தர வர்க்கம் காப்பீட்டு உதவிகளை பயன்படுத்திக் கொள்வதால், காப்பீட் டுத் துறையை தாராளமயமாக்கினால், அதாவது நேரடி அந்நிய முதலீட்டை அதிகமாக்குவது, காப்பீட்டுத் துறை சீர்திருத்தங்களை உறுதியாக மேற் கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், தங்கள் மருந்தை மத்திய தர வர்க்கமாவது வாங்கலாமே என்கிறார்.

லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு, மக்களை சந்தையாக கரு தும் இவர்களின் லாப வெறியை, வேட்கையை, இது போன்ற தீர்ப்புகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தும்.
இருந்த போதிலும், நமது நடவடிக்கைகள் தொடர வேண்டும். நோவர்டிஸ் நிறுவ னத்திற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு ஒரு புதிய வெளிச்சத்தை நமக்கு அளிக்கும்.
மருத்துவ ஆராய்ச்சி எனும் பெயரில் இந்தியாவில் பல்வேறு சுர ண்டல்கள் நடைபெற்று வருகின்றன.
அப்படி இருக்கையில், மக்கள் நலன் பற்றி  கவலையில்லாமல் லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயல்படும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் லாப வேட்டைக்கு  மத்திய அரசு இனியும் இடம் கொடாமல் மக்கள் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வெண்டும்.அதற்கு இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி செய்யும்.

-- என். சிவகுரு

நன்றி;தீக்கதிர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?