ஏமாந்த சதாம் உசேன் .

சதாம் உசேன் அமெரிக்காவின் பிடியில் படுகொலை ஆன கதை நம்மை உலுக்கியது தெரியும் இது வேறு  சதாம் உசேன் .
மின்னஞ்சலில்  வந்த தகவலை நம்பி ரூ.1.39 லட்சத்தை பறி கொடுத்தார் திருப்பத்தூர் இன்ஜினியர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்தவர் சதாம் உசேன். பி.இ முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார்.
suran
 இந்நிலையில் சதாம் உசேனின் இமெயில் முகவரிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், நாங்கள் குறிப்பிடும் வங்கியில் நீங்கள் 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.4.50 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் இதுகுறித்த மேல் விவரம் அறிய ஒரு செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து கடந்த 9, 10ம் தேதிகளில் இமெயிலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட சதாம் உசேன், பணம் செலுத்த வேண்டிய விவரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண், தான் குறிப்பிடும் வங்கிகளில் பணம் செலுத்தினால் பெரிய நிறுவனங்கள் மூலம் உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய சதாம் உசேன்தனக்கு ரூ.4 கோடி கிடைக்க உள்ளதாக இமெயில் வந்துள்ளது என தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சதாம் உசேனின் தாய் பல்வேறு இடங்களில் ரூ.1.40 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து 11ம் தேதியன்று குறிப்பிட்ட செல்போன் நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்ட சதாம் உசேன், எந்தெந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தவேண்டும் என கேட்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய பெண், பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வங்கியில் ரூ.21 ஆயிரமும், உ.பி.மாநிலம் லாக்கர் பூர்கேரியிலுள்ள மற்றொரு தனியார் வங்கியில் டோஸ் முகமது என்ற பெயருக்கு ஸீ90 ஆயிரத்து 214ம், டெல்லி மால்வியா நகர் சீர்ஜி பகுதி வங்கியில் வினோத் சர்மா என்ற பெயருக்கு ரூ.28 ஆயிரமும் டெபாசிட் செய்யும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து மேற்கண்ட 3 வங்கிகளிலும் திருப்பத்தூரில் இருந்தபடி மொத்தம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 214ஐ சதாம் உசேன் டெபாசிட் செய்துள்ளார்.
suran
பின்னர் சதாம் உசேனை தொடர்புகொண்ட அந்த பெண், மேற்கண்ட தொகையை பண பரிமாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளார்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறிவிட்டார்.அதன் பின்னர் அந்த தொலை பேசியிலும் , மின்னஞ்சலிலும்  தொடர்பு கொண்ட போது யாரும் இவரிடம் பேச வில்லை.வங்கியில் சென்று அவர் போட்ட பணத்தை கணக்கு பார்த்த போது அவை அனைத்தும் எடுக்கப்பட்டு இருந்ததாம்.
இது போன்ற மின்னஞ்சல் ,குறுஞ்செய்தி ,தொலை பேசி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்கும் படி காவல்துறையும், ஊ டகங்களும் எத்தனை முறை செய்தி வெளியிட்டாலும் மக்கள் திருந்துவதாக தெரியவில்லை .ஒரு பொறியியல் பட்டதாரியே இப்படி சிந்தனை இல்லாமல் ஏமாந்தால் பாமர மக்களை என்ன சொல்லுவது?
இன்னமும் போலி நீதி நீறுவனங்க்களை சீட்டு பிடிப்பவர்களை நம்புவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் இருக்கும் வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Click Here
குற்றவாளி  :  எம்.பி.,    எம்.எல்.ஏ.,

இரண்டு ஆண்டு தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம்.ஜூலை 10ம் தேதி  தீர்ப்பு வழங்கியது. மக்களிடம் இந்த தீர்ப்பு மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகளை இத்தீர்ப்பு அதிர்ச்சி அடைய வைக்க காரணம் பெரும்பாலான கட்சிகளின் எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள்,  குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்பது தான்.
suran
யாரெல்லாம் அப்படி ?

2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 545 எம்.பி.,க்களில் 450 பேர் மீது வழக்குகள் உள்ளன.
இதில், 150 பேர் மீது ஒரு வழக்கு மட்டும் உள்ளது. 56 பேர் மீது ஐந்த அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அதாவது 35 சதவீத உறுப்பினர்களின் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.
எம்.பி.,க்கள் மீதுள்ள மொத்த வழக்குகளில் 30 சதவீதம், நிலுவையில் உள்ளன. 14 சதவீத வழக்குகள், கடுமையான குற்றங்களின் கீழ் பதியப்பட்டுள்ளன.கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, மிரட்டல், ஏமாற்றுதல், நிதி மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன.எம்.பி.,க்கள் இப்படியிருக்க, இவர்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை புள்ளிவி பரம் காட்டுகிறது.
suran
இந்தியாவில் மொத்தமுள்ள 4,032 எம்.எல்.ஏ.,க்களில் 1,258 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள். அதாவது 31 சதவீதம்.
இதில் 15 சதவீதம் பேர் மீது கடுமையான குற்றங்களின் கீழ் வழக்குகள் உள்ளன.

அரசியல் கட்சிகளில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 118 (12 சதவீதம்) பேர் மீது வழக்குகள் உள்ளன. காங்., எம்.எல்.ஏ.,க்கள் 107 (8 சதவீதம்) பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குற்றப் பின்னணி இல்லாத எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கட்சிகளே இல்லை.
மிசோரம் மாநில எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது மட்டுமே வழக்குகள் இல்லை.
அதற்காக இவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்று சொல்ல இயலாது.இவர்கள் மீது வழக்குகள் பதியப்படாமல் இருக்கலாம்.
அரசியல் போராட்டங்கள் தொடர்பான வழக்குகள்,ஆளுங்கட்சி போடும் காழ்ப்புணர்ச்சி வழக்குகள்,பொய் வழக்குகள்,போன்றவற்றை இந்த வழக்குகள் கணக்கில் இருந்து கழிக்க வேண்டும் .
மற்ற நாடுகளில் குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவது பற்றி:
suran
 இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஏதேனும் ஒரு குற்றப் பிரிவில், காலவரையற்ற காவல் அல்லது ஓராண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றால், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் கனடாதேர்தலில் போட்டியிட தடை.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஓராண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றிருந்தாலோஆஸ்திரேலியா தேர்தலில் போட்டியிட தடை.

கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது குறைந்த பட்சம் ஓராண்டு சிறை தண்டனை பெற்றாலோ ஜெர்மனி தேர்தலில் போட்டியிட தடை


ஆனால் இந்தியாவில் மற்றும்தான் பப்பு யாதவ்,ராஜ் பையா,பூலான் தேவி போன்ற குற்ற செயல்களை தொழிலாகக் கொண்ட -கொலை குற்றவாளிகள் சிறையில் இருந்தே போட்டியிட்டு வெற்றியும் பெற முடியுமந்த அளவுக்கு நம் மக்கள் நல்லவங்களா?அல்லது பயங்க்கொள் ளிகளா ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?