தேங்காய்

  எண்ணெய் ,

மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும். 

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். 

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். 
அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.
வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.
புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.
உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் .
தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம்.
 நல்ல பலனை அளிக்கும்.
தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். 
இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.
சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கு வங்கத்தில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மம்தா பானர்ஜி  போராட்டக்காரர்களால் அமைதி இழந்தார்.
பராசத்தில் 20 வயது பெண் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மதியம் பராசத் சென்று, அவர்களது குடும்பத்தாரை சந்தித்தார்.
அப்போது  அங்கு திரண்ட ஏராளமான போராட்டக்காரர்கள், கோஷம் எழுப்பியதால், மம்தா பானர்ஜி அமைதி இழந்தார்.
மம்தாவை வெளியே வந்து காரில் ஏற விடாத அளவுக்கு போராட்டக்காரர்கள் இடையூறு செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனால், அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------
கறுப்பு
"புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு' என்ற அமைப்பு, சமீபத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், "இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் என, 500க்கும் மேற்பட்டோர், வரிச்சலுகை தரும், சிங்கப்பூர் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில், வங்கிக் கணக்கு துவக்கி, தங்களின் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
suran
இந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் எல்லாம், டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை, ஐதராபாத், புனே, ஆமதாபாத், பரோடா, சூரத், சண்டிகார் மற்றும் பல இந்திய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகத்தின் வரி மற்றும் வரி ஆய்வுப் பிரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக அளவில் வரிச் சலுகை தரும் நாடுகளான, சிங்கப்பூர், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, கேமேன் தீவு, குக்ஸ் தீவுகள், சமாவோ தீவு உட்பட, சில நாடுகளை அணுகி உள்ளது.அந்த நாடுகளில், வங்கிக் கணக்கு வைத்துள்ள, இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பற்றிய தகவல்களையும், அவர்களின் பணப்பரிமாற்ற விவரங்களையும் தரும்படி கோரியுள்ளது.
வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட, சில தகவல்களை பரிமாறிக் கொள்ள, ஒரு சில நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதால், அந்த நாடுகளிடம், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், விவரங்களைத் தரும்படி, மத்திய அரசு கேட்டு உள்ளது. மற்ற நாடுகளை தூதரக ரீதியாக அணுகி உள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து விவரங்களைப் பெற்றவுடன், அவற்றில் எதுவும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது கண்டறியப்பட்டு, அதனடிப்படையில், மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, நிதி அமைச்சக உயர் அதிகாரி  கூறினார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?