மென்[நச்சு]பானங்கள்



அந்நிய நாட்டு மென்பானங்கள் நமது பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரித்து  விற்கப்படுகின்றன.
அதனால் அது தயாரிப்பிலேயே நமது நலனை கெடுக்கும் ரசாயனங்கள் சுவைமற்றும் சிறு மனமறியா போதையை கணக்கிட்டு சேர்க்கப்படுகின்றன.
அவர்கள் மட்டுமல்ல நமது உள்ளூர் விற்பனையாளர்களும் தங்கள் லாபத்தை மட்டுமே கணக்கிட்டு அந்த கோலா வகைகளை அது எந்த தரத்தில் இருந்தாலும் விற்று வருகின்றனர்.
இந்த லாப வேட்டையில் நம் மக்கள் குறிப்பாக இளம் வயதினர் நாகரிகம் என்ற பெயரில் இந்த சுவை பானங்கள்  என்ற நச்சு பானங்களை அருந்துகிறார்கள்.அவர்களை அதை வாங்கிக்குடிக்க பணத்துக்காக அலையும்  நடிகர்களும்,கிரிக்கெட்  தொழில் செய்பவர்களும் நடித்து வாங்கி கெட்டுப்போக வைக்கிறார்கள்.
அந்த மென்பானங்கள் கோக்க கோலா ,பெப்சி மற்றும் அதன் பல்வெறு தயாரிப்புகளும் தயாரிப்பில் மட்டுமல்ல விற்பதிலும் கெட்டுப்போன விடயங்களே உள்ளன .அது பற்றி வீடியோ சுப்பிரமணியன் அனுபவங்கள் .
"திருப்பூர் வீரபாண்டி பிரிவு டாஸ்மாக் கடை அருகே ஒரு கடைக்காரர் காலாவதியான நிறைய குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் தகவல் எனக்குக் கிடைத்தது. அங்கே சென்று சில" 7-up" பாட்டில்க ளை வாங்கிப் பார்த்தபோது அதில் புழு, பூச்சிகள், வண்டுகள் எல்லாம் மிதந்தன.  
க டைக்காரரிடம் ‘இந்த மாதிரி பொருட்களை விற்கக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா’ என்று கேட்டதற்கு, ‘உங்களுக்கு இஷ்டம்ன்னா வாங்கிக்குடிங்க. இல்லேன்னா விட்டுவிட்டு போய்கிட்டே இருங்க. என் வியாபாரத்தை ஏன் கெடுக்கறீங்க?’ என்று எந்த பொறுப்பும் இன்றி பேசினார்.
நான் விடவில்லை. உடனே அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்குப் போன் செய்தேன். அவர்கள் ‘இந்த மாதிரி கேஸுக்கெல்லாம் எதுக்கு சார் கூப்படறீங்க?’ அதுக்குத்தான் கார்ப்பரேஷன் அதிகாரிகள் இருக்காங்க. அவங்களை கூப்பிட் டுக்குங்க என்றனர். நான் இந்த விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷன்களிலேயே நடவடிக்கை எடுக்கலாம்ன்னு சட்டம் சொல்லுதுன்னு சட்டப்பிரிவையும் சொன்னேன். பிறகுதான் கொஞ்சம் வெளிறிப்போய், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார்கள். வீடியோ சுப்பிரமணியம் என்றதும் பதறிப்போய் ஓடிவந்தார்கள்.
அழுக்கு, கரப்பான் பூச்சி, வண்டுகள் கலந்த கூல்டிரிங் பாட்டில் சிலவற்றைக் கைப்பற்றினார்கள். அந்தக் கடைக்காரரின் மீது வழக்கு எழுதிக்கொண்டு சென்றார்கள். அதையெல்லாம் நான் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டேன். அதன் பிறகு அதைப்பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை. ஸ்டேஷனில் சென்று விவரம் கேட்டபோது, ‘அந்தக் கடைக்காரர் மீது வழக்கு எழுதி ஸ்டேஷன் பெயிலிலேயே விட்டு விட்டோம். நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்தால் சென்று அபராதம் கட்டும்படி சொல்லியனுப்பி விட்டோம்’ என்றார்கள். நான் விடவில்லை.
குளிர்பானத்தில் விஷத்தன்மை கலந்திருப்பது, அதை தெரிந்தே விற்பது கொலைக்குற்றத்தை தெரிந்தே செய்வதற்கு ஒப்பாகும். அந்த குளிர் பானத்தை உடனடியாக பரிசோதனைக் கூடத் திற்கு அனுப்பினீர்களா? சோதித்து பார்த்து எத்தகைய விஷத்தன்மை கலந்திருக்கிறது என்று கண்டறிந்தீர்களா? அதை வைத்து அந்த குளிர்பானத்தை சப்ளை செய்தவர்கள் மற்றும் தயாரித்த நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்விகளை அடுக்க... கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். 

