ஊழல்கள் முடிவதில்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசின் ஊழல்கள், நாள்தோறும் வெளிவருவதும், எதிர்கட்சிகள் அது தொடர்பாக பார்லிமென்டில் அமளி செய்வதும், அரசு சப்பைக்கட்டு கட்டுவதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.
பவன் குமார் பன்சால் 
ரயில்வே வாரியத்தில் உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகள், உரிய விலையில், சரியான தொடர்பு மூலமாக விற்பனை செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளளனர்.
ரயில்வேக்கு 63,363 கோடியில் பட்ஜெட் டில் பல பணிகள் நடைபெறும். அப்பணிகளுக்கான காண்ட்ராக்டில் ரயில்வே வாரிய தலைவர் மற்றும் சேர்மன் போன்றோரின் பங்கு மிகவும் முக்கியமாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் பல ஆதாயமடைவார்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பதவிகளுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. பல முக்கிய அதிகாரிகளை புறக்கணித்து, பொது மேலாளர்களை ரயில்வே வாரியத்தில் உறுப்பினர்களாக, ரயில்வே அமைச்சரால் நியமிக்க முடியும் என கூறப்படுகிறது.
 ரயில்வே வாரிய தலைவர் பதவிக்கான போட்டி தான் மிகவும் அதிகாக இருக்கும் என கூறப்படுகிறது.
 ரயில்வே வாரிய உறுப்பினர்களாக, 16 பொது மேலாளர்கள் பதவி உயர்வு மூலம் உறுப்பினர்களாக முடியும் என்றும், இவர்களில் சீனியர் ஒருவர் தான் வாரிய தலைவராக முடியும். ஆனால் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த விதிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
ரயில் பெட்டிகளை விட அதிகமான ஊழல்கள் .

இந்தியாவில் ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் நிர்வகிக்கும் ரயில்வே வாரிய உறுப்பினர் பதவியைப் பெற மகேஷ் குமார் என்ற ஒருவர், ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினருக்கு 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்ற செய்தியும், ரயில்வே வாரியத் தலைவர் பதவியைப் பெற அவர் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசி இருப்பதாகவும் வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து அமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டார். வாரிய உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதெல்லாம் கொசுறு தகவல்.
இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கும் ரயில்வேத்துறை ஊழலின் பின்னணி என்ன ?
இந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விஜய் சிங்லாவின் வளர்ச்சி என்பது மிகவும் அபரிமிதமாக இருந்துள்ளது. அவரது வளர்ச்சியும், அரசியலில் பன்சாலின் வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருந்ததாக தெரியவந்துள்ளது. சண்டிகரின் பதிந்தாவை சேர்ந்த சிங்லா, பல தொழில்களிலும், அரசியல் வட்டாரத்திலும் ஆர்வம் இருந்துள்ளது.
 அவர் வளர்ச்சியடைந்து வந்த நேரத்தில்தான் , பவன்குமார் பன்சாலும் அரசியலில் முன்னேறி வந்தார். ரியல் எஸ்டேட், சிமென்ட், உள்கட்டமைப்பு, இரும்பு உற்பத்தி ஆகிய துறைகளில் விஜய் சிங்லா ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது சுங்லா, ஜேடிஎல் இன்ப்ரா லிமிடெட், ஜெகன் இன்டஸ்ட்ரீஸ், ஹிமானி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், சேதன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஜெகன் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்விஎம் மெட்டல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராடியன் பெரோமெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். முதலில் 1990ம் ஆண்டு ஜெகன் நிறுவனத்தை சிங்லா துவக்கிய போது, பன்சால் தேர்தலில் போட்டியிட தயாராகி வந்தார்.
பின்னர் 1991ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பின்னர் சிங்லா தனது நிறுவனத்தை இந்தியாவின் பல பகுதிகளில் விரிவாக்க துவங்கினார். சிங்லா கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க துவங்கினார்.
தனது நிறுவனங்களில் மேலாளர்களுடன், சிங்லா ஆலோசனை நடத்தும் போது பன்சால் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
சி .பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள ரயில்வே வாரிய உறுப்பினரான மகேஷ் குமார், மின்துறை பிரிவின் உறுப்பினராக நியமிக்க லஞ்சம் கொடுக்கும் போது சிக்கியுள்ளார். இந்த பிரிவில் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் நடைபெறுகிறது. சிக்னல் , மின்சாதனம் மற்றும் தொலைதொடர்பு போன்ற பணிகள் நடக்கும் போது, உறுப்பினரின் முடிவு முக்கியமாக உள்ளது. கடந்த 1975ம் ஆண்டு இந்தியன் ரயில்வே சர்வீசில் சேர்ந்த மகேஷ்குமார், ரயில்வேயில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாகவே மின்துறை பிரிவின் உறுப்பினராக நீண்ட நாட்களாக காத்திருந்துள்ளார்.
 பதவி உயர்வுக்காக பணம் கொடுப்பது என் பது ரயில்வேயில் பலமுறை நடப்பது ஒன்று தான் என்றும், இது புதிதல்ல என்றும், மகேஷ்குமார் மாட்டிக்கொண்டதால், வெளியில் வந்துள்ளது என்றும் கூறினார்.
சிங்லாவின் இல்லத்தில் சி.பி.ஐ., போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர் . இது குறித்து தகவலறிந்த குடும்ப உறுப்பினர்கள் சிலர், சோதனைக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் பணம் மற்றும் ஆவணங்களை மறைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே 2ஜி ,நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை அறிக்கை தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ரயில்வே அமைச்சரின் உறவினரான விஜய் சிங்லா லஞ்சம் வாங்கிய விவகாரம் மன்மோகன் சிங் அரசுக்கு தலைவலி ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியான உடன் பன்சால் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர் க்கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் வரிசையில்  பன்சால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பியுள்ளன.
அமைச்சர்கள்                   பவன்குமார் பன்சால்,     அஸ்வினி குமார் ஆகியோர் ராஜினாமா செய்யமாட்டார்கள் என மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
 பிரதமர் பன்சால் பதவி விலக தேவை இல்லை.பதவி விலக மாட்டார் என்றகிறார்.
அப்படி அவர் பதவி விலகினால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து தான்,ப.சி, உட்பட காங்கிரசின் பல அமைச்சர்கள் பதவி விலக வேண்டியிருக்கும் கட்டாயம் உண்டாகி விடும் என்று அவருக்கு தெரியாதா ஏன்ன?



 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?