ரெயில் பயணங்களில்

ரெயில்வே இலாகாவில் பன்சால் உறவினர்கள் செய்த மெகா ஊழல்கள் வெளியான விதம் அதிர்ச்சி தருவதாக  உள்ளது.நல்ல விறு விருப்பான கதையாக உள்ளது.
மக்களுக்கு மத்தியில் ஆளும்  காங்கிரஸ் ஆட்சி மீது  அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்துள்ள இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் ஒரு ரெயில்வே போலீஸ்காரர்.அவர் இவ்வளவு பெரிய விவகாரமாக மாறும் என்று நினைக்காமல் தனது பணியை செய்துள்ளார்.

அந்த ரெயில்வே போலீஸ்டெல்லியில் உள்ள ரெயில்வே ஐ.ஜி.யின் கீழ் வேலை பார்த்து வருபவர் .
 ரெயில்வே ஐ.ஜி.யும், ரெயில்வே வாரிய அதிகாரி மகேஷ்குமாரும் நீண்ட நாள் நண்பர்கள். அந்த பழக்கத்தின் அடிப்படையில் மகேஷ்குமார் லஞ்ச பணம் பரிமாற்றத்துக்கு ரெயில்வே ஐ.ஜி. உதவியை நாடினார்.
 ரூ.90 லட்சத்தை நேரடியாக கொண்டு போய் கொடுத்தால், சிக்கலாகி விடும் என்று நினைத்த அவர் பணத்தை ஒப்படைக்கும் பொறுப்பை ரெயில்வே ஐ.ஜி.யிடம் கொடுத்தார்.

அந்த ஐ.ஜி. கொஞ்சமும் பொறுப்பின்றி தன் கீழ் உள்ள ஒரு போலீஸ்காரரை அழைத்து "மகேஷ்குமார் ஒரு சூட்கேஸ் தருவார். அதை வாங்கி கொண்டு போய் விஜய் சிங்லாவிடம் கொடுத்து விட்டுவா' என்று உத்தரவிட்டார்.
அதன்படி மகேஷ்குமாரிடம் சென்று சூட்கேசை வாங்கிய அந்த போலீஸ்காரர் சும்மாயிருக்காமல் அதை திறந்து பார்த்தார். அதில்  கத்தை, கத்தையாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியும்-பயமும்  அடைந்த அவர் உடனே தன் நண்பரிடம் சொல்லி வைக்க அவர்  சி.பி.ஐ.க்கு தகவல் கொடுத்து விட்டார்.

அதன் பிறகே சி.பி.ஐ. அதிகாரிகள் பொறி வைத்து விஜய் சிங்லாவை பிடித்தனர். அந்த போலீஸ்காரர் மட்டும் கண்டு கொள்ளாமல்  இருந்திருந்தால் இவ்வளவு பெரிய மோசடி வெளியில் தெரியாமலேயே போய் இருக்கும்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட பன்சால் நிதி (ராஜாங்கம்) பாராளுமன்ற விவகாரம், நீர்வளத்துறை ஆகிய இலாகாக்களில் மந்திரியாக இருந்துள்ளார்.
திரினாமுல் காங்கிரசு ரெயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதால் 2012 அக்டோபர் மாதம் 28-ந்தேதி அவர் ரெயில்வே மந்திரி பொறுப்பை ஏற்றார்.
 பதவி ஈற்றது முதல் அதை  பயன்படுத்தி அவரது உறவினர்கள் ரெயில்வே அமைச்சகத்தையே சூறையாடி சொத்துக்கள் குவித்து விட்டனர் .

குறிப்பாக பன்சால் உறவினர்களில் விஜய்சிங்லா என்பவர்தான் மிகப்பெரியமுழு நேர  ஊழல் முகவராக செயல்பட்டுள்ளார்.
ரெயில்வே அமைச்சகத்தில் பந்தாவாக உலா வந்த அவர் அந்த அமைச்சக அலுவலக தொலை பேசிகளையே  தனது லஞ்ச பேரம் பற்றி பேசுவதற்கு பயன்படுத்தி வந்து ள்ளார்.
 பன்சால் ரெயில்வே அமைச்சராகி  6 மாதம்தான்ஆகிறது . இந்த 6 மாதத்தில் விஜய்சிங்லா ஏராளமான பதவிகளை பேரம் பேசிபல கோடிகளுக்கு  விற்பனை செய்துள்ளார். இதில்  8 மிக உயர்வான  பதவிகளை அவர் பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.மற்றவை லட்சக்கணக்கில்தான்.

இதற்கு ரெயில்வே அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள் பலர் உடந்தையாக இருந்துள் ளனர். இந்த தகவல்களை விஜய் சிங்லாவே ஒத்துக்கொண்டுள்ளார்.பன்சால் இவருக்கு மாமா ஆவார்.

ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் , நிலக்கரி ஊழல் தொடர்பானசி.பி.ஐ., விசாரணை அறிக்கையை திருத்திய புகழ் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் ஆகிய இருவரும்  பதவியை விட்டு விலக மறுத்துவந்தாலும் மக்கள் அளவில் அசிங்கப்பட்டு போன மன்மோகன்,சோனியா இருவரின்  வலுக்கட்டாயத்தின் பேரில்தான்  பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

"பன்சாலையும், அஸ்வனி குமாரையும் நீக்கினால், பார்லிமென்ட் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்கிறோம்' என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது.
இறுதியில், ஒரு வழியாக மத்திய அரசு, இருவரையும் நீக்கும் முடிவுக்கு வந்ததற்கு, சி.பி.ஐ.,  நடவடிக்கைகளே காரணம்.
ரயில்வே வாரிய உறுப்பினராக இருக்கும், மகேஷ் குமார் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா என்பவருக்கு, 90 லட்சம் ரூபாய் கொடுத்த போது, சி.பி.ஐ.,யிடம் சிக்கிக் கொண்டார்.
லஞ்ச பேரம், பன்சால் வீட்டில் வைத்து தான் நடந்துள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டதால், பன்சாலுக்கும் தொடர்பு இருக்கும் என்பது, சி.பி.ஐ.,யின் வாதம்.
அமைச்சர் பன்சாலின் தனிச் செயலராக இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகுல் பண்டாரியிடம், சி.பி.ஐ., நடத்திய விசாரணைக்கு பின், பன்சாலின் பிற ஊழல் விவகாரங்களும் வெளி வந்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணி கட்சிகள் வசம் இருந்த, ரயில்வே துறையை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி பெற்ற, காங்கிரஸ், சில மாதங்களுக்கு முன் தான் பன்சாலிடம் ஒப்படைத்தது.
அதற்குள் அவரும் அவரின் குடும்பத்தினரும், ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன், நிதித் துறை இணையமைச்சராக, பன்சால் இருந்த போது, பொதுத்துறை வங்கி ஒன்றிலிருந்து பல கோடி ரூபாயை, பன்சாலின் குடும்ப உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிட  பன்சால் உத்தரவிட்டு ஊழல் செய்துள்ளதும் வெ ளியாகியுள்ளது.
விஜய் சிங்லா விவகாரம் மற்றும் பொதுத்துறை வங்கி கடன் விவகாரம் குறித்தும்  சி.பி.ஐ., விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

காங்கிரசு  கூட்டணி அரசு, 2வது முறையாக, 2009 மே மாதம் ஆட்சிக்கு வந்தது.
அது முதல்  ரயில்வே துறையில் மட்டும் நான்கு ஆண்டுகளில், நான்கு அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

முதலாவதாக, 2009 மே, 26ல் ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். 2011 மே மாதம், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்., ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, முதல்வராக பதவியேற்ற அவர், ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மம்தாவுக்கு பதிலாக, அவரது திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, ரயில்வே அமைச்சரானார். 2012ல் இவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. கட்டணத்தை குறைக்க அவர் மறுத்ததால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மூன்றாவதாகவும்  மம்தா கட்சியை சேர்ந்த முகுல்ராய் புதிய ரயில்வே அமைச்சரானார். 2012 செப்டம்பரில்  மத்திய அமைச்சரவையில் இருந்துதிரிணாமுல் காங்கிரசு விலகியது. இதனால், முகுல்ராய் ராஜினாமா செய்தார்.
 இதன்பின் காங்., கட்சியைச் சேர்ந்த பவன்குமார் பன்சால் 2012 அக்., 28ல், ரயில்வே அமைச்சரானார்.
பதவிக்கு வந்த 6 மாதத்திலேயே இவருக்காக  இவரது மருமகன் ரயில்வே துறையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இப்போது  பன்சால் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து வில க்கப்பட்டார்.
இனி சிபிஐ நிலக்கரி சுரங்க முறைகேடுகள் தொடர்பான ஆவணக்களை நமது பிரதமர்-காங்கிரசுக்கு ஆதரவாக திருத்திய சட்ட அமைச்சர் அஸ் வினி குமார் மீதும்,ரெயில்வே பதவிகளை ஏலம் விட்டு கோடிகளை குவித்த பன்சால் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளவேண்டியதுதான் பாக்கி.ஆனால் தனது கட்சிக்காரர்களை கூட்டணி கட்சிகளை பலி கொடுத்தாவது பாதுகாக்கும் காங்கிரசு இதில் என்ன செய்யும்?
பழி யை மாற்றி விட கூட்டணியில் இப்போது தி.மு.க போன்ற ஆட்கள் இல்லாதது வாய்ப்பில்லாமல் செய்து விட்டதே.

 


                  




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?