‘சுப்பிரமணி, நீங்க நினைக்கற மாதிரி இல்லை. இந்த பாட்டிலை பிடித்துக் கொடுத்த நீங்களேதான் இதை பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி பரிசோதித்து ரிப்போர்ட் வாங்கி வரவேண்டும்!’ என்றார்கள். ‘நானே பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்க கொண்டு போனால் போலீஸ் ஸ்டேஷனில் எதற்குப் புகார் செய்ய வேண்டும். ஒரு குற்றம் நடந்தால் அது போலீஸுற்குப் புகாராக வந்தால் அதற்கு தடயவியல் வல்லுனர்களை வரவழைத்து சோதனைகளை போலீஸான நீங்கள் நடத்துவீர்களா? புகார்தாரர்கள் தாங்களே முன்சென்று அந்த வல்லுனர்களை அழைத்து வந்து சோதனை செய்து ரிப்போர்ட்களை வாங்கி தருவார்களா?’ என்றெல்லாம் கேட்க, கொஞ்சம் மடங்கினார்கள். அதன்பிறகு என்னுடைய நெருக்குதல், போலீஸ் தீவிர விசாரணையின் காரணமாக திடீரென்று ஒரு நாள் அந்த 7-அப் கம்பெனியின் உள்ளூர் மேனேஜர், சேல்ஸ் மானேஜர், பிராந்திய மேனேஜர் என்று நான்கு பேர் என் வீட்டிற்கே வந்து விட்டார்கள். 
உள்ளே புழு,பூச்ச்சிகள் 
அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் 7-அப் பாட்டில் என்னிடம்தான் இருக் கிறது என்றெண்ணி அதை அபகரிக்கவே திட்ட மிட்டு வந்திருந்தார்கள். என்னிடம் முதலில் நயமாக பேசிப் பார்த்தார்கள். பிறகு பேரம் பேசிப் பார்த்தார்கள். அதன்பிறகு மிரட்டவும் ஆரம் பித்தார்கள். நான் விடவில்லை. அத்தனையையும் மறைத்து வைத்திருக்கும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்துவிட்டேன். தொடர்ந்து, ‘நீங்கள் யார்? உண்மையிலேயே 7-அப் கம்பெனி அலுவலர்கள்தானா? உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்!’ என்று கேட்டேன்.
அவர்கள் ஐ.டி கார்டு கொண்டு வரவில்லை என்றார்கள். நான் விடவில்லை. நீங்கள் வெளியே போய் என்னைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் புகார் செய்வீர்கள்? எதற்காக வந்தார்களென்று எழுதி கொடுக்கச் சொன்னேன். அவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் எழுதித்தர நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
‘அவ்வளவு பெரிய குளிர்பான நிறுவனத்தின் மேலாளர்கள் என சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களிடம் ஒரு லெட்டர் பேடு கூடவா இல்லாமல் வருவீர்கள்? உங்கள் மீதே சந்தேகமாக இருக்கிறது!” என்று கேட்க அவர்கள் வெளிறிப் போனார்கள். தொடர்ந்து போலீஸாரை வரவழைத்து அவர்களை பிடித்துக் கொடுத்தேன். இரவு பன்னிரெண்டு மணி வரை போலீஸ் ஸ்டேஷனில் என்கொயரி. கேரள மாநிலம் கொச்சினிலிருந்தும், வேறு நகரங்களிலிருந்தும் எந்தெந்த வி.ஐ.பிக்களோ அவர்களுக்காக பரிந்து கொண்டு போலீஸாருக்கு போன் செய்தார்கள். போலீஸார், ‘அவங்க அகப்பட்டிருப்பது சுப்பிரமணியத்திடம். அவரிடம் கோக்கு, மாக்கு செய்தால் நாங்களே அகப்பட்டுவிடுவோம். அவராக பார்த்து விட்டால்தான் உண்டு!’ என் முன்னாலேயே பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 

இறுதியில் எப்.ஐ.ஆர். தயார் செய்து, அவர்களை கைது செய்து இரவு நேரத்தில் மாஜிஸ்ட்ரேட் இல்லத்திற்கும் கொண்டு போய் விட்டார்கள். இனி இவர்கள் தப்பிக்க முடியாது என்ற நிலையில்தான் நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். ஆனால்... அடுத்தநாள் போலீஸாரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்ட நால்வரை போலீஸ் ஸ்டேஷன் ஜாமீனிலேயே விட்டுவிட்டோம் என்று சொல்லி அதிர வைத்துவிட்டார்கள். பிறகு என்ன ஏது என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்காக கேரளத்திலிருந்து ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தமிழக அமைச்சர் ஒருவரிடம் பேசி, அந்த அமைச்சர் வேறு சில அமைச்சர்களிடம் பேசி, திருப்பூரிலிருக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு இவர்கள் எல்லாம் சேர்ந்து நெருக்கடி கொடுத்து சிறை வாசல் வரை கொண்டு போகப்பட்டவர்களை சொந்த ஜாமீனில் விடுவிக்க ஏற்பாடு செய்தனராம். 
இருந்தாலும் நான் அந்த வழக்கையும் விடவில்லை. ‘அந்த 7-அப்’ பாட்டிலை போலீஸாரை வைத்தே லேப்புக்கு கொண்டு போக வைத்து, பரிசோதனை ரிப்போர்ட்டை கோர்ட்டில் தாக்கல் செய்ய சொல்லி, அதற்கு உரிய தண்டனையை வாங்கிக்கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் போலீஸார் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தனியார் நிறுவன வில்லங்கத்தில் போலீஸார் விளையாடின விளையாட்டு இப்படி என்றால் அரசு அலுவலர்களே செய்யும் அசட்டையில், அல்லது ஏமாற்று வேலையில் அவர்களுடன் இணைந்து போலீஸ் தரப்பும் எந்த அளவு தில்லாலங்கடி வேலை செய்கிறார்கள் என்று பார்த்தால் அது நம் அத்தனைபேரின் தலையையும் கிர்ரென்று சுற்ற வைக்கும். 


இதுவும்  ஒரு செய்தி 
--------------------------------
BE AWARE OF COCA COLA AND MENTOS

A little boy died in Brazil after eating MENTOS and drinking Coca-Cola / PEPSI together. One year before the same accident happened with another boy in Brazil . Please check the experiment that has been done by mixing Coca-Cola (or Coca-Cola Light) with MENTOS .
So be careful with your self eating MENTOS (POLO's) and drinking COCA-COLA or PEPSI together.

CHECK THIS OUT.....




 



நன்றி:புதிய தரிசனம். 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?