ஸ்டெர்லைட் : அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

இதையடுத்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு தடை விதித்து ஸ்டெர்லைட் ஆலை இயக்க அனுமதி அளித்தது.


இதைத் தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை தொடங்கலாம் என்று அனுமதி அளித்தது.
suran
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

"கல்வித்திறனில் மரபணுக்களின் தாக்கம்"

ஒரு பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறது என்பதில் அதனது மரபணுக்கள் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

suran
5000 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு அவர்களது கல்வித் திறமைக்கும் அவர்களது சமூகப் பின்னணிக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
அதன் பின்னர் அவர்களது மரபணுக்கள் எந்த அளவுக்கு அவர்களது கல்வித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட சிறப்பாக படிக்கிறார்களா என்று ஆராயப்பட்டது.
7,9 மற்றும் 11வது வகுப்புக்களில் நடத்தப்படும் ஒரு திறனறியும் பரீட்சைகளில் குழந்தைகள் பெறும் பெறுபேறுகள் இதற்காக கணிக்கப்பட்டன.
தொழிர்சார் அந்தஸ்தில் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சராசரியாக 100 க்கு 60 புள்ளிகளை இதற்கான பரீட்சைகளில் பெற, பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் 42 புள்ளிகளைப் பெற்றன. இந்த இரு தரப்புக்கும் இடையிலான வித்தியாசம் 18 புள்ளிகளாகும்.
இந்த 18 புள்ளி வித்தியாசத்தை ஏற்படுத்துவதில் அந்தக் குழந்தைகளின் மரபணுக்கள் எந்த அளவு பங்களிப்பை செய்கின்றன என்று அதன் பின்னர் ஆராயப்பட்டது.
கல்வியறிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்று வகையான மரபணுக்களில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த 18 புள்ளி வித்தியாசத்தை ஏற்படுத்துவதில் மரபணுக்கள் வெறுமனே 2 வீத தாக்கத்தை மாத்திரமே ஏற்படுத்தியதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த விடயத்தில் மரபணுக்களுக்கு முழுமையான, காத்திரமான பங்களிப்பு இருப்பதாக தாம் முன்னைய ஆய்வு முடிவுகளில் இருந்து கருதியதாகவும், ஆனால், தற்போதைய முடிவு அதற்கு முரணாக இருப்பதாகவும் டாக்டர் ஜோண் ஜெரிம் கூறுகிறார்.
முன்னதாக இரட்டையர்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் போது, குழந்தைகளின் கல்வித்திறனில் உள்ள வித்தியாசத்துக்கு 75 வீதமான காரணமாக அவர்களது மரபணுக்கள் திகழ்ந்ததாக கண்டறியப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு அதற்கு மாறாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த மரபணுக்கள் ஏற்படுத்துகின்ற வித்தியாசம் மிகவும் குறைவானதாகும். இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 3 மரபணுக்களில் மாத்திரம் இந்த ஆய்வு செய்யப்பட்டதால் இந்த வித்தியாசம் குறைவானதாக காணப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால், கல்வியறிவு தொடர்பில் மேலும் பல நூற்றுக்கணக்கான மரபணுக்கள் தொடர்புபட்டவையாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ஆகவே எதிர்கால ஆய்வுகளின்போது மரபணுக்கள் கல்வித்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன் என்ற கருத்து குறித்து சமூக ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

"வெற்றி பெறுவோம்'
 
 படைத் தளபதி  மிகவும் திறமையான புத்திசாலி.
ஒரு சமயம்  எதிரியின் மீது படையெடுத்துச் சென்றார்.
எதிரியின் படைபலத்தைக் கண்ட இவரது படை வீரர்கள், நம்பிக்கை இழந்தனர்.
"ஜெயிக்க முடியுமா?' என்ற சந்தேகம் வந்துவிட்டது. பயம் அவர்களைப் பீடித்துக் கொண்டது.
மெதுவாகத் தயங்கித் தயங்கி  சென்று, ""நாம் ஜெயிக்க முடியுமா? எதிரியின் படைக்கு முன்பாக நாம் எம்மாத்திரம்?'' என்று கேட்டனர்.
தளபதி யோசித்தார்.
இந்த நேரத்தில் நாம் என்ன சொல்லி தேற்றினாலும் இவர்களது பயம் போகாது என்பதை புரிந்து கொண்டார்.
பிறகு அவர்களைப் பார்த்து, ""சரி... அதை நாம் முடிவு செய்ய வேண்டாம்.
கோவிலுக்குப் போய் பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் வெற்றி பெறுவோம்; பூ விழுந்தால் போர் வேண்டாம்; திரும்பி விடுவோம். சரியா?'' என்றார்.
எல்லாரும் ஒத்துக் கொண்டனர். கோவிலுக்குச் சென்றனர். ஒரு காசை எடுத்துச் சுண்டினார் தளபதி .
அனைவரும் ஆவலோடு குனிந்து பார்த்தனர்.
 தலை விழுந்திருந்தது.
எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி... ஆரவாரம்.
"வெற்றி பெறுவோம்' என்று சொல்லிவிட்டார். இனி என்ன கவலை என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் போரிட்டனர்... வெற்றி பெற்றனர்.
வெற்றி விழா நடந்தது-
""நமது வெற்றியை கடவுள் நிர்ணயித்து விட்டான். அதனால், நாம் வெற்றி பெற்றோம்!'' என்று எல்லாரும் பெருமையாகப் பேசிக் கொண்டனர்.
அப்போது, தளபதி , மெல்லச் சிரித்துக் கொண்டே, தன் கையிலுள்ள நாணயத்தை அவர்களிடம் கொடுத்தார். எல்லாரும் ஆவலோடு வாங்கிப் பார்த்தனர்.
அந்த நாணயத்தில், இரண்டு பக்கமும் தலை  தான் இருந்தது.

""வெற்றியை நிர்ணயித்தது கடவுளல்ல. உங்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்த நம்பிக்கையும், மன உறுதியும்தான்.
 தலை விழுந்தால் வெல்வோம் என்று நம்பினீர்கள், செயல்பட்டீர்கள், வென்றீர்கள்!''
-என்றார் தளபதி.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?