தபால் வங்கி



இந் தியாவின்  அஞ்சல் துறை மிகப்பெரிய அளவில் தனது சேவையை செய்து வருகிறது.
தபால்கள் பட்டுவாடா தவிர அஞ்சலக சேமிப்பு கணக்கு, பொது சேம நல நிதி கணக்கு, வரிச் சலுகை கொண்ட குறித்த கால முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்டவற்றை கையாண்டு வருகிறது.
இன்றைய நிலையில் தனியார் துறையில், கூரியர், மின்னஞ்சல் என பல தரப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகள் வந்து விட்டதால் இந்திய அஞ்சல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேவையில், தனியார் துறையின் போட்டியை சமாளிக்க முடியாத அஞ்சல் துறை, மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட இதர துறைகளுக்கான சேவை கட்டணத்தை வசூலித்துக் கொடுத்து, குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறது.
அப்படியும், அஞ்சல் துறை, தொடர்ந்து இழப்பை கண்டு வருகிறது.
கடந்த 2012ம் நிதியாண்டில், இந்திய அஞ்சல் துறை, 6,346 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது.இந்நிலையில், தனியார் துறையினருக்கு  புதிய வங்கி உரிமம் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள  அஞ்சல் துறையும், வங்கித் துறையில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தபால்துறையுடன் சிறுசேமிப்பு,வைப்புத்தொகைகள்,ஆயுள் காப்பிடூ போன்றவற்றை கையாண்டு வரும் அனுபவம் உள்ளது.
நாடு முழுவதும், 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் வங்கிக் கிளைகளை துவக்கவும் முடிவு செய்துள்ளது.ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமம் பெற்ற பின்னர்"இந்திய அஞ்சலக வங்கி"[ போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா ]என்ற பெயரில் வங்கி துவங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
ஆனால் தனியார் துறையை மட்டுமே வளங்கொழிக்க வைக்கும் மத்திய அரசு  அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு ப.சிதம்பரத்தின்  மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கித் துறையிலும்  கடன்களை கையாளுவதிலும் போதிய அனுபவம் இல்லாத அஞ்சல் துறை, எவ்வாறு திறம்பட வாடிக்கையாளர்களின் வரவு, செலவு கணக்குகளை கையாளும் என்று, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிசேவைகள் துறை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் ஏற்கனவே சேமிப்பு,ஆயுள் காப்பீடு  போன்றவற்றை கையாளும் அஞ்சலகத்துறையி டம் இப்படி கேட்பது தேவையற்றது.
உண்மையிலான காரணம் " நாடு முழுவதும், அஞ்சலக கிளைகளை கொண்டுள்ள அஞ்சல் துறை, தங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுக்கும் என ஒரு சில தனியார் துறை வங்கிகளும் ,வங்கி உரிமம்கோரும் தனியார் நிறுவனங்களும் கொண்டுள்ள பயம்தான் மத்திய அரசை இப்படி கேட்கத்தூண்டியுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, கடந்த 2006ம் ஆண்டு, வங்கித் துறையில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.இதற்காக எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தை ஆய்வுக்காக அமர்த்தியுள்ளது.
 ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை சேர்ந்த அஞ்சல் துறைகள் தற்போது வங்கித்துறையில் உள்ளன.அவைகள் மேற்கொண்டு வரும் வங்கிச் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வருகிறது.
 2011ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில், 1,39,040 அஞ்சலகங்கள், கிராமப்புறங்களில் உள்ளன.
 கிராமப்புறங் களில், ஒரு அஞ்சலகத்தை சராசரியாக 6,000 பேரும், நகரங்களில் 24 ஆயிரம் பேரும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் அஞ்சல் துறையின்  வங்கிச் சேவையால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.
 "அஞ்சல் துறை, வங்கிப் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதில் இடர்பாடு எதுவும் இல்லை.மாறாக துறை வளர்ச்சியுடன்-கிராமப்புற மக்களூக்கு வங்கி சேவை எளிதாக்கப்படும்.' என எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில் 6 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது.
"இது பொதுத் துறையை சேர்ந்த  இந்தியா ஸ்டேட் வங்கியிடம் [SBI] உள்ள டெபாசிட்டில், 50 சதவீதம் என்ற அளவிலும், தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கிடம் உள்ள டெபாசிட்டை விட இரு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது'.
ரிசர்வ் வங்கி கடந்த, 9 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 1ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
 குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட நிறுவனங்கள், வங்கி துவங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா, எல் அண்டு டி, உள்ளிட்ட பல நிறுவனங்கள் வங்கித் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளன.
அவர்களின் பயமும்-எதிர்ப்பும் தான் மத்திய தனியார் அரசு இப்படி அஞ்சல் துறைக்கு முட்டுக்கட்டை போட வைத்துள்ளது.
ஒரு அரசுத்துறை வளர்வதை தடுக்கும் போக்கு உலகிலேயே  இந்தியாவில்,அதுவும் பொருளாதார ப்புலிகள்  மன்மோகன்,சிதம்பரம்,சோனியா கட்சி ஆட்சியில்தான் நடக்கிறது.
எப்படி பார்த்தாலும் இந்திய வளர்ச்சிக்கும்,மக்கள் நலனுக்கும் எதிராகவே காங்கிரசு செயல்படுகிறது.தனியார் வளர்ச்சிதான் அவர்களை பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சியாக உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